Tag Archives: Actress Kasthuri

சந்தானம் கூட எல்லாம் நடிக்க முடியாது.. பிரபல நடிகை மறுக்க இதுதான் காரணம்.!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.

முக்கியமாக சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் டிடி நெக்ஸ் லெவல் திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் ஆர்யாதான் இந்த படத்தை தயாரிக்கிறார்.

நடிகர் கௌதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மே 16 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சந்தானத்திற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிகை கஸ்தூரி நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் அம்மா கதாபாத்திரம் என்றதும் கஸ்தூரி நடிக்க முடியாது என கூறிவிட்டார். சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்கும் அளவிற்கு வயதாகவில்லை என கூறிவிட்டார். பிறகு அந்த அம்மா கதாபாத்திரம் குறித்து விவரித்த பிறகு அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.

கஸ்தூரியின் கதாபாத்திரமானது திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பங்களை உருவாக்கும் என கூறுகிறார் சந்தானம்.

முகுந்த் ஓட சாதி பத்தி ஏன் பேசல?.. அமரன் குறித்து கடுப்பான நடிகை கஸ்தூரி..! பதிலடி கொடுத்த இயக்குனர்!..

Actress Kasthuri recently created a controversy by saying that director did not talk about Mukund Varadarajan’s caste in Amaran. At this stage, the director of the film, Rajkumar Periyasamy, has explained this.

தமிழ்நாட்டில் மிக முக்கியமான ராணுவ வீரரான முகந்த் வரதராஜ் என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் அமரன்.

முகுந்த் வரதராஜ் என்கிற ராணுவ வீரர் இந்திய ராணுவத்தில் உயர் பதவியில் இருந்து நாட்டுக்காக உயிரை விட்ட ஒரு வீரராக பார்க்கப்படுகிறார். எனவே அவரது கதையை படம் படமாக்க வேண்டும் என்பது படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமிக்கு வெகு நாட்களாகவே ஆவலாக இருந்ததாக கூறப்படுகிறது.

sk amaran

இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் திரைப்படம் உருவானது. அமரன் திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் 125 கோடி வசூல் செய்து பெரும் சாதனை படைத்திருக்கிறது. தமிழில் முன்னணி நடிகர்களின் வசூலை கிட்டத்தட்ட தொட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அமரன் திரைப்படம்:

இந்த நிலையில் இந்த படம் குறித்து நிறைய நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது எப்படியும் விஜய் படங்கள் கொடுக்கும் அளவிற்கான ஒரு வசூலை அமரன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவே இந்த படம் குறித்து சர்ச்சைக்குள்ளான கேள்விகளை எழுப்பி இருக்கிறார் நடிகை கஸ்தூரி. நடிகை கஸ்தூரி இது குறித்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது முகுந்த் வரதராஜன் ஜாதி என்னவென்று படத்தில் காட்டவே இல்லை.

பதிலடி கொடுத்த இயக்குனர்

இப்பொழுது எடுக்கும் திரைப்படங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் என்று ஜாதியை காட்டுவதை பார்க்க முடிகிறது அப்படி இருக்கும் பொழுது முகுந்த் வரதராஜன் ஒரு பிராமணர் ஆவார். அவர் பிராமணர் என்பதை ஏன் படத்தில் காட்டவில்லை.

பிராமணர் என்றாலே அடிவாங்கும் கதாபாத்திரமாகவும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களும்தான் காட்ட வேண்டுமா என்று கேட்டிருந்தார் கஸ்தூரி. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் இயக்குனர் ஒரு மேடையில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது இந்த படத்தை எடுக்கும் பொழுது முகுந்த் வரதராஜின் குடும்பத்தினர் ஒரு இந்தியன் அல்லது தமிழன் என்ற அடையாளத்தில் மட்டுமே தனது மகன் தெரிய வேண்டும் என்று கூறிவிட்டனர். எனவேதான் நாங்கள் அந்த அடிப்படையிலேயே படத்தை எடுத்திருக்கிறோம் என்று பதில் அளித்து இருக்கிறார்.

கமல் குறித்த அந்த விஷயங்களை நம்ப முடியல.. அவரை பத்தி எல்லாம் தெரியும்..! சர்ச்சையை கிளப்பிய நடிகை கஸ்தூரி.!

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் எப்பொழுதுமே அதிக பிரபலமாக இருந்து வரும் ஆளுமைகளில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். பெரும்பாலும் கமல்ஹாசன் நடிக்கும் படங்கள் என்பவை வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றன.

நடிகர் ரஜினிக்கு பிறகு 60 வயதை கடந்த பிறகும் இன்னமும் மக்கள் மத்தியில் தன்னை கதாநாயகனாக நிரூபித்து வருபவர் நடிகர் கமலஹாசன் மட்டும் தான்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிகராக இருந்த சம காலகட்டத்தில் தொடர்ந்து அவரைக் குறித்து நிறைய அவதூறான விஷயங்கள் வெளிவந்து இருக்கின்றன.

கமல்ஹாசன் குறித்த செய்தி:

முக்கியமாக காதல் விஷயத்தில் பெண்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர் என்றெல்லாம் கமல் குறித்து சர்ச்சைகள் அப்பொழுது கிளம்பி இருந்தாலும் கூட அவை அதிகாரப்பூர்வமாக இருந்தது கிடையாது. முக்கியமாக கமல்ஹாசன் அவரது திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக நடிப்பார் என்பதும் அப்பொழுது அதிக சர்ச்சையாக இருந்தது.

நடிகை கஸ்தூரி அவரை குறித்து சில விஷயங்களை ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். கமல்ஹாசன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக ஒரு தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. இதற்கு பதில் அளித்த கஸ்தூரி கூறும் பொழுது இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?

கமல்ஹாசன் என்பவர் இந்த தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய ஆள் என்று அனைவருக்கும் தெரியும் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு தவறு நடக்கிறது என்றால் அது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது. தமிழ் சினிமாவில் பல தவறுகளை செய்த பிரபலங்களை எனக்கு தெரியும் அந்த மாதிரி செய்யும் தவறுகள் உடனே வெளிப்பட்டு விடும் அப்படி இருக்கும் பொழுது கமல்ஹாசன் ரகசியமாகவெல்லாம் ஒன்றும் செய்து விட முடியாது.

இவர்கள்தான் தமிழை குறித்து அவதூறுகளை பரப்புகின்றனர் என்று கூறியிருக்கிறார் கஸ்தூரி.

உறுப்பு இருந்துட்டா நீ ஆம்பளையா.. அறுத்து எறிஞ்சுடுவேன்.. கடுப்பான நடிகை கஸ்தூரி!.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் என்றால் அது கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தான்.

இந்நிலையில் பயிற்சி மருத்துவராக கொல்கத்தாவில் ஆர்.ஜீ.கர் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாட்டை உலுக்கியது.

இந்த சம்பவம் குறித்து தற்போது நாட்டில் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் என பலரும் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். தற்போது நடிகை கஸ்தூரி அவரின் ஆவேசத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டை உலுக்கிய சம்பவம்

கொல்கத்தாவில் கடந்த வாரம் அதிகாலையில் 31 வயதான பயிற்சி மருத்துவரான பெண் அந்த மருத்துவமனையில் கொடூரமாக பாலில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தில் அந்த ஒரு நபர் மட்டும் இல்லாமல் மேலும் பலர் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இறந்த அந்தப் பெண்ணின் உடலில் இருந்து 150 கிராம் ஆணின் விந்தணுக்கள் எடுக்கப்பட்டு இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் 36 மணி நேரம் ஓய்வில்லாமல் பயிற்சி மேற்கொண்ட அந்த மருத்துவர் இவ்வாறாக கொலை செய்யப்பட்டு இருப்பது, பல மருத்துவர்களின் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் எலும்புகள் உடைக்கப்பட்டு, கண்களில் இருந்து ரத்தம் வலிய, மேலும் உடலில் பல இடங்களில் கடிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அந்த பெண் மருத்துவர் இறந்திருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடையது யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி கூறிய கருத்தை பார்க்கலாம்.

நடிகை கஸ்தூரியின் ஆவேசம்

இந்த சம்பவம் கேள்விப்பட்ட அன்றிலிருந்து எனக்கு கோபமாகவும், பயமாகவும் இருக்கிறது. இவ்வாறு ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தி ஒருவன் கொலை செய்திருக்கிறான் என்றால் இந்த சம்பவத்தில் அந்த ஒரு நபர் மட்டும் இருக்கமாட்டான். மேலும் பலருக்கும் அதில் தொடர்பு இருக்கும்.

அந்த மருத்துவமனைக்கு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பணம் வருகிறது. மேலும் அது முறைகேடாக வருவதை அந்த பயிற்சிப்பெண் மருத்துவர் கண்டுபிடித்து இருக்கலாம். இதனால் தான் அந்தப் பெண் பல நாட்கள் திட்டமிட்டு சதியால் கொல்லப்பட்டு இருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழ்நாட்டிலும் பல பெண்களுக்கு இதே போன்ற நிலைமை இருக்கிறது. ஒரு டாக்டருக்கு பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் வகையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுபோல தப்பு செய்பவர்களுக்கு பொது வெளியில் தண்டனை கொடுக்க வேண்டும்.

ஆண் தன்னுடைய இச்சைக்காக அடுத்த உயிரை கொலை செய்கிற அளவிற்கு இருக்கும் போது அந்த ஆணுக்கு ஆண் உறுப்பு தேவையில்லை. அதை வெட்டி வீச வேண்டும் என்று மிகவும் ஆவேசமாக கூறியிருக்கிறார். மேலும் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். ஒரு அம்மாவாக இது போன்ற செய்திகளை கேள்விப்படும் போது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

இது போன்ற ஒரு தண்டனை கொடுத்தால் மட்டும் தான் அது மற்றவர்களுக்கு ஒரு சரியான தீர்ப்பாக இருக்கும் என்றும் கஸ்தூரி மிகவும் கோபமாக பேசியிருப்பது தற்போது அனைவராலும் பாராட்டைப் பெற்று வருகிறது.