மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படங்களின் கதைக்களங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு.
அந்த வகையில் அடுத்து அவர் நடித்த திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படமும் கூட நல்ல அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து சிம்பு இப்போது நடிக்கும் படங்களுக்கு எல்லாம் நல்ல அளவிலான வரவேற்பு என்பது இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. இதுவும் ஓரளவு வரவேற்பை பெற்று தந்தது.
இந்த நிலையில் அடுத்து சிம்பு இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் திரைப்படங்களில் நடிக்க இருந்தார். இந்த நிலையில் திடிரென இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க துவங்கியுள்ளார் சிம்பு.
இந்த படம் வட சென்னையின் தொடர்ச்சியாக இருக்கும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்காக வெற்றிமாறன் தனுஷிடம் என்.ஓ.சி கேட்டதாகவும் ஆனால் தனுஷ் அதற்காக 20 கோடி ரூபாய் தொகை கேட்டதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.
ஏற்கனவே சிம்புவுக்கும் தனுஷிற்கும் தமிழ் சினிமாவில் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதனை மனதில் கொண்டுதான் தனுஷ் இப்படி செய்கிறாரோ என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.