Tag Archives: சந்தானம்

க்ளோஸ் பண்ண வரேன்.. சினிமா விமர்சகர்களுக்கு எதிரா சர்ச்சை வரிகள்.. வெளியான சந்தானம் பட பாடல்.!

நடிகர் சந்தானம் நடிக்கும் காமெடி திரைப்படங்கள் என்றாலே மக்கள் அவற்றை விரும்பி பார்ப்பதுண்டு. கலவையான காமெடி திரைப்படங்கள் நடித்து வந்த சந்தானத்திற்கு திடீரென கை கொடுக்கும் படங்களாக பேய் படங்கள் அமைந்தன.

அவர் நடித்த தில்லுக்கு துட்டு திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பேய் படங்களாக நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். அந்த வகையில் தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்.

படத்தின் கதைப்படி சந்தானம் திரைப்பட விமர்சகராக இருந்து வருகிறார். செல்வராகவன் பேயாக இருக்கிறார். ஆனால் அவருக்கு திரைப்பட விமர்சகர்களையே பிடிக்காது. எனவே சந்தானத்தை அவர் ஒரு பேய் படத்திற்குள் அனுப்புகிறார்.

அங்கிருந்து சந்தானம் எப்படி வெளியேறுகிறார் என்பதுதான் கதை. இந்த படத்தில் திரைப்படங்களை கலாய்க்கும் விதத்தில் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. அதனை தொடர்ந்து தற்சமயம் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது.

இந்த பாடலை செல்வராகவனுக்காக உருவாக்கி இருக்கிறார்கள். எனவே பாடல் முழுக்கவும் செல்வராகவன் திரைப்பட விமர்சகர்களை திட்டுவது போல பாடல் வரிகள் அமைந்துள்ளன. இந்த பாடல் இப்போது ட்ரெண்ட் ஆக துவங்கியுள்ளன.

சந்தானம் கூட எல்லாம் நடிக்க முடியாது.. பிரபல நடிகை மறுக்க இதுதான் காரணம்.!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.

முக்கியமாக சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் டிடி நெக்ஸ் லெவல் திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் ஆர்யாதான் இந்த படத்தை தயாரிக்கிறார்.

நடிகர் கௌதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மே 16 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சந்தானத்திற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிகை கஸ்தூரி நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் அம்மா கதாபாத்திரம் என்றதும் கஸ்தூரி நடிக்க முடியாது என கூறிவிட்டார். சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்கும் அளவிற்கு வயதாகவில்லை என கூறிவிட்டார். பிறகு அந்த அம்மா கதாபாத்திரம் குறித்து விவரித்த பிறகு அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.

கஸ்தூரியின் கதாபாத்திரமானது திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பங்களை உருவாக்கும் என கூறுகிறார் சந்தானம்.

முதல் சிங்களலியே சம்பவம் செய்த சந்தானம்… டிடி நெக்ஸ் லெவல்..! முதல் சிங்கிள் வெளியானது.!

நடிகர் சந்தானம் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் காமெடி திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்திருந்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி திரைப்படங்கள் என்பது அவ்வளவாக பெரிதாக வருவதில்லை.

அதனாலேயே இப்போதைய காலக்கட்டங்களில் சந்தானத்தின் படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அப்படியாக சந்தானம் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தில்லுக்கு துட்டு.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வருகிற மற்ற பாகங்களும் தொடர்ந்து வெற்றியை கொடுத்து வருகின்றன.

https://www.youtube.com/watch?v=I-E1S5XlEAY

அப்படியாக அடுத்து சந்தானம் நடித்து வரும் திரைப்படம் டிடி நெக்ஸ் லெவல். இந்த திரைப்படத்தில் சந்தானம் திரைப்பட விமர்சகராக வருகிறார். அது தொடர்பாக முதல் சிங்கிள் முதலில் வெளியானது. அந்த முதல் சிங்கிள் பாடலே அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீனிவாசா கோவிந்தா பாடலை பின்புலமாக கொண்டு இந்த பாடல் அமைந்துள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்பவே ஆரம்பிச்சாச்சா? பர்ஸ்ட் சிங்கிளிலேயே காமெடியை கிளப்பிய டிடி நெக்ஸ்ட் லெவல்.!

காமெடி பேய் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் சந்தானம் காமெடி பேய் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதலில் இவர் தில்லுக்கு துட்டு என்கிற திரைப்படத்தில் நடித்தார். அல்டிமேட் காமெடி கதைகளத்தை கொண்ட அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2.

இந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதன் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படங்களில் எல்லாம் கதைக்களம் கதாநாயகி என எல்லாமே மாறுப்படும். கதையில் ஒற்றுமையாக இருக்கும் இரண்டும் விஷயங்கள் என்றால் ஒன்று சந்தானம் மற்றொன்று படத்தில் வரும் பேய்கள்.

மற்றபடி படத்தின் கதைகளங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில் அடுத்து சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற நான்காம் பாகத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்க்காக டீசர் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஆர்யா நடித்துள்ள இந்த டீசர் அதிக வரவேற்பை பெற துவங்கியுள்ளது.

சந்தானத்துக்காக அதை பண்ணுனேன்.. இறங்கு வந்த தேவயாணி புருஷன்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் இயக்குனர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் விக்ரமனிடம் ஆரம்பக்கால கட்டத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். இந்த நிலையில் சூர்ய வம்சம் திரைப்படம் எடுக்கப்படும்போது இவருக்கு நடிகை தேவயாணி மீது காதல் ஏற்பட்டது.

பிறகு தனியாக இயக்குனர் ஆன பிறகு இவர் இயக்கிய திரைப்படம் விண்ணுக்கும் மண்ணுக்கும், இந்த திரைப்படத்தின்போதுதான் தேவயானியும் கூட இவரை காதலிக்க துவங்கினார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Santhanam

சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தேவயானியின் கணவர் நடித்து வந்தார். இந்த நிலையில் சந்தானத்தோடு நடித்த அனுபவத்தை அவர் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சந்தானத்திற்கு கதாநாயகனாக முதல் படம்.

அந்த திரைப்படத்தில் நான் அவருடன் காமெடி செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். எனக்கும் அந்த கதாபாத்திரம் பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார் ராஜகுமாரன். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஒரு ரயில் காட்சியில் சந்தானத்தை கலாய்க்கும் இரு நபர்கள் வருவார்கள். அதில் ராஜ் என்னும் கதாபாத்திரத்தில்தான் ராஜகுமாரன் நடித்திருந்தார்.

மீண்டும் காமெடியனாக களம் இறங்கும் சந்தானம்.. கமிட் ஆகும் 3 படங்கள்.!

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகர் சந்தானம். அந்த நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக மிக பிரபலமடைந்தார் சந்தானம். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்தார்.

இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பை பெற்ற சந்தானம் தனது சிறப்பான காமெடி திறமையால் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடியனாக மாறினார். ஒரு கட்டத்திற்கு பிறகு பெரும்பாலான திரைப்படங்களில் சந்தானம் நடிப்பதை பார்க்க முடியும்.

இவ்வளவு வரவேற்புகள் கிடைத்த நிலையில்தான் அவர் கதாநாயகனாக அறிமுகமானார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான சந்தானத்துக்கு முதலில் படங்கள் பெரிதாக வெற்றியை தரவில்லை என்றாலும் போக போக வெற்றியடைய துவங்கினார்.

இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியான ஏ1, தில்லுக்கு துட்டு மாதிரியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவர் அளவிற்கு ஒரு காமெடி நடிகர் வரவே இல்லை.

Comedian Actor Santhanam at the Vallavanukku Pullum Aayudham Thanksgiving-Success Meet

இதனால் நடிகர் சிம்புவே ஒரு பேட்டியில் சந்தானம் மீண்டும் காமெடியனாக வர வேண்டும் என கேட்டிருந்தார். அதே போல இப்போது வெளியான மத கஜ ராஜா திரைப்படத்திலும் சந்தானத்தின் காமெடிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே சந்தானம் காமெடியனாக நடிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாகவும் இருக்கிறது.

எனவே மீண்டும் சந்தானம் காமெடி நடிகராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சிம்புவுடன் ஒரு காமெடி படம், பாஸ் என்கிற பாஸ்கரன் 2, மத கஜ ராஜா 2 ஆகிய திரைப்படங்களில் அவர் அடுத்து நடிக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் சந்தானம் இப்போது கதாநாயகனாக நடித்து வருவதால் காமெடி செய்தாலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரமாகதான் இவரது கதாபாத்திரம் இருக்கும். இவருக்கும் கதாநாயகி, டூயர் பாடல்கள், சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சந்தானம் பண்ணுன அந்த விஷயத்தை எஸ்.கே பண்ணல!.. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்காததுக்கு அதுதான் காரணம்..!

நடிகர் சந்தானமும் சரி சிவகார்த்திகேயனும் சரி இருவருமே விஜய் டிவியின் மூலமாகதான் சினிமாவிற்கு வந்தனர். இருவருமே விஜய் டிவியில் காமெடி செய்துக்கொண்டிருந்த நடிகர்கள்தான் என கூறலாம்.

இந்த நிலையில் திரைத்துறைக்கு வந்த பிறகு மட்டும் ஏன் இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படங்களே நடிக்கவில்லை என்பது பலரது கேள்வியாக இருந்து வந்துள்ளது. லொள்ளு சபாவில் சந்தானம் நடித்து கொண்டிருந்தப்போதே அவருடைய நடிப்பை பார்த்து வியந்துள்ளார் சிம்பு.

அதன் பிறகு சிம்புதான் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பொல்லாதவன் மாதிரியான படங்களில் தனுஷிடன் சேர்ந்து நடித்தார் சந்தானம். ஆனால் தனுஷிற்கும் சிம்புவுக்கும் இடையே போட்டி வந்த பிறகு தனுஷ் படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்தார்.

தனுஷ் பிரச்சனை:

இந்த நிலையில் நடிகர் தனுஷ்தான் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். வெற்றிமாறனை அழைத்து அப்போதே சிவகார்த்திகேயனுக்கு ஒரு படம் பண்ண சொன்னார். இந்த நிலையில் 3 திரைப்படத்தில் தனுஷ் நடித்தப்போது அதில் வரும் இரண்டு நண்பர்களாக சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானத்தை நடிக்க வைக்க முடிவு செய்தார்.

ஆனால் சிம்புவுக்கும் தனுஷிற்கும் போட்டி இருப்பதால் அதில் நடிக்க மறுத்துள்ளார் சந்தானம். அதற்கு பிறகு எஸ்.கேவுக்க்கும் தனுஷிற்குமே பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் தனுஷ் மூலமாக வந்த காரணத்தினால் மரியாதை நிமித்தமாக எஸ்.கே படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறாராம் சந்தானம்.

லாஜிக்கே இல்லையேப்பா!.. இங்க நான் தான் கிங்கு படம் எப்படியிருக்கு!.. பட விமர்சனம்!.

சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதன் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். பெரும்பாலும் சந்தானம் நடிக்கிற திரைப்படங்கள் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களாகவே இருக்கும்.

ஒரு சில திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தாலும் அவருக்கு சில படங்கள் தோல்வியையும் கொடுக்கின்றன. இந்த நிலையில் அவர் நடிப்பில் இன்று ஒங்கு நான் தான் கிங்கு என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எப்படியிருக்கு என பார்க்கலாம்.

படத்தின் கதை:

படத்தின் கதைப்படி அநாதையாக இருந்து வரும் சந்தானம் எப்படியாவது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். பொதுவாக திருமணம் செய்துகொள்வது என்றாலே பையனுக்கு வீடு இருக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பதுண்டு.

சந்தானத்திடம் அப்படி ஒரு வீடு இருக்கிறது. ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அந்த வீடு கட்டுவதற்காக 25 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் சந்தானம். எனவே அந்த கடனை அடைக்க பெண் வீட்டில் 25 லட்சம் கேட்டு வருகிறார்.

அதற்கு ஒப்புக்கொள்ளும் பெண்ணையே திருமணம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் ஒரு ஜமீன் பரம்பரை பெண்ணை சந்தானம் ஒரு வழியாக திருமணம் செய்கிறார். ஆனால் அந்த பெண் ஜமீன் பரம்பரையே கிடையாது. இந்த நிலையில் அவர்களுக்கும் நிறைய கடன் இருக்கிறது.

இதையெல்லாம் சந்தானம் எப்படி சமாளிக்க போகிறார் என்பதே தெய்வ மச்சான் திரைப்படத்தின் கதையாக இருக்கிறது. நகைச்சுவையை பொறுத்தவரை சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும் கூட பல இடங்களில் இதெல்லாம் நம்புற மாதிரியா சார் இருக்கு என யோசிக்கும் வகையில் இருக்கிறது.

சந்தானத்தின் முந்தைய திரைப்படமான வடக்குப்பட்டி ராமசாமி அளவிற்கு இந்த படத்தில் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே கூற வேண்டும்.

சுந்தர் சி சொன்னது போலவே சந்தானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.. வரிசையில் நின்ற தயாரிப்பாளர்!.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதில் உயரத்தை தொட்டவர் நடிகர் சந்தானம். சந்தானம் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவரது காமெடிக்காகவே ஓட துவங்கின.

இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களுக்கு உள்ளானார் சந்தானம். ஒரு சில திரைப்படங்களுக்கு வாய்ப்பு தருவதாக அழைத்து பிறகு எதுவும் இல்லை என்று அனுப்பிவிடுவார்கள்.

இப்படி இருக்கும்போது ஒரு நாள் சுந்தர் சி நடித்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் அவருடன் சுந்தர் சியும் நடித்து கொண்டிருந்தார். அப்போது காலையிலேயே சந்தானத்தை வர சொல்லிவிட்டு அவரை வைத்து படப்பிடிப்பே நடத்தாமல் இருந்தார் சந்தானம்.

அதை பார்த்த சுந்தர் சி இவரை இப்படி காக்க வைக்கிறீர்கள் ஒருநாள் இவரிடம் டேட் வாங்குவதற்கு கஷ்டப்படுவீர்கள் பாருங்கள் என இயக்குனரிடம் கூறியுள்ளார் சுந்தர் சி. அதே போல பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் சந்தானம் நடித்து வந்தார்.

அப்போது அவரிடம் தேதி வாங்குவதற்காக வெகு நாட்களாக காத்திருந்தார் அந்த பழைய பட இயக்குனர். பிறகு சந்தானம் ஒருமுறை சுந்தர் சியை சந்தித்த சந்தானம் சார் நீங்கள் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு என இந்த நிகழ்வை கூறியுள்ளார்.

இடம் வாங்க காசு இல்லாம இருந்தப்ப அவருதான் ஹெல்ப் பண்ணுனாரு!.. நன்றிக்கடன் செய்த சந்தானம்!..

சின்ன திரை மூலமாக மக்களிடம் பிரபலமாகி அதன் வழியாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆரம்பத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்களும் காமெடி திரைப்படங்களாகதான் இருந்தன. ஆனால் போக போக ஒரு கமர்ஷியல் கதாநாயகனுக்கு ஏற்ற விஷயங்களை தனது காமெடி படங்களிலேயே வைத்து கொண்டார் சந்தானம்.

இதனால் அவரது சில படங்களில் சண்டை காட்சிகளை கூட பார்க்க முடியும். இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் இங்க நாந்தான் கிங்கு என்கிற திரைப்படம். இந்த திரைப்படத்தை ஆனந்த் நாராயணன் இயக்குகிறார்.

Santhanam

சந்தானத்தோடு தம்பி ராமயா, விவேக் பிரசன்னா போன்றோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதுக்குறித்து சந்தானம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை எனக்கு பிஸ்கோத் திரைப்படம் வந்த காலம் முதலே தெரியும்.

அவர் நிறைய வட்டிக்கு விட்டு வந்தார். அதனால் நான் வீடு கட்ட நிலம் வாங்க இருந்தேன். அதற்காக அவரிடம் கடன் கேட்டு சென்றேன். அதற்கு அவர் வீடு கட்ட நிலம் வாங்க எல்லாம் கடன் வாங்காதீர்கள் என கூறி ஒரு தொகையை கொடுத்தார்.

அதன் பிறகு அந்த தொகைக்கு பதிலாக படம் நடித்து தர சொன்னார். என்று அவர் செய்த உதவிக்குறித்து விளக்கியுள்ளார் சந்தானம்.

சேசு கடைசியாக அனுப்பிய அந்த மெசேஜ்!.. மனம் நொந்து கூறிய இயக்குனர்!..

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷ். நகைச்சுவை நடிகராக லொள்ளு சபா நிகழ்ச்சியிலேயே மிக சிறப்பாக நடித்திருப்பார் சேசு. சந்தானம் திரையுலகில் வளர துவங்கிய போது சின்ன சின்ன நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.

அதில் சேசுவும் முக்கியமானவர் ஏ1 படத்தில் சேசுவின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஐயர், சாமியார் மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு அதிகமாக கிடைக்க துவங்கின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அவரை சேர்த்திருந்தனர்.

seshu

தொடர்ந்து 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சேசு காலமானார். இந்த நிலையில் திரைத்துறையை சேர்ந்த அவரது நண்பர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குனரான கார்த்திக் யோகியும் சேசு குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறும்போது சேசுவிற்கு 60 வயது என்றே எனக்கு தெரியாது அவருக்கு 45 வயதாகிறது என்றே நினைத்திருந்தேன். ஆள் பார்ப்பதற்கு மிக ஆக்டிவாக இருப்பார். வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடனம் ஆடும் காட்சிக்கு கேட்டப்போது கூட அதுக்கென்னப்பா செஞ்சிடலாம் என அசால்ட்டாக நடித்தார். இப்போது மருத்துவமனையில் அவரை அனுமதிக்கும்போதுதான் அவருக்கு 60 வயது என்பதே எனக்கு தெரியும்.

என்னப்பா எப்போது சாமியார், பூசாரி என்றே கதாபாத்திரம் தருகிறீர்கள். எனக்கு போலீசாக நடிக்க ஆசை என சேசு கூறியிருந்தார். இதனால் அடுத்து இயக்கும் படத்தில் அவருக்காகவே ஒரு போலீஸ் கதாபாத்திரத்தையும் எழுதி வைத்துள்ளேன். ஆனால் நடிப்பதற்கு இப்போது அவர் இல்லை.

மருத்துவமனையில் அட்மின் ஆன சமயத்தில் கூட அந்த பரதநாட்டியம் வீடியோ யூ ட்யூப்பில் ட்ரெண்ட் ஆயிடுச்சு என மெசேஜ் செய்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் சேசு என மனம் வருந்தி கூறுகிறார் கார்த்திக் யோகி.

அரசு பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் உதவி பண்ணுனவர்!.. நடிகர் சேஷூவின் இழப்பால் வருந்தும் சக நடிகர்கள்!..

விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக பலரும் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றனர். அப்படியாக சினிமாவில் வாய்ப்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சேஷூ.  லொள்ளு சபா நிகழ்ச்சியில் இவர் துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. முக்கியமாக நடிகர் சந்தானம் சினிமாவில் வளர துவங்கியவுடன் அவர் தொடர்ந்து லொள்ளு சபாவில் இருந்த நடிகர்களுக்கு தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வாய்ப்புகளை வழங்கி வந்தார்.

இந்த நிலையில் அந்த வகையில் நடிகர் சேஷூவும் நிறைய திரைப்படங்களில் நடித்தார். ஏ1 திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது நல்ல வரவேற்பையும் கொடுத்தது. பிறகு வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார் சேஷூ.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடலில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் நேற்று காலமானார். இந்த நிலையில் அவருடன் பணிப்புரிந்த சக நடிகர்கள் கூறும்போது சினிமாவில் குறைவான ஊதியம் பெற்றாலும் கூட அரசு பள்ளி மாணவர்கள், ஏழைகள் என பலருக்கு உதவி செய்யக்கூடியவர் சேஷூ.

அவரின் மரணம் என்பது எங்களுக்கு ஈடு செய்ய முடியாத விஷயமாகும் என கூறியுள்ளனர்.