Tag Archives: கேப்டன் பிரபாகரன்

இனிமே அந்த இயக்குனரை உள்ளே விட்ராதீங்க!.. புலன் விசாரனை படத்தின்போது இயக்குனருக்கு நடந்த சோகம்!.

Vijayakanth Movies : தமிழ் சினிமாவில் விஜயகாந்த்தை வைத்து பெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர் கே செல்வமணி. ஆர் கே செல்வமணி ஒரு இயக்குனராக அறிமுகமானது விஜயகாந்தின் திரைப்படங்களின் மூலம்தான், அப்போதெல்லாம் சினிமா கல்லூரியில் படிக்கும் பலருக்கும் வாய்ப்பு அளித்து வந்தார் விஜயகாந்த்.

அந்த வகையில் ஆர்.கே செல்வமணி புலன் விசாரணை திரைப்படத்தின் கதையை கொண்டு வந்து ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தார் அதனை படித்த உடனே அந்த கதை அவர்களுக்கு பிடித்து விட்டது. அதை படமாக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த படத்திற்கான படப்பிடிப்பு காலம் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  அப்போதெல்லாம் விஜயகாந்த் திரைப்படத்தைப் பொறுத்தவரை 30 அல்லது 35 நாட்களில் மொத்த படப்பிடிப்பை முடித்துவிடுவார்கள்.

ஆனால் இந்த திரைப்படம் அதையும் தாண்டி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் விஜயகாந்த்திற்கு இது நெருடலான சங்கதியாக தெரியவே அவர் இது குறித்து ஒரு ராவத்திரிடம் சென்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து குறைந்த பிலிம் ரோலை வைத்து படப்பிடிப்பை முடிக்குமாறு ராவுத்தர் ஆர்.கே செல்வமணிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்.

captain-prabhakaran

மேலும் அந்த தயாரிப்பாளர் பக்கத்தில் இருந்து அவருக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்றும் முடிவு செய்தனர். ஒரு வழியாக புலன் விசாரணை திரைப்படம் முழுமையாக எடுக்கப்பட்டது.ஆனால் அந்த படம் ஓடும் என்று ராவுத்தருக்கு நம்பிக்கையே இல்லை.

மேலும் இனி ஆர்.கே செல்வமணிக்கு எந்த ஒரு படத்திற்கும் வாய்ப்பே கொடுத்து விடக்கூடாது என்றும் உறுதியாக இருந்தார். ஏனெனில் அந்த அளவிற்கு அதிகமான பணம் இந்த படத்தில் செலவாகி இருந்தது. ஆனால் புலன் விசாரணை திரைப்படம் வெளியான பிறகு இவர்களின் அனைத்து மனநிலையையும் உடைத்து போட்டு விட்டது புலன் விசாரணை.

மொத்த தமிழ்நாட்டிலும் பெரும் வசூலை கொடுத்தது புலன் விசாரணை அதனை அடுத்து ஆர்.கே செல்வமணியை நேரில் சென்று சந்தித்த ராவுத்தர் விஜயகாந்தின் நூறாவது திரைப்படத்தை நீதான் இயக்க வேண்டும். என்ன மாதிரியான ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறாய் என்று கூறி வாழ்த்தியிருக்கிறார் அதனை தொடர்ந்து தான் விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் ஆன கேப்டன் பிரபாகரன் உருவானது.

நடக்க போவதை முன்பே காட்டிய திரைப்படம்!.. கேப்டன் பிரபகாரன் படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம்!..

Vijayakanth: விஜயகாந்த் நடிப்பில் தமிழில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் அவரால் முடிந்தவரை பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர்.

ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றி படங்கள் கொடுத்த அதே காலக்கட்டத்தில்தான் அவர் வானத்தப்போல மாதிரியான திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விஜயகாந்த் நடிக்கும் போலீஸ் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

இதனையடுத்து விஜயகாந்த் தொடர்ந்து போலீசாக நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கியிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பெரும் அலையை கிளப்பிய படமாக கேப்டன் பிரபாகரன் இருந்தது.

இந்த படத்தின் காரணமாகதான் இவருக்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வந்ததாகவும் பலர் கூறுவதுண்டு. இந்த படத்தில் வில்லன் மன்சூர் அலிக்கான் கதாபாத்திரம் கிட்டத்தட்ட சந்தன கடத்தல் வீரப்பனை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருந்தது.

சந்தன கடத்தல் வீரப்பன் செய்த பல விஷயங்கள் இந்த படத்தில் இருந்தது. அதில் வியப்பான ஒரு விஷயமும் இருந்தது. அது என்னவென்றால் சந்தனக்கடத்தல் வீரப்பன் 22 போலீஸாரை கொன்றது பலருக்கும் தெரியும். அந்த காட்சி கேப்டன் பிரபாகரன் படத்திலும் இருந்தது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகும்போது அந்த சம்பவமே நடக்கவில்லை. ஆம் கேப்டன் பிரபாகரன் படம் வெளியானது 1991 ஆம் ஆண்டில், ஆனால் குறிப்பிட்ட சம்பவம் நடந்தது 1993 இல், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் காட்டப்பட்ட பிறகுதான் வீரப்பன் அதை செய்திருக்கிறார்.