Tag Archives: வட சென்னை

20 கோடி கொடுக்கணும்.. சிம்பு படத்தில் கை வைத்த தனுஷ்..?

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படங்களின் கதைக்களங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு.

அந்த வகையில் அடுத்து அவர் நடித்த திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படமும் கூட நல்ல அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து சிம்பு இப்போது நடிக்கும் படங்களுக்கு எல்லாம் நல்ல அளவிலான வரவேற்பு என்பது இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. இதுவும் ஓரளவு வரவேற்பை பெற்று தந்தது.

இந்த நிலையில் அடுத்து சிம்பு இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் திரைப்படங்களில் நடிக்க இருந்தார். இந்த நிலையில் திடிரென இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க துவங்கியுள்ளார் சிம்பு.

இந்த படம் வட சென்னையின் தொடர்ச்சியாக இருக்கும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்காக வெற்றிமாறன் தனுஷிடம் என்.ஓ.சி கேட்டதாகவும் ஆனால் தனுஷ் அதற்காக 20 கோடி ரூபாய் தொகை கேட்டதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

ஏற்கனவே சிம்புவுக்கும் தனுஷிற்கும் தமிழ் சினிமாவில் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதனை மனதில் கொண்டுதான் தனுஷ் இப்படி செய்கிறாரோ என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

வடசென்னை மொத்தம் மூன்று பாகம்!.. என்னை வச்சி ஒரு படம் இருக்கு!.. சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் அமீர்!.

Ameer in Vada chennai: தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வந்த மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர் சுல்தான். தொடர்ந்து தமிழில் சில படங்களை இவர் இயக்கியுள்ளார். அதில் பருத்திவீரன், ஆதி பகவான் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அதற்கு பிறகு படங்களில் அதிகமாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அமீர். தற்சமயம் மாயவலை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் ராஜன் என்னும் கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கிறார்.

ஆனால் ஏற்கனவே வட சென்னை படத்திலும் அவரது பெயர் ராஜன் தான். அப்படியிருக்கும்போது இந்த படத்திலும் அதே பெயரில் ஏன் நடிக்கிறார் என கேட்கும்போது அந்த ராஜன் ஒருவேளை மனம் திருந்தி வேறு வேலைக்கு சென்றிருந்தால் எப்படி இருக்கும் என்பதாக இந்த கதை இருப்பதாக அமீர் கூறினார்.

ஆனால் அமீருக்காக தனி படம் செய்யலாம் என வெற்றிமாறன் முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது. இதுக்குறித்து அமீர் கூறும்போது ஆமாம் என்னை வைத்து ராஜன் வகையறா என்கிற படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். ஏற்கனவே அந்த படத்தின் பாதி வேலைகள் முடிந்துவிட்டன.

ஆனால் அந்த படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு பதிலாக ஓ.டி.டியில் வெளியிடலாம் என முடிவு செய்தார் வெற்றிமாறன். ஆனால் இந்த படம் இன்னும் முடிவடையவில்லை என கூறியுள்ளார் அமீர்.

ஒரு நாளைக்கு 80 சிகரெட் பிடிப்பாரு.. இயக்குனர் செயலால் படத்தை விட்டு சென்ற ஆண்ட்ரியா!..

Andrea: தமிழில் பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையானவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா தமிழில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்சமயம் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் தற்சமயம் பேயாக நடித்து வருகிறார்.

இவர் நடித்த திரைப்படங்களில் வட சென்னை முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்திருப்பார் ஆண்ட்ரியா. ஆனால் ஆரம்பத்தில் அந்த படத்தில் நடிக்கவே ஆண்ட்ரியாவிற்கு பிடிக்கவில்லை.

இயக்குனர் வெற்றிமாறன் தான் அதற்கு காரணமாக இருந்திருக்கிறார். வெற்றிமாறன் தினமும் 80 சிகரெட் குடிப்பாராம். முதல் முறை ஆண்ட்ரியாவை சந்தித்து பேசும்போதே தொடர்ந்து புகைப்பிடித்துள்ளார் வெற்றிமாறன்.

அந்த புகையால் ஆண்ட்ரியாவின் கண்களில் இருந்து நீர் வர துவங்கியது. இவ்வளவு புகைப்பிடிப்பவரிடம் படம் நடிப்பது கஷ்டம் என்று படத்தில் இருந்து விலகியுள்ளார் ஆண்ட்ரியா. பிறகு அவரிடம் பேசி சமாதானப்படுத்திய வெற்றிமாறன் அவரை படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

தேவாவை வில்லனாக நடிக்க அழைத்த தனுஷ்!.. ஆனா தேவா ஒத்துக்கலை.. இதுதான் காரணமாம்!..

தமிழ் இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா. தேவா இசையமைக்கும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. இப்போதும் கூட கிராமங்களில் உள்ள டவுன் பஸ்களில் தேவாவின் பாடல்கள் அதிகமாக ஒலிக்கின்றன.

ஏனெனில் நாட்டுப்புற இசையை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் தேவா. அதனால் மக்களுக்கு நெருக்கமான ஒரு இசையை அவரால் கொடுக்க முடிந்தது. இதனால் தொடர்ந்து தேவாவின் பாடல்களுக்கு வரவேற்பு இருந்தது.

கானா பாடல்களிலும் சரி மெலோடி பாடல்களிலும் சரி சிறப்பாக தனது இசையை கொடுத்து விடுவார் தேவா. இதனாலேயே அவரை தேனிசைத் தென்றல் தேவா என்று அழைத்து வந்தனர். தேவாவிற்கு ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு பேட்டியில் அவர் இதுக்குறித்து கூறியிருந்தார். வடசென்னை படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பொழுது தேவாவிற்கு ஃபோன் செய்த தனுஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆள் வேண்டும் என்று கூறி அதை தேவாவால் நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

எதற்காக என்னை அழைக்கிறீர்கள் என்று தேவா கேட்டதற்கு உங்களுக்கு வட சென்னையின் மொழி நன்றாக வரும் எனவே நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் கூறியுள்ளார். ஆனால் தேவாவிற்கு பொதுவாகவே நினைவுத்திறன் கொஞ்சம் குறைவு. ஆயிரம் முறை பாடிய பாடலை கூட திரும்ப பாட வேண்டும் என்றால் அதை எழுதி வைத்திருப்பதை பார்த்து தான் பாடுவாராம்.

இந்த நிலையில் வசனத்தை நான் நினைவு வைத்து பேசுவது கஷ்டம் எனவே என்னால் நடிக்க முடியாது என்று அதை நிராகரித்திருக்கிறார் தேவா. இதனையடுத்து ஒரு வேளை தேவா வட சென்னையில் அந்த படம் இன்னும் சிறப்பாக ஓடி இருக்குமோ என்கிற கேள்வி மக்கள் மத்தியில் உண்டாகியுள்ளது.

நான் நடிக்கும்போது மட்டும் குறுகுறுன்னு பாப்பாங்க… – அமீரை கலாய்த்த படக்குழுவினர்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் மிக பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கிய பருத்திவீரன், ராம் போன்ற திரைப்படங்கள் இன்னமும் தமிழ் சினிமாவில் பேசப்படும் படங்களாக இருக்கின்றன.

இயக்குனர் என்பதை விடவும் நல்ல நடிகராக அமீரை பலரும் அறிவர். வட சென்னை படத்தில் ராஜன் என்கிற கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருப்பார் அமீர்.

அமீர் எப்போதும் படம் இயக்கும்போது ஆரம்ப நடிகர்களிடம் சில விஷயங்களை கூறுவார். உன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் முட்டள் என நினைத்துக்கொள் நீ மட்டும் அறிவாளி என நினைத்துக்கொள். அப்போதுதான் நடிக்க முடியும் என கூறுவார்.

ஆனால் வட சென்னை படத்தில் அவரே நடிக்கும்போதுதான் அது எவ்வளவு கஷ்டம் என தெரிந்துள்ளது. சுற்றி உள்ள மக்கள் மட்டுமின்றி அவருடன் பணிப்புரிந்த நபர்களும் கூட அமீரையே பார்த்துக்கொண்டுள்ளனர்.

இதனால் கடுப்பான அமீர் “மக்கள்தான் என்னையே பாக்குறாங்கனா, நீங்களும் ஏண்டா குறுகுறுன்னு பாக்குறீங்க. வேற எங்கயாவது பாருங்கடா” என கூறியுள்ளார். இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.