News
கமல் குறித்த அந்த விஷயங்களை நம்ப முடியல.. அவரை பத்தி எல்லாம் தெரியும்..! சர்ச்சையை கிளப்பிய நடிகை கஸ்தூரி.!
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் எப்பொழுதுமே அதிக பிரபலமாக இருந்து வரும் ஆளுமைகளில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். பெரும்பாலும் கமல்ஹாசன் நடிக்கும் படங்கள் என்பவை வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றன.
நடிகர் ரஜினிக்கு பிறகு 60 வயதை கடந்த பிறகும் இன்னமும் மக்கள் மத்தியில் தன்னை கதாநாயகனாக நிரூபித்து வருபவர் நடிகர் கமலஹாசன் மட்டும் தான்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடிகராக இருந்த சம காலகட்டத்தில் தொடர்ந்து அவரைக் குறித்து நிறைய அவதூறான விஷயங்கள் வெளிவந்து இருக்கின்றன.
கமல்ஹாசன் குறித்த செய்தி:
முக்கியமாக காதல் விஷயத்தில் பெண்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர் என்றெல்லாம் கமல் குறித்து சர்ச்சைகள் அப்பொழுது கிளம்பி இருந்தாலும் கூட அவை அதிகாரப்பூர்வமாக இருந்தது கிடையாது. முக்கியமாக கமல்ஹாசன் அவரது திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக நடிப்பார் என்பதும் அப்பொழுது அதிக சர்ச்சையாக இருந்தது.
நடிகை கஸ்தூரி அவரை குறித்து சில விஷயங்களை ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். கமல்ஹாசன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக ஒரு தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. இதற்கு பதில் அளித்த கஸ்தூரி கூறும் பொழுது இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?
கமல்ஹாசன் என்பவர் இந்த தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய ஆள் என்று அனைவருக்கும் தெரியும் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு தவறு நடக்கிறது என்றால் அது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது. தமிழ் சினிமாவில் பல தவறுகளை செய்த பிரபலங்களை எனக்கு தெரியும் அந்த மாதிரி செய்யும் தவறுகள் உடனே வெளிப்பட்டு விடும் அப்படி இருக்கும் பொழுது கமல்ஹாசன் ரகசியமாகவெல்லாம் ஒன்றும் செய்து விட முடியாது.
இவர்கள்தான் தமிழை குறித்து அவதூறுகளை பரப்புகின்றனர் என்று கூறியிருக்கிறார் கஸ்தூரி.
