Tag Archives: கமல்ஹாசன்

என்ன வேணா கேளுங்க..! – ரசிகர்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கடந்த சில நாட்களாக திரையுலகில் துவங்கி, சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக விக்ரம் திரைப்படம் உள்ளது.

பெரிய ஹீரோக்களை கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தில் ரிஸ்க் அதிகம். படம் ஓடவில்லை என்றால் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் நான்கே நாட்களில் 150 கோடிக்கு ஓடி பெரும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்துள்ளது விக்ரம் திரைப்படம்.

படத்தின் வெற்றியை கண்டு குதுகலமான உலகநாயகன் பட குழுவினருக்கு பரிசுகளாக வாங்கி அளித்து வருகிறார். இந்நிலையில் படம் தொடர்பான விஷயங்களை இன்னும் சுவாரஸ்யமாக்க லோகேஷ் கனகராஜ் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

திரைப்படம் குறித்து எந்த கேள்வியானாலும் தன்னிடம் கேட்கலாம் என கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர் #Askdirlokesh என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி தன்னிடம் விக்ரம் குறித்து கேள்வி கேட்கலாம். என கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் விக்ரம் திரைப்படம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

டிவிட்டரில் லோகேஷ் பதிவிட்ட வீடியோவை காண க்ளிக் செய்யவும்.

சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல் –  ரோலக்ஸ்கே ரோலக்ஸ் வாட்ச்சா..!

நடிகர் கமல்ஹாசன் நடித்து , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் வெளியான திரைப்படம் விக்ரம். படம் அதிரிபுதிரியான ஓட்டத்தை கண்டுள்ளது. நான் நினைத்ததை விடவும் படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என கமல் கூறியிருந்தார்.

ஏனெனில் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசன்தான் உள்ளார். எனவே படத்தின் வெற்றியால் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் அளிக்க நினைத்தார். எனவே படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நேற்று லோகேஷ் கனகராஜ்க்கு கார் ஒன்றை பரிசளித்தார் கமல். மேலும் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் டிவி.எஸ் அப்பாச்சி பைக் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று விக்ரம் படத்தில் சிறப்பு கதாபாத்திரமாக தோன்றிய நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச்சை வாங்கி பரிசாக அளித்துள்ளார் கமல். அந்த வாட்சின் விலை கிட்டத்தட்ட 25 லட்சம் அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் படத்தை பார்த்ததற்காக ஆண்டவர் நமக்கும் கூட பரிசுகள் கொடுப்பாரோ என ரசிகர்கள் நகைச்சுவை செய்து வருகின்றனர்.

அமெரிக்காவிலும் ப்ளாக் பஸ்டர் அடிக்கும் விக்ரம் – வசூல் எவ்வளவு தெரியுமா?

தற்சமயம் திரையரங்குகளில் ஓடி வரும் விக்ரம் திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது.

ஏற்கனவே தென்னிந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பலவும் உலக அளவில் வெற்றி பெற்று வருகின்றன. 

தென்னிந்திய படங்களில் ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2, புஷ்பா ஆகிய படங்கள் உலக அளவில் ஹிட் கொடுத்த படங்களாக உள்ளன. ஆனாலும் கூட தமிழ் திரைப்படத்தில் இருந்து எந்த படமும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்பது ஒரு குறையாக இருந்தது.

அநேகமாக அந்த குறையை விக்ரம் திரைப்படம் பூர்த்தி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவிலும் கூட விக்ரம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு படம் ஓடியுள்ளது. பொதுவாகவே ஹாலிவுட் மக்களுக்கு ஆக்‌ஷன் படங்கள் மீது அதிக ஆர்வம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகநாயகனிடம் பரிசு பெற்ற லோகேஷ் – என்ன பரிசு தெரியுமா?

கடந்த ஜூன் 3 அன்று கமல் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் விக்ரம், இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய வில்லனாக வருவதாக கூறியிருந்ததால் படத்திற்கு மக்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்ப்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருந்தது.

மூன்றே நாட்களில் படம் உலக அளவில் 150 கோடி வசூல் சாதனை செய்தது. இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் கமல். 

இந்நிலையில் படத்தை ஹிட் படமாக அமைத்து கொடுத்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு காரை பரிசளித்துள்ளார் நடிகர் கமல். 

ஏனெனில் இந்த படம் கமலின் தயாரிப்பில் உருவான படமாகும். இப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை இந்த படம் பெறுவதற்கு காரணமான இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருப்பதால் இந்த பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது.

என் தம்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி – வீடியோ வெளியிட்ட உலகநாயகன் 

கடந்த ஜூன் 3 அன்று கமல் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் விக்ரம், இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. 

இந்த படம் பழைய திரைப்படமான விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் பாகம் நடிகர் சூர்யாவை வைத்து தொடரும். அதில் முக்கிய நாயகர்களாக கமல் மற்றும் கார்த்தி இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. 

படம் வெளியான பிறகு படம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் கமல். அந்த வீடியோவில் நல்ல நடிகர்களையும், நல்ல கதையையும் கொண்டாடுவதற்கு மக்கள் மறப்பது இல்லை என கூறினார்.

தனது தம்பி சூர்யா தனக்காக வந்து இறுதி காட்சியை நடித்து கொடுத்தார் அதற்காக நன்றி என கூறினார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் நன்றி தெரிவித்தார்.

தற்சமயம் இந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 வீடியோவை காண க்ளிக் செய்யவும்

மூன்றே நாளில் இவ்வளவு வசூலா? – தமிழில் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் விக்ரம்

தமிழில் வெளியாகி தற்சமயம் நல்லப்படியான வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர் கமலின் தீவிர ரசிகராவார். மேலும் படத்தில் பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது. வெகு நாட்களுக்கு பிறகு கமல் நடிக்கும் படம் என்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.

தென்னிந்தியாவில் அதிகமான படங்கள் பேன் இந்தியாவில் வெளியாகி பாக் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்து கொண்டுள்ளது. தற்சமயம் அந்த வரிசையில் விக்ரம் திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. வெளியான 3 நாளிலேயே உலக அளவில் 150 கோடிக்கும், இந்திய அளவில் 100 கோடிக்கும் ஓடியுள்ளது விக்ரம்.

இதனால் கமல் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜ், கமல் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது.

மலையாள உலகை தளபதியிடம் இருந்து பிடிங்கிய கமல் –  விக்ரம் படத்தின் சாதனை

கேரளாவை பொருத்தவரை மலையாள சினிமாவை போலவே அங்கு தமிழ் சினிமாவிற்கும் எப்போதும் ஆதரவு உண்டு. மலையாள சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா மீதும் ஈடுபாடு கொண்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம். 

மேலும் தென்னிந்திய சினிமாவில், தமிழ் சினிமா துறை முக்கியமான துறையாக உள்ளது. 

மலையாள சினிமாவில் தளபதி விஜய்க்கு எப்போதுமே மவுசு உண்டு. அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் கேரளாவில் உண்டு. எப்போதும் தளபதி படம் ஒரு குறிப்பிட்ட வசூலை மலையாளத்தில் கொடுக்கும். மற்ற தமிழ் நடிகர்கள் திரைப்படங்கள் எதுவும் அந்த அளவு மலையாளத்தில் ஓடுவதில்லை.

இந்த நிலையில் 3 ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வெளியான முதல் நாளே கேரளாவில் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இதுவரை தளபதி படமே இந்த அளவிலான வசூலை அளித்தது இல்லையாம். வெகுநாட்களுக்கு பிறகு சினிமாவிற்கு வந்து இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கிறார் உலக நாயகன் என ரசிக வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

உலக நாயகனின் உலக வெற்றி – விக்ரம் படத்திற்கு நியுயார்க்கில் அளித்த மரியாதை

வெகுநாட்களுக்கு பிறகு உலக நாயகன் கமல் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்ததாலும், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் போன்ற நடிகர்கள் நடித்திருந்ததாலும் படத்திற்கு மக்களிடையே எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் படம் நேற்று வெளியானது. பலரும் திரைப்படத்தை ரசித்து பார்த்துள்ளனர். அதிகமாக நேர்மறையான விமர்சனங்களே வந்தன. மேலும் உலகம் முழுவதும் பல நாடுகளில் விக்ரம் திரைப்படத்தை விரும்பி பார்த்து வருகின்றனர்.

அமெரிக்காவில், நியுயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயர் என்னும் இடம் முக்கியமானது. முக்கியமான ஹாலிவுட் திரைப்படங்களின் ட்ரெய்லர், போஸ்டர்கள் அங்கு திரையிடப்படும். அந்த இடத்தில் விக்ரம் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதே போல உலகின் மிகவும் உயரமான கட்டிடமாக துபாயில் உள்ள ப்ருஜ் கலீஃபா கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்திலும் விக்ரம் திரைப்பட டீசர் திரையிடப்பட்டுள்ளது.

எனவே இதை வைத்து விக்ரம் திரைப்படம் உலக அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என தெரிகிறது.

விக்ரம் ப்ருஜ் கலிபா துபாய் வீடியோவை பார்க்க க்ளிக் செய்யவும்