Tag Archives: வெற்றிமாறன்

பட்ஜெட்டில் வந்த சிக்கல்.. சிம்பு படத்தில் வெற்றிமாறன் எடுத்த முடிவு..!

விடுதலை 2 திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் நடிகர் சூர்யாவிற்கு அந்த சமயத்தில் கால்ஷீட் இல்லை என்கிற காரணத்தினால் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க துவங்கியிருக்கிறார் வெற்றிமாறன்.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தயாரித்து வருகிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான்.

இந்த நிலையில் சிம்பு திரைப்படத்தைப் பொறுத்தவரை குறைந்த பட்ஜெட்டில் அந்த படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் தலைப்புலி எஸ் தாணுவின் எண்ணமாக இருந்தது. ஆனால் வெற்றிமாறன் ஆரம்பத்திலேயே பெரிய பட்ஜெட் படமாக இதை கொண்டு வந்து விட்டார்.

இந்த நிலையில் படத்தின் பட்ஜெடை குறைக்க வேண்டும் என்று கலைப்புலி எஸ் தாணு கூறிய காரணத்தினால் படப்பிடிப்பு துவங்கப்படாமலேயே இருந்தது. வேறு தயாரிப்பாளர்கள் வெற்றிமாறனுக்கு வாய்ப்புகளை வழங்கி உள்ளனர்.

ஆனாலும் கூட கலைப்புலி எஸ் தாணுவிடம் அட்வான்ஸ் தொகை வாங்கிய காரணத்தினால் அவருக்குதான் படம் பண்ணுவேன் என்று நிராகரித்து விட்டார் வெற்றி மாறன். இந்த நிலையில் தற்சமயம் இது குறித்து பேச்சுவார்த்தை சென்று கொண்டு உள்ளது.

மணிரத்தினத்திடம் க்ராஸ் செக் செய்த வெற்றிமாறன். சிம்பு படத்தில் நடந்த சம்பவம்..!

தொடர்ந்து சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படமானது ஓரளவு உறுதியாகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். பொதுவாக வெற்றிமாறனை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார்.

அதே சமயம் அதற்கு ஒத்துழைத்து நடிகர்கள் நடிக்க வேண்டியது முக்கியமாக இருக்கும். சிம்பு கடந்த காலங்களில் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்கிற ஒரு அவப்பெயரை பெற்றிருந்தார். எனவே மணிரத்தினம் சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார்.

எனவே அதற்கு பதில் அளித்த மணிரத்தினம் சிம்பு மிகவும் சின்சியரான ஒரு நடிகர். சிறப்பாக நடித்து கொடுக்கக் கூடியவர் என்று சிம்புவை குறித்து நல்ல விதமாக கூறியிருக்கிறார் மணிரத்தினம்.

simbu

இந்த மாதிரியான பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களில் சிம்பு ஒழுங்காக நடித்துக் கொடுத்துவிடுவார். ஆனால் மற்ற இயக்குனர்களுக்கும் அப்படியே நடித்து கொடுப்பாரா என்று ஒரு கேள்வி சினி வட்டாரத்தில் இருந்து வருகிறது.

ஆனால் மாநாடு திரைப்படத்திற்கு முன்பு சிம்பு படப்பிடிப்புகளுக்கு தாமதமாக தான் வந்து கொண்டிருந்தார். ஆனால் மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் சினிமாவின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

பத்து தல திரைப்படத்திற்கு கூட அந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்து இருந்தார். அந்த அளவிற்கு சினிமாவின் மீது இப்பொழுது சிம்புவின் கவனம் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

முதல் முறையாக சிம்பு படத்தில் வெற்றிமாறன் எடுத்த முடிவு..!

சாதாரணமாக திரைப்படம் இயக்குகிறேன் என்று இல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் படங்கள் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசுவதாக இருக்கும்.

அவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்தார். உலக அளவில் மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார்.

ஆனால் சூர்யாவுடன் கால்ஷூட் கிடைக்காத காரணத்தால் அவர் அடுத்து நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இந்த படம் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே இந்த படம் இதுவரை வந்த வெற்றிமாறன் திரைப்படங்களை விட இந்த படத்திற்கான பட்ஜெட் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சிம்பு வெற்றிமாறன் காம்போ எனும்போதே அதற்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கியிருந்தது.

எனவே திரைப்படத்தின் பட்ஜெட்டும் கூட இப்போது அதிகரித்துவிட்டது.

வாடிவாசல் கதையில் நடந்த மாற்றம்.. இதுதான் கதையாம்..!

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருந்த திரைப்படம் வாடிவாசல்.

வாடிவாசல் என்று வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இப்பொழுது இந்த திரைப்படம் உருவாகாமல் இருந்து வருகிறது.

ஆனால் இந்த திரைப்படத்திற்காக 18 கோடி முன்பணமாக பெற்று இருக்கிறாராம் வெற்றிமாறன். இந்த நிலையில் இன்னும் படம் உருவாகாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகவே சென்று கொண்டே இருக்கிறது.

இதற்கு நடுவே சிம்பு வெற்றிமாறனின் திரைப்படம் அடுத்து துவங்கி இருக்கிறது இந்த படத்திற்குப் பிறகு மீண்டும் வாடிவாசலின் படபிடிப்பு துவங்க இருக்கிறது என்று பேச்சுகள் இருக்கின்றன.

ஆனால் வாடிவாசல் நாவலின் கதைகளத்தை வைத்து இந்த படம் நகரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாக வெற்றிமாறன் வேறு வகையான கதை ஒன்றை எழுதி இருக்கிறார் அந்த கதை தான் அடுத்து படமாக வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.

20 கோடி கொடுக்கணும்.. சிம்பு படத்தில் கை வைத்த தனுஷ்..?

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படங்களின் கதைக்களங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு.

அந்த வகையில் அடுத்து அவர் நடித்த திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படமும் கூட நல்ல அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து சிம்பு இப்போது நடிக்கும் படங்களுக்கு எல்லாம் நல்ல அளவிலான வரவேற்பு என்பது இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. இதுவும் ஓரளவு வரவேற்பை பெற்று தந்தது.

இந்த நிலையில் அடுத்து சிம்பு இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் திரைப்படங்களில் நடிக்க இருந்தார். இந்த நிலையில் திடிரென இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க துவங்கியுள்ளார் சிம்பு.

இந்த படம் வட சென்னையின் தொடர்ச்சியாக இருக்கும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்காக வெற்றிமாறன் தனுஷிடம் என்.ஓ.சி கேட்டதாகவும் ஆனால் தனுஷ் அதற்காக 20 கோடி ரூபாய் தொகை கேட்டதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

ஏற்கனவே சிம்புவுக்கும் தனுஷிற்கும் தமிழ் சினிமாவில் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதனை மனதில் கொண்டுதான் தனுஷ் இப்படி செய்கிறாரோ என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

வடசென்னை பாகம் 2 இல் எஸ்.டி.ஆர்.. அதிர்ச்சி தகவல் கொடுத்த பிரபலம்.!

யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென நடிகர் சிம்புவும் வெற்றிமாறனும் இணைந்து அடுத்த படத்தை உருவாக்க துவங்கியிருக்கின்றனர். சிம்பு வரிசையாக நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

ஏற்கனவே இவர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் திடீரென்று வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் படத்தில் நடிக்க துவங்கி இருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக அது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது ஒருவேளை வடசென்னை 2 திரைப்படத்திற்கான பட பிடிப்பாக இது இருக்குமா என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகின்றன.

ஏனெனில் வடசென்னை திரைப்படத்திலேயே அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தனுஷுக்கும் சிம்புவுக்கும் இருந்த போட்டியால் சிம்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை எனவே அதைப் பின்கதையாக கொண்டு இந்த படம் அமைந்திருக்குமோ என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

வெற்றிமாறன் சிம்பு கூட்டணி படம்.. அடுத்தக்கட்ட அப்டேட்..!

வெகு நாட்களாக சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு கூட்டணி தான் வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணி. வடசென்னை திரைப்படம் உருவானபோது அதில் சிம்புவிற்கு வாய்ப்புகள் தருவதாக பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் சில காரணங்களால் பிறகு சிம்புவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்றாலும் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு.

அந்த வகையில் சிம்புவும் வடசென்னையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார். இந்த நிலையில் அந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அடுத்த துவங்கப்பட உள்ளது.

நிறைய முடி வளர்த்த சிம்பு தற்சமயம் அவற்றை வெட்டிவிட்டு வெற்றிமாறன் படத்திற்கு ஏற்ற மாதிரி மாறி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்திற்கான டெஸ்ட் சூட் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்து சீக்கிரமே படபிடிப்பும் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

உங்களை மிஸ் பண்ணினது வருத்தம்தான்.. சந்தானத்திடம் பேசிய ராஜமௌலி..!

காமெடி நடிகர்களை பொருத்தவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான காமெடி காட்சிகளை அவர்களே அமைத்துக் கொள்வதுதான் வழக்கம்.

நடிகர் வடிவேலு கூட நிறைய திரைப்படங்களில் அவருக்கான காமெடி காட்சிகளை அவரே அமைத்துக் கொள்வார். அதேபோலதான் நடிகர் சந்தானமும் இது குறித்து சந்தானம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது பொல்லாதவன் திரைப்படத்தில் நான் நடித்த பொழுதே வெற்றிமாறன் எனக்கு என்று எந்த காட்சியும் எழுதவில்லை. தயாரிப்பாளர் சொன்னதால்தான் என்னை அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

அப்பொழுதே வெற்றிமாறன் என்னிடம் கூறியது என்னவென்றால் நடிகர் கருணாஸுக்காக சில காட்சிகள் நான் படத்தில் வைத்திருக்கிறேன். உங்களுக்கென்று எந்த கட்சியும் நான் எழுதவில்லை. எனக்கு காமெடியாக எழுதவும் தெரியாது.

எனவே நீங்களே உங்களுக்கான காட்சிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். நானும் அந்த இடத்திற்கு தகுந்த மாதிரியான காமெடிகளை உருவாக்கினேன். அது நல்ல வரவேற்பையும் பெற்றது. அதேபோல நான் ஈ திரைப்படத்தில் நான் நடித்த பொழுது இயக்குனர் ராஜமௌலி அதை தான் கூறினார்.

எனக்கு காமெடி எல்லாம் எழுத தெரியாது திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்திற்கு டயலாக்கே கிடையாது அவருக்கு தகுந்த மாதிரியாக காமெடி காட்சிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

நானும் மைண்ட் வாய்ஸில் பேசுவது போலவே அந்த கதாபாத்திரத்தை அமைத்திருந்தேன் பிறகு ராஜமவுலி அந்த படத்தை பார்த்த பிறகு உங்களை நான் மிஸ் செய்து விட்டேன் என்று என்னிடம் கூறினார் என்று சந்தானம் இந்த நிகழ்வுகளை பகிர்ந்து விட்டார்.

தூக்கிபோட்டு சாத்து ராயா ராயா.. வெற்றிமாறனை வச்சி செய்த பிரபல இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவராக வெற்றிமாறன் பார்க்கப்படுகிறார். பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஆனால் வெற்றிமாறன் படத்தை இயக்குவதில் எப்போதுமே பிரச்சனைகள் இருந்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட திட்டமிட்டு சில நாட்களுக்குள் படத்தை முடிப்பது என்பது வெற்றிமாறனுக்கு முடியாத விஷயமாக இருக்கிறது திரைப்படங்களில் திட்டமிடல் என்பதில் தொடர்ந்து கோட்டை விட்டு வருகிறார். வெற்றிமாறன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாதிரியான ஒரு சில இயக்குனர்கள் தான் சில மாதங்களிலேயே ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கும் திறன் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

இயக்குனர் நெல்சன் வெற்றிமாறன் போன்ற மற்ற இயக்குனர்கள் வெகு நாட்களுக்கு ஒரு திரைப்படத்தை இயக்குகின்றனர். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் கூட கிட்டத்தட்ட ஒரு வருடம் படமாக்கப்பட்டிருந்தது.

vetrimaaran

இந்த நிலையில் இந்த மாதிரியான விஷயங்கள் குறித்து இயக்குனர் ராஜுவ் மேனன் மிக வெளிப்படையாக பேசியிருந்தார். அதில் அவர் கூறும்பொழுது இங்குள்ள இயக்குனர்கள் திட்டமிடல இல்லாமல் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ஒரு திரைப்படத்தை இயக்குகின்றனர்.

கேட்டால் அந்த திரைப்படம் நன்றாக வரவேண்டும் என்று கூறுகின்றனர் ஆனால் ஓரத்தில் தயாரிப்பாளரின் காசு ஒரு பக்கம் செலவாகி கொண்டிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு சரியாக திட்டமிட்டு திரைப்படத்தை இயக்க வேண்டும்.

ஹாலிவுட்டில் வெளியான ஜுராசிக் பார்க் திரைப்படத்தை 78 நாட்களில் படமாக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர். ஆனால் 72 நாட்களில் அந்த திரைப்படத்தை படத்தின் இயக்குனர் படமாக்கி முடித்தார். அப்படி இருக்கும் பொழுது ஜுராசிக் பார்க் மாதிரியான பெரிய திரைப்படத்தையே சரியான திட்டமிடல் செய்தால் 72 நாட்களில் முடிக்கும் பொழுது அதைவிட சின்ன படங்களை எடுத்து வரும் இயக்குனர்கள் ஒன்றரை வருடம் ஒரு திரைப்படத்தை எடுப்பது சரி கிடையாது என்று கூறியிருக்கிறார்.

ஹிந்தி பட சான்ஸையே நிராகரித்த வெற்றிமாறன்.. இந்த விதிமுறைதான் காரணம்.!

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வரவேற்புகளை பெற்று வருகிறார். வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அதற்கென்று தனி வரவேற்பு இருந்து வருகிறது.

சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அதில் ஏதாவது ஒரு விஷயம் பேசப்பட்டிருக்கும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.

ஆனால் வெற்றிமாறனுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக் கொள்வார் இந்த நிலையில் வெற்றிமாறன் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சில விஷயங்களை கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது விடுதலை திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறனுக்கு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வந்தது. ஹிந்தி சினிமாவில் கூட அவரை படம் இயக்குவதற்கு அழைத்தனர்.

ஆனால் எனக்கு ஏற்கனவே வாடிவாசல் திரைப்படத்தை தயாரித்து தருவதாக அவர் வாக்களித்து இருக்கிறார் சூர்யா 45 திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த ஒரு காரணத்தினால் வாடிவாசல் முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் கமிட் ஆவேன் என்று தனக்குள்ளையே ஒரு விதிமுறையை போட்டு இருக்கிறார் வெற்றிமாறன். அதனால் பெரிய பெரிய பட வாய்ப்புகளை கூட அவர் நிராகரித்துவிட்டார் என்று கூறியிருக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு.

8 நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல்.. டோட்டல் டேமஜ் போல..!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான திரைப்படமாக விடுதலை 2 திரைப்படம் இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் அமையவில்லை.

முக்கியமாக திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனான சூரிக்கு இந்த திரைப்படத்தில் பெரிதாக எந்த காட்சிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. விடுதலை முதல் பாகத்தில் சூரிதான் முக்கிய கதாபாத்திரமாக இருந்தார்.

ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார் என்று பலரும் அறிந்த விஷயம் தான் என்றாலும் கூட சூரியின்  கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்படியான காட்சிகள் இந்த திரைப்படத்தில் அமையவில்லை இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் வசனங்களும் மிக அதிகமாக இருக்கிறது ஏதோ மாநாட்டுக்கு சென்றது போல தோன்றுகிறது என்று ரசிகர்கள் கூறினர்.

அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது குறைந்தது. படம் வெளியாகி எட்டு நாட்கள் நிறைவடைந்த நிலையில் மொத்தமாகவே இந்த திரைப்படம் 48 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது.

படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்பொழுது இது மிகக் குறைந்த அளவிலான வசூல் என்று கூறப்படுகிறது. ஓடிடி விற்பனை மற்றும் சேட்டிலைட் விற்பனை மூலமாக சம்பாதிக்கும் தொகையை கணக்கிட்டால் கூட படத்திற்கு பெரிய லாபம் என்று எதுவும் வராது என்று கூறப்படுகிறது.

 

என்ன இருந்தாலும் பா.ரஞ்சித் மாதிரி வருமா.. வெற்றிமாறன் அந்த விஷயத்தை படத்தில் வைக்கல.. குற்றம் சாட்டும் பா.ரஞ்சித் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூகநீதி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். வெற்றிமாறன் அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் சமூகம் சார்ந்த பல விஷயங்களை பேசி வருகிறார்.

அப்படியாக அவர் அரசியல் பேசி இருக்கும் விடுதலை திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் அதிகமாகவே புரட்சி பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனாலையே படத்திற்கு வந்தது போல இல்லை ஏதோ ஒரு அரசியல் மாநாட்டுக்கு வந்தது போல இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள். அதேபோல முதல் நாளே இந்த படத்திற்கு வசூல் குறைந்துள்ளது. விடுதலை விடுதலை முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் சுறுசுறுப்பாக இல்லை.

viduthalai 2

பா.ரஞ்சித் ரசிகர்கள்:

கதையை நீட்டிக்க வேண்டும் என்பதற்காகவே எடுத்தது மாதிரி இருக்கிறது என்றெல்லாம் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் ரசிகர்கள் ஒரு பக்கம் இந்த படத்திற்கு அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் கூறும் பொழுது கடைசி காட்சியில் நமக்கான சட்டத்தை நாம்தான் எழுதவேண்டும் என்று விஜய் சேதுபதி செல்வதாக காட்சி இருக்கும். அந்த இடத்தில் கம்யூனிசம் மற்றும் திராவிடத்தை வெளிப்படுத்தி விஜய் சேதுபதி பேசிய அளவிற்கு தலித்தியத்தை பேசவில்லை பா ரஞ்சித் ஆக இருந்திருந்தால் இன்னும் ஆழமாக அரசியலை பேசி இருப்பார் என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.