தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகர்கள் பஞ்சம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழின் டாப் நடிகர்களாக விஜய்யும் அஜித்தும் இருந்து வந்தனர். ஆனால் எதிர்காலத்தில் இவர்கள் இருவருமே சினிமாவில் இருப்பார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
விஜய் அரசியலுக்கு சென்றதால் அவர் இனி நடிக்க போவதில்லை என கூறப்படுகிறது. அஜித்தும் கூட தொடர்ந்து படம் நடிப்பது சந்தேகமே என பேச்சுக்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதை பயன்படுத்திக்கொள்ளும் புது நடிகர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்த துவங்கியுள்ளனர்.
விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியும் கதாநாயகன் நடிகராகி உள்ளார். கொட்டுக்காளி, ஏழு மலை ஏழு கடல் ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்து வருகிறார். இந்த இரு படங்களுக்குமே அதிக வரவேற்பு இருக்கும் காரணத்தினால் தற்சமயம் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் சூரி.
kavin
அதன்படி அவர் 8 கோடி சம்பளமாக கேட்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் டாடா திரைப்படத்தில் 1 கோடி சம்பளம் வாங்கிய கவின் தற்சமயம் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். காமெடி நடிகர் சூரியே 8 கோடி வாங்கும்போது தனக்கு 7 கோடியாவது சம்பளம் வேண்டும் என்கிறாராம் கவின்.
இதனால் தயாரிப்பாளர்கள் எல்லாம் அதிர்ச்சியில் இருக்கின்றனராம். ஏனெனில் நடிகர் விஜய் ஆண்டனியே 5 படங்கள் வரை 2 கோடிதான் சம்பளம் வாங்கி வந்தாராம். இந்த நிலையில் புது நடிகர்கள் இப்படி அதிக சம்பளம் கேட்பது படத்தை தயாரிப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.
Vijay antony and kavin : தமிழ் சினிமாவில் புதுமுகங்களாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நடிகர்களில் நடிகர் கவினும் முக்கியமானவர். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி மாதிரியான தொடர்களில் நடித்து வந்த கவின் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ஓரளவு பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது கதாநாயகன் ஆகிவிட வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. பிறகு அவர் நடித்த லிப்ட் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானது அந்த திரைப்படம்.
ஆனால் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவில்லை. கவின் நடித்து முதன்முதலில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் டாடா. இந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்து நிறைய பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் கவின்.
டாடா திரைப்படத்தின் வெற்றியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. கிட்டதட்ட ஐந்து முதல் ஆறு கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறாராம் கவின். இந்த நிலையில் சுந்தர் சி கலகலப்பு 3 திரைப்படத்தை கவினை வைத்து இயக்க நினைத்தார்.
ஆனால் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்று கவினை நிராகரித்துள்ளார். அதேபோல வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கவிருந்த திரைப்படத்திலும் சம்பள பிரச்சனை காரணமாக அவர்கள் கவினை நிராகரித்து இருக்கின்றனர்.
ஐந்து படங்கள் நடித்த பிறகும் கூட நடிகர் விஜய் ஆண்டனி 2 கோடி ரூபாய்தான் சம்பளமாக வாங்கினார் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் விஜய் ஆண்டனியே 5 கோடி 6 கோடி என்கிற அளவில் சம்பளத்தை வாங்குகிறார் என்னும் பொழுது முதல் படத்தில் ஒரு படம் நடித்துவிட்டு கவின் அவ்வளவு சம்பளம் எப்படி கேட்கலாம் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips