தயாரிப்பாளர் பிரச்சனை பண்ணுனாரு.. கடைசியில் தனுஷும் என்னை கை விட்டுட்டாரு… ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்!..
தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அதன் பிறகு தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். அதில் அதிகமான படங்களில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார்.
இதனால் தனுஷ்க்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசும்போது பொல்லாதவன் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் அவரது முதல் படம் என்பதால் தயாரிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதற்கு தகுந்தாற் போலத்தான் படத்தை இயக்கி வந்தார் வெற்றிமாறன்.
இந்த நிலையில் படத்திற்கு இரும்பு குதிரை என்கிற பெயரை தேர்ந்தெடுத்திருந்தார் வெற்றிமாறன். ஏனெனில் படம் முழுவதும் பைக்கை சுற்றியே செல்வதால் அந்த பெயர் சரியாக இருக்கும் என நினைத்தார் வெற்றிமாறன்.
ஆனால் தயாரிப்பாளருக்கு அந்த பெயரின் மீது பெரிதாக ஈடுபாடு இல்லை. ஏதாவது ரஜினி படத்தின் பெயரை வைக்கலாம் என முடிவு செய்தார் இயக்குனர். இந்த நிலையில் படத்திற்கு தம்பிக்கு எந்த ஊர்னு பெயர் வைக்கலாம் என கூறியுள்ளார் தயாரிப்பாளர். ஆனால் அந்த பெயர் வைப்பதற்கு பதில் பொல்லாதவன் என்றே பெயர் வைத்துவிடலாம் என கோபமாக கூறியுள்ளார் வெற்றிமாறன்.
உடனே அந்த பெயரே நன்றாக இருக்கிறதே என தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஆனால் வெற்றிமாறனுக்கு அந்த பெயர் பிடிக்கவில்லை. எனவே தனுஷிற்கு பிடித்தால்தான் அந்த பெயரை வைக்க முடியும் என கூறிவிட்டு தனுஷிற்கு போன் செய்துள்ளார் வெற்றிமாறன். அனைத்தையும் கேட்ட தனுஷ் பொல்லாதவன் பேரே நல்லாதான இருக்கு என கூறி அவரும் வெற்றிமாறனை கைவிட்டார்.
இதையடுத்து படமும் பொல்லாதவன் என்கிர பெயரிலையே வெளியானது.