Tag Archives: வெற்றிமாறன்

என் படத்துல அதெல்லாம் கண்றாவியான சீன் !.. ஓப்பனாக கூறிய வெற்றிமாறன்!..

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் மட்டுமே சற்று கமர்ஷியலான படம் என்று கூறலாம்.

அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் சமூகத்திற்கு தேவையான நல்ல நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையிலேயே திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஆனால் முதல் படமே அப்படி இருக்க கூடாது என்பதற்காக முற்றிலும் கமர்ஷியல் படமாக அதை எடுத்தார்.

ஆனால் அந்த படத்திற்காக பிறகு பல பேட்டிகளில் வருத்தப்பட்டுள்ளார் வெற்றிமாறன். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது அந்த படத்தில் காமெடி காட்சிகள் மிகவும் கண்றாவியாக இருக்கும். அந்த மாதிரி காமெடி காட்சிகளை வைப்பதில் எனக்கு முதலில் உடன்பாடே இல்லை.

ஆனால் படத்தில் அப்படியான காமெடி காட்சிகள் இருக்க வேண்டும் என தயாரிப்பாளர் ஆசைப்பட்டார். எனவேதான் அப்படியான காட்சிகளை வைக்க வேண்டி இருந்தது என கூறியுள்ளார் வெற்றிமாறன்.

குஷி பட காலத்துலயே விஜய்க்கு ஒரு கதை சொன்னேன்!. வெற்றிமாறன் சொன்ன கதை!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். மற்ற இயக்குனர்களை போல வெறும் சண்டை காட்சிகள் வைத்து படம் எடுக்கிறேன் என்று இல்லாமல் படத்தின் வழியாக முக்கியமான அரசியலை பேசக்கூடியவர் வெற்றிமாறன். இதனாலேயே வெற்றிமாறனுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு.

வெற்றிமாறன் ஒரு பேட்டியில் பேசும்போது நடிகர் விஜயிடம் வாய்ப்பு தேடி போனது குறித்து பேசியிருந்தார். வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தபோதே இயக்குனராவதற்காக முயற்சி செய்து வந்தார்.

அந்த நிலையில் விஜய் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கிறார் என கேள்விப்பட்ட வெற்றிமாறன். விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். ஆனால் அவரை நேரில் சந்தித்தப்பிறகு வெற்றிமாறனுக்கு அவரிடம் கதை சொல்லவே வரவில்லை.

ஏனெனில் அப்போதே விஜய் பிரபலமான நடிகராக இருந்தார். ஆனால் விஜய்க்கு அந்த கதை அவ்வளவாக பிடிக்கவில்லை. அது என்ன கதை என்பதை வெற்றிமாறன் பகிர்ந்திருந்தார். கல்லூரி படித்து முடித்துவிட்டு நீண்ட நாட்கள் கழித்து கல்லூரியில் ரீ யூனியன் விழா நடக்கிறது. அதில் பங்கு கொள்ளும் அனைவரும் ஒரு நபருக்காக காத்திருக்கின்றனர். அந்த நபர் வேறு யாருமல்ல நம் விஜய்தான்

விஜய் கல்லூரி காலங்களில் செய்த விஷயங்களே கதையாக வருகிறது. இதை வெற்றிமாறன் பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அடிச்சே அவன் முதுகு தோள் கிழிஞ்சுட்டு!.. படப்பிடிப்பில் வெற்றிமாறன் செய்த சம்பவம்!. அடுத்த பாலாவா இருப்பார் போல.

சினிமாவைப் பொறுத்தவரை சில நடிகர்கள் ஏதோ நடித்தால் போதும் என்று சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிலர் உயிரைக் கொடுத்து நடிப்பார்கள். உதாரணத்திற்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச்சான் ஒவ்வொரு திரைப்படத்திலும் எந்த டூப்பும் போடாமல் அவரே அனைத்து சண்டை காட்சிகளும் நடிப்பார்

இதனால் அவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் ரசிகர்களுக்காக அப்படி ஒரு விஷயத்தை செய்வார். அதேபோல தமிழ் சினிமாக்களும் மக்களுக்காக பாடுபட்டு நடிக்கும் நடிகர்கள் பலர் இருக்கின்றனர்.

அதில் அட்டகத்தி தினேஷ் முக்கியமானவர். அவரை நடிக்க வைப்பது குறித்து பெரிதும் யோசித்து இருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் தினேஷ் நடிக்க துவங்கிய பிறகு அட்டக்கத்தி தினேஷ் தவிர அந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்கிற அளவிற்கு அவர் சிறப்பாக நடித்துள்ளார்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு காட்சியில் வாழை மட்டையை வைத்து அட்டகத்தி தினேஷை போலீஸ் அடிப்பது போன்ற காட்சி வரும் அந்த காட்சிக்கு நிஜமாகவே வாழை மட்டையை வைத்து அடிக்க வைத்துள்ளார் வெற்றிமாறன்.

ஏனெனில் அப்போதுதான் பார்ப்பதற்கு அந்த காட்சி நிஜமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அப்படி அடிக்கும் பொழுது நிஜமாகவே அட்டகத்தி தினேஷிற்கு முதுகு தோல் உரிந்து விட்டது. அதனைப் பார்த்து படக்குழுவே அதிர்ச்சியில் இருக்கும் பொழுது சிறிது நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பில் நடிப்பதற்காக சகஜமாக நின்றுள்ளார் அட்டகத்தி தினேஷ்.

அப்பொழுது இவ்வளவு கஷ்டங்களை ஏன் தாங்கிக் கொள்கிறீர்கள் என வெற்றிமாறன் கேட்கும் பொழுது இது ஒரு நிஜக் கதை சார் இதில் 20 சதவீதத்தை தான் நாம் படமாக்குகிறோம். நமக்கே இப்படி என்றால் உண்மையாக இந்த அடிகளை வாங்கியவர்களுக்கு எப்படி இருக்கும் அதோடு ஒப்பிடும் பொழுது நான் வாங்குவது ஒன்றும் பெரிய ஆடி இல்லை என்று கூறியுள்ளார் அட்டகத்தி தினேஷ். இந்த விஷயத்தை வெற்றிமாறன் பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

அந்த சீன் எல்லாம் கேவலமா இருந்துச்சு! தன் படத்தை தானே கழுவி ஊற்றிய வெற்றிமாறன்..

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அனைவராலும் ஒரு முற்போக்கு எண்ணம் கொண்ட இயக்குனர் என இவர் அறியப்படுகிறார். ஏனெனில் அவரது ஒவ்வொரு திரைப்படமும் சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை பேசுவதே இதற்கு காரணமாகும்.

ஆனால் சினிமாவிற்கு வந்த துவக்கத்தில் வெற்றிமாறன் பல விஷயங்களில் சரியான நிலைபாடுகளில் இல்லை. இதனால் அவரது திரைப்படங்களில் பல தவறான கருத்துக்கள் இடம் பெற்றன.

முக்கியமாக பொல்லாதவன் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் வெற்றிமாறனின் மனநிலைக்கு பொருந்தாதவை. இதுக்குறித்து வெற்றிமாறன் கூறும்போது “இப்ப பார்க்கும்போதுதான் அந்த சீன் எல்லாம் கேவலமா இருந்துச்சுன்னு தெரியுது.

அப்ப அந்த காட்சிகளை எல்லாம் சந்தானமும், கருணாஸும் இணைந்துதான் எழுதுனாங்க. ஆனால் இப்ப பார்க்கும்போது எவ்வளவு அபத்தமான விஷயங்களை காமெடின்னு பேசி இருக்கேன்னு தெரியுது. என வெளிப்படையாக பேசியுள்ளார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் தனுஷிடம் திமிராக செய்த வேலை! – பதிலுக்கு தனுஷ் செஞ்ச காரியம்! அதான் தனுஷ்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் எப்போதுமே தனுஷ்க்கு ஒரு முக்கியமான இடமுண்டு. மேலும் துறையில் நல்ல பெயரை வாங்கிய ஒரு மனிதராக தனுஷ் இருந்தார். இதுவரை பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தற்சமயம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கூட இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. வெற்றிமாறன் தனுஷ் இருவருமே வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பொல்லாதவன் படத்தில் துவங்கி வட சென்னை, அசுரன் வரை இவர்கள் சேர்ந்து கொடுக்கும் படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே அமைந்துள்ளன.

இவர்கள் தங்கள் ஆரம்பக்கால நட்பை குறித்து வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.ஆரம்பக்காலத்தில் உதவி இயக்குனராக இருக்கும்போதே மிகவும் டெரரான ஆளாக இருந்தார் வெற்றிமாறன். அப்போது தனுஷிடமே கொஞ்சம் டெரராகதான் நடந்துக்கொண்டுள்ளார் வெற்றிமாறன்.

ஏனெனில் தனுஷ் அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்தார். இதனால் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழித்து தான் எழுதிய புது கதையுடன் தனுஷிடம் சென்ற வெற்றிமாறன், சார் நான் புது கதை வச்சிருக்கேன். உங்களை வச்சி படமாக்கணும்னு ஆசைப்படுறேன் என கூறியுள்ளார்.

மற்ற கதாநாயகர்களாக இருந்தால் அய்யோ இந்த இயக்குனர் படமே வேண்டாம் என முடிவெடுத்திருப்பார்கள். ஆனால் தனுஷ் கதையை கேட்டுவிட்டு நல்லா இருக்கு சார் பண்ணலாம் என கூறியுள்ளார். இந்த விஷயத்தை வெற்றிமாறன் ஒருமுறை பகிர்ந்துள்ளார்.

விடுதலை படத்தை விஜய் சேதுபதிக்காக எடுக்க ஐடியாவே இல்ல! 8 நாள் கால் ஹீட்லதான் கூப்பிட்டோம்– பொசுக்குன்னு உண்மையை சொன்ன வெற்றிமாறன்!

கோலிவுட்டில் வெற்றி படங்களாக இயக்கி வரும் இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவரது பெயருக்கு தகுந்தாற் போல தொடர்ந்து வெற்றிகளை மட்டும் கண்டு வருகிறார். மேலும் மக்களுக்கு வெற்றிமாறன் திரைப்படங்களின் மீது ஒரு எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் வெற்றி மாறன் இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் இரு பாகங்களாக வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறும்போது “அசுரன் படத்தை முடித்த உடனேயே அடுத்த படத்தை நான் சூரிக்காக இயக்க வேண்டும் என்றுதான் முடிவெடுத்திருந்தேன். கதையை எழுதிவிட்டு பிறகு சூரியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த கதையை நான் எழுதியதே நடிகர் சூரிக்காகதான்.

அதில் வரும் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் பாரதி ராஜாவை நடிக்க வைக்க திட்டமிட்டோம். ஆனால் அவருக்கு அது அவ்வளவாக செட் ஆகாததால் விஜய் சேதுபதியிடம் பேசினோம். அந்த கதாபாத்திரத்திற்கு மொத்தமே 8 நாள் கால்ஷீட் அளவுக்குதான் காட்சிகள் இருந்தன.

ஆனால் விஜய் சேதுபதி வந்த பிறகு அந்த கதாபாத்திரத்தை பெரிதாக்கியதால் 45 நாள் கால்ஷீட் தேவைப்படும் அளவிற்கு இரண்டாவது பெரிய கதாபாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் வந்துவிட்டது” என கூறியுள்ளார் வெற்றிமாறன்.

கிராபிக் தரமா இருக்கணும் –  வாடி வாசல் படத்தில் இணைந்த அவதார் குழு!

எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுதி வெளிவந்த ஜல்லிக்கட்டு தொடர்பான நாவல் வாடிவாசல்.

இந்த நாவல் தற்சமயம் படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா, ஆண்ட்ரியா, அமிர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன. படம் ஜல்லிக்கட்டு தொடர்பானது  என்பதால் காளைகளை படத்தில் காட்ட வேண்டியது வரும். காளையுடன் சண்டைக்காட்சிகள் இருக்கும். அவற்றிற்கு கிராபிக் முறையில்தான் காட்சியை அமைக்க வேண்டி வரும்.

எனவே இதற்காக வெற்றி மாறன் சிறப்பான வி.எஃப்.எக்ஸ் குழுவை இறக்க திட்டமிட்டார். அப்படியாக விசாரித்து அவதார் படத்தில் பணிப்புரிந்த ஒரு வி.எஃப்.எக்ஸ் குழுவை தற்சமயம் வாடிவாசல் திரைப்படத்திற்காக நியமித்துள்ளனர்.

அவதார் குழு வி.எஃப்.எக்ஸ் செய்வதால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விடுதலை ரெண்டு பாகம் ஷூட்டிங்கும் முடிந்தது!

கோலிவுட்டில் பிரபலமான இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் கதாநாயகனாக நடிக்கின்றனர்.

முதன் முதலில் இந்த படத்தின் கதை சூரிக்காக எழுதப்பட்டது. படத்தில் சூரியே கதாநாயகனாக நடிக்க இருந்தது. அந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் விஜய் சேதுபதி வருவதை அடுத்து அவருக்காக சற்று கதை மாற்றப்பட்டது. இதனால் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக வருவது போல கதை உருவானது.

ஆனால் ஆரம்பத்தில் சூரியைதான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க இருந்ததால் இருவருக்குமே படத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என யோசித்த வெற்றிமாறன் படத்தை இரண்டு பாகங்களுக்கு மாற்றி எழுதினார்.

அதன்படி முதல் பாகத்தில் சூரிதான் கதாநாயகனாக இருப்பார். அவருக்குதான் முன்னிலை வழங்கப்படுகிறது. படத்தின் இரண்டாம் பாகம்தான் விஜய் சேதுபதிக்காக எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் முடிந்த நிலையில் அடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்துள்ளார் வெற்றிமாறன்.