News
நல்லா நடிக்க சொன்னா.. அந்த நடிகை தப்பா கேக்குறாங்க.. யாரை குறை சொல்றது.. உண்மையை கூறிய பிரபலம்.!
சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது இன்றியமையாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. சினிமா துவங்கிய காலகட்டத்தில் இருந்து அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பது நடிகைகளுக்கு எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வந்தது.
அதனை தொடர்ந்து எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு வரவேற்பும் கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. இதனால்தான் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்தே நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதை பார்க்க முடியும்.
அதேபோல அப்போதிலிருந்து இப்போது வரை பொதுமக்கள் மத்தியில் நடிகைகளுக்கு மரியாதையே இல்லாமல் இருப்பதற்கும் இதுதான் காரணமாக இருந்து வருகிறது. ஆனால் இப்பொழுது எவ்வளவோ தமிழ் சினிமா மாறிவிட்டது என்று கூறலாம்.
நடிகைகள் செய்யும் காரியம்:
இப்பொழுதெல்லாம் பெரிதாக திரைப்படங்களில் கவர்ச்சி பாடல்கள் இருப்பது கிடையாது. மேலும் ஒரு நடிகை கவர்ச்சியாக இல்லாமல் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வாய்ப்புகளும் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
பிரியங்கா மோகன் மாதிரியான ஒரு சில நடிகைகள் தொடர்ந்து கவர்ச்சி காட்டாமலேயே மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் நடிகைகளாக இருந்து வருகின்றனர்.
ஆனால் முன்பெல்லாம் அப்படி இல்லை இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் காந்தா ராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நடிகைகளே அதிக கவர்ச்சியில் நடிப்பதற்கு ஆசைப்படுகின்றனர்.
நாம் ஒருவேளை வேண்டாம் கவர்ச்சியாக எல்லாம் நடிக்க வேண்டாம் என்று கூறினால் கூட அவர்கள் கேட்க மாட்டார்கள் இப்படித்தான் ஒரு திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்தனர். அதில் ஒரு கதாநாயகிக்கு மிக மாடலான ஒரு உடையை கொடுத்துவிட்டு இன்னொரு கதாநாயகிக்கு புடவை கொடுத்திருந்தனர்.
இதனால் கடுப்பான அந்த நடிகை எனக்கு மட்டுமே அதற்கு புடவை கொடுக்கிறீர்கள் என்னை எந்த ரசிகர்களும் கவனிக்க மாட்டார்களே எனக்கும் கவர்ச்சியான ஆடையை கொடுங்கள் என்று கேட்டு வாங்கினார் இப்படித்தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் நிலைமை இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
