Tag Archives: வீரப்பன்

நடக்க போவதை முன்பே காட்டிய திரைப்படம்!.. கேப்டன் பிரபகாரன் படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம்!..

Vijayakanth: விஜயகாந்த் நடிப்பில் தமிழில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் அவரால் முடிந்தவரை பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர்.

ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றி படங்கள் கொடுத்த அதே காலக்கட்டத்தில்தான் அவர் வானத்தப்போல மாதிரியான திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விஜயகாந்த் நடிக்கும் போலீஸ் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

இதனையடுத்து விஜயகாந்த் தொடர்ந்து போலீசாக நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கியிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பெரும் அலையை கிளப்பிய படமாக கேப்டன் பிரபாகரன் இருந்தது.

இந்த படத்தின் காரணமாகதான் இவருக்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வந்ததாகவும் பலர் கூறுவதுண்டு. இந்த படத்தில் வில்லன் மன்சூர் அலிக்கான் கதாபாத்திரம் கிட்டத்தட்ட சந்தன கடத்தல் வீரப்பனை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருந்தது.

சந்தன கடத்தல் வீரப்பன் செய்த பல விஷயங்கள் இந்த படத்தில் இருந்தது. அதில் வியப்பான ஒரு விஷயமும் இருந்தது. அது என்னவென்றால் சந்தனக்கடத்தல் வீரப்பன் 22 போலீஸாரை கொன்றது பலருக்கும் தெரியும். அந்த காட்சி கேப்டன் பிரபாகரன் படத்திலும் இருந்தது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகும்போது அந்த சம்பவமே நடக்கவில்லை. ஆம் கேப்டன் பிரபாகரன் படம் வெளியானது 1991 ஆம் ஆண்டில், ஆனால் குறிப்பிட்ட சம்பவம் நடந்தது 1993 இல், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் காட்டப்பட்ட பிறகுதான் வீரப்பன் அதை செய்திருக்கிறார்.

Rajinikanth : ஐயா ரஜினிகாந்த் அவர்களே உங்களுக்கு நான் பேசுறேன்!.. ரஜினி குறித்து பேசிய வீரப்பன்…

Rajinikanth and veerappan : தமிழ்நாட்டில் மக்களால் மிகப்பெரும் போராளியாகவும், அரசால் மிகப்பெரும் தீவிரவாதியாகவும் பார்க்கப்பட்ட நபர்களில் வீரப்பன் முக்கியமானவர். சத்தியமங்கலம் காடுகளில் ஆரம்பத்தில் யானைகளை கொன்று தந்தங்களை கடத்தி வந்த வீரப்பன். அதன் பிறகு தொடர்ந்து சந்தன கட்டைகளை கடத்த துவங்கினார்.

இதற்காக அரசு பெரும் செலவு செய்து அவரை பிடித்து கொன்றது. ஆனால் இறுதி வரை காட்டுக்குள் வைத்து வீரப்பனை பிடிக்கவே முடியவில்லை என்பது தனி செய்தி. காட்டுக்குள்ளேயே இருந்து வந்தாலும் கூட தொடர்ந்து வெளி உலக செய்திகளை வீரப்பன் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

முக்கியமாக தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் விவகாரங்கள் குறித்து எப்போதும் அப்டேட்டாக இருந்துள்ளார் வீரப்பன். வீரப்பன் குறித்து தற்சமயம் ஜீ5 நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் வீரப்பனை நேரில் சென்று பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் எடுத்த வீடியோக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

veerappan

அதில் அரசு செய்த பல குற்றங்களை வீரப்பன் கூறியுள்ளார். அப்போதைய காலக்கட்டத்தில் அடுத்து யார் முதல்வராகலாம் என வீரப்பன் கூறும்போது கருணாநிதி, வைக்கோ,ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி இவர்களில் யாரை வேண்டுமானாலும் முதல்வராக்கலாம். ஆனால் ஜெயலலிதாவை ஆக்க கூடாது. அவரால்தான் என் ஊர் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்கிறார் வீரப்பன்.

மேலும் அவர் கூறும்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும். எம்.ஜி.ஆருக்கு பிறகு நல்ல மனது கொண்ட நபராக ரஜினிகாந்த் இருக்கிறார். அவருக்கு நிறைய தெய்வ பக்தியும் இருக்கிறது என கூறியவர் ரஜினிக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார். உனக்கு நிறைய மக்கள் செல்வாக்கு இருப்பதால் கட்சிகள் உன்னை பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றன.

நீ தேர்தலுக்கு வருவதாக இருந்தால் தனியாக கட்சி ஆரம்பித்து போட்டியிடு. யாரையும் கூட சேர்த்துக்கொள்ளாதே என அறிவுரை வழங்கியுள்ளார் வீரப்பன். ஏனெனில் அப்போதைய காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் கட்சி துவங்கலாமென்ற முடிவில் இருந்து வந்தார். அவர் அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

விடுதலை திரைப்படம் வீரப்பனின் கதைதான்… குறிப்புகளை சரியாக கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!.

Director vetrimaaran: தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் விடுதலை. பொதுவாகவே வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு பெரும் விஷயத்தை பேசக்கூடியதாக இருக்கும்.

உதாரணமாக ஆடுகளம் திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை சேவல் சண்டை குறித்து நாம் காணாத உலகை அவர் காட்டியிருப்பார். இந்த நிலையில் விடுதலை கதை ஒரு கற்பனை கதையே என போட்டுதான் அந்த படத்தை ஆரம்பித்திருந்தார் வெற்றிமாறன்.

ஆனால் அந்த திரைப்படம் குறித்து பல சர்ச்சைகள் அப்போதே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்சமயம் வீரப்பன் குறித்து வரும் ஆவணப்படங்களை பார்க்கும்போது விடுதலை முழுக்க முழுக்க வீரப்பனின் கதையை கொண்டு எடுக்கப்பட்டதே என கூறுகின்றனர் ரசிகர்கள்.

Soori in a still from ‘Viduthalai’

விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதியை பிடிப்பதற்காக வதை முகாம்களை அமைத்து அதில் அந்த கிராம மக்களை வதைத்து கொண்டிருப்பார்கள். அதை போலவே வீரப்பனை பிடிக்க வந்த போலீஸ் குழு பல இடங்களில் வதை முகாம்கள் அமைத்து அதில் மக்களை கொடுமைப்படுத்தி இருக்கின்றனர்.

ஒருமுறை காவலரால் கோபமான வீரப்பன் ஒரு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அங்குள்ள காவலர்களை கொலை செய்திருக்கிறார். கிட்டத்தட்ட அதே காட்சி இந்த விடுதலை திரைப்படத்திலும் இருக்கிறது. தமிழக வரலாற்றிலேயே வதை முகாம் அமைத்து காவலர்கள் பொதுமக்களை கொடுமைப்படுத்தியது வீரப்பனை பிடிக்கதான் என கூறப்படுகிறது.

எனவே கண்டிப்பாக விடுதலை திரைப்படம் வீரப்பன் கதையை அடிப்படையாக கொண்டதுதான் என கூறுகின்றனர் நெட்டிசன்கள். தற்சமயம் வெளிவந்த கூஸ் முனுசாமி வீரப்பன் என்னும் தொடரால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

MGR :தமிழக மக்கள் எல்லாம் முட்டாள்கள்!.. நேரடியாக எம்.ஜி.ஆரை தாக்கி பேசிய வீரப்பன்!.. பல காலம் கழித்து வெளியான வீடியோ!..

MGR and Goose Veerappan : தமிழகத்தில் பெரும் கடத்தல் நாயகனாக வலம் வந்த பயங்கரவாதிகளில் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். சிறுவயதில் இருந்தே பழங்குடியின மக்களோடு சேர்ந்து வாழ்ந்த வீரப்பன் அங்கு இருந்த சத்தியமங்கலம் காட்டை அக்குவேறு ஆணிவேராக தெரிந்து வைத்திருந்தார்.

போலீஸ்கள் பலமுறை தேடியும் வீரப்பனை பிடிக்க முடியாமல் போனதற்கு இந்த சத்தியமங்கலம் காடுதான் முக்கிய காரணமாக இருந்தது. சத்தியமங்கலம் காடு வீரப்பனுக்கு ஒரு அரணாக இருந்தது என்று கூற வேண்டும். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு netflix நிறுவனம் வீரப்பன் குறித்து ஒரு ஆவண படத்தை தயார் செய்திருந்தது.

அதில் பேசும்போது வீரப்பன் தரப்பு மற்றும் போலீஸ் தரப்பு என்று இரு தரப்பிலிருந்து அந்த ஆவண படத்தை அணுகி இருந்தனர். அப்பொழுது வீரப்பன் செய்த தவறுகள் நன்மைகள் இரண்டுமே தெரியும் வகையில் அந்த ஆவணப்படம் இருந்தது.

MGR-4

இதனை தொடர்ந்து தற்சமயம் ஜி5 நிறுவனம் கூஸ் முனுசாமி வீரப்பன் என்கிற புது தொடரை எடுத்துள்ளது. இந்த தொடரில் வீரப்பன் உண்மையாகவே பேசிய வீடியோ காட்சிகள் பல இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு காட்சியில் வீரப்பன் பேசும்பொழுது நான் கேரள மக்களிடம் அதிகமாக பழக்கம் கொண்டவன்

சில சமயம் நான் கேரள மக்களை போய் சந்திக்கும் பொழுது அவர்கள் என்னிடம் ஆச்சரியமாக ஒரு கேள்வியை கேட்பார்கள். தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஒரு நடிகருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறார்கள் என்று என்னிடம் கேட்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என்பார்கள். ஏனெனில் கேரள மக்களும் நடிகர்களுக்கு விசில் அடிப்பார்கள் நடிகர்கள் அங்கு நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் தேர்தல் என்று வந்தால் கேரள மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். சினிமாக்காரர்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் அவர்களெல்லாம் எதற்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வீரப்பன் கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழக வரலாற்றில் நடிகராக இருந்து முதலமைச்சரானவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான் எனவே எம்.ஜி.ஆர் ஐ அப்பாட்டமாக தாக்கியிருக்கிறார் வீரப்பன் என்று இந்த வீடியோவின் மூலமாக மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

வீரப்பனை பற்றி தப்பாவா சீரிஸ் எடுக்கிறீங்க!.. நெட்ஃப்ளிக்ஸிற்கு எதிராக இறங்கிய சீ5 – கூஸ் முனிசாமி வீரப்பன் தொடர்!.

Koose Munisamy Veerappan : தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் என அறியப்படும் நபர்களில் மிகவும் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மறைந்து வாழ்ந்த வீரப்பன் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு சந்தனம் கடத்துதல், யானை தந்தங்களை கடத்துதல் போன்ற விஷயங்களை செய்து வந்தார்.

இதற்கு எதிராக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு அரசுகளும் ஒன்றிணைந்து பல நாட்களாக தேடி அவரை கொன்றது. இந்த நிலையில் வீரப்பன் நல்லவரா கெட்டவரா என்கிற ரீதியான பேச்சுக்கள் இன்றும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பக்கம் வீரப்பன் ஆயிரக்கணக்கான யானைகளை கொண்ட ஒரு மோசமான நபராக பார்க்கப்படுகிறார் வீரப்பன். மற்றொரு பக்கம் தன் மக்களுக்காக போராடிய ஒரு போராளியாகவும் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் இடையில் வீரப்பன் குறித்து netflix நிறுவனம் ஒரு சீரிஸ் ஒன்றை எடுத்தது.

அதில் வீரப்பன் செய்த அநீதிகளை வெளி கொணரும் வகையில் அந்த சீரிஸ் இருந்தது அதாவது போலீஸ் காவல்துறை மீது வீரப்பன் நிகழ்த்திய வன்முறை மற்றும் அவரது மக்கள் மத்தியிலேயே சிலர் அவருக்கு எதிராக இருந்தனர். ஏனெனில் அவர் சில இடங்களில் சர்வாதிகாரித்தனமாக நடந்து கொண்டதாக அந்த சீரியஸில் காட்டப்பட்டிருந்தது.

அதே சமயம் காவல்துறை அங்கே இருந்த பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன இருந்தாலும் வீரப்பனுக்கு எதிரான விஷயங்களை அந்த தொடரில் அதிகமாக இருந்தது என்ன நிலையில் ஜி5 நிறுவனம் கூஸ் முனுசாமி வீரப்பன் என்கிற புது தொடரை எடுத்துள்ளது.

இந்த தொடர் முழுக்க முழுக்க வீரப்பன் மற்றும் அவரது கூட்டத்தாரின் பார்வையில் இருந்து செல்வதாக கூறப்படுகிறது. இதில் வீரப்பன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறும் வகையில் சீரியஸ் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் அந்தப் பழங்குடி இன மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை மேலும் விரிவாக பேச இருப்பதாக கூறப்படுகிறது.

ஜி 5 இதற்கு முன்பு எடுத்த எந்த டாக்குமெண்டரியும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் இதில் வீரப்பன் குறித்து காணக்கிடைக்காத வீடியோக்கள் இடம் பெறுவதால் இதற்கு வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகிறது.

ட்ரெண்டாகும் வீரப்பன் வெப் சீரிஸ் – வீரப்பன் மனைவி கூறிய மறைக்கப்பட்ட உண்மைகள்!..

இந்திய வரலாற்றிலேயே இரண்டு அரசுகளை ஆட்டம் காண வைத்த மிகப்பெரும் கடத்தல் மாஃபியாவாக இருந்தவர் வீரப்பன். கர்நாடகா, தமிழ்நாடு என இரண்டு அரசுகளும் முயன்றும் கூட வீரப்பனை பிடிப்பது என்பது அரசுக்கே கடினமான காரியமாகதான் இருந்தது. சத்யமங்கலம் காட்டை தனக்கான பாதுக்காப்பு கோட்டையாக வீரப்பன் மாற்றியதே இதற்கு காரணமாக இருந்தது.

சந்தன மரங்களை கடத்துதல், யானைகளை கொன்று அவற்றின் தந்தங்களை கடத்துதல் போன்றவை வீரப்பன் செய்த முக்கிய குற்றங்களாக இருந்தன. ஆனால் அவர் காவல் அதிகாரிகளையும், வனத்துறை அதிகாரிகளையும் கொலை செய்ய துவங்கிய பிறகே அவர் மீது அரசு அதிக கவனம் செலுத்த துவங்கியது.

பொதுவாக வீரப்பன் பற்றி எந்த ஒரு படமோ, புத்தகமோ அல்லது தொடரோ வந்தாலும் அதில் வீரப்பனை நல்லவனாக அல்லது கெட்டவனாக காண்பிப்பது உண்டு. மக்கள் தொலைக்காட்சியில் ஏற்கனவே வீரப்பன் கதையை அடிப்படையாக கொண்டு சந்தன காடு என்கிற தொடர் வந்தது. ஆனால் அதில் வீரப்பனை நல்லவராக முன்னிலைப்படுத்தி அந்த தொடரை எடுத்திருந்தனர்.

ஆனால் தற்சமயம் நெட்ப்ளிக்ஸ் வீரப்பன் குறித்து எடுத்திருக்கும் ஆவணப்படம் மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வீரப்பனின் இரு முகத்தையும் காண்பிப்பதாக இந்த தொடர் உள்ளது. முக்கியமாக வீரப்பனின் படையில் இருந்தவர்கள், வீரப்பனின் மனைவி மற்றும் அப்போது பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள் போன்ற முக்கிய நபர்களிடம் இருந்து ஆதாரங்களை திரட்டி இந்த ஆவண படத்தை தயார் செய்துள்ளனர்.

வீரப்பனின் வளர்ச்சி துவங்கி வீழ்ச்சி வரை பேசும் இந்த தொடர் தமிழில் வந்த முக்கியமான ஆவணத்தொடராகும்.