Tag Archives: பவதாரணி

அவ உயிரோட இருந்த வரைக்கும் யாராச்சும் கேட்டீங்களா!.. இப்ப வந்து பேசுவீங்க!.. பேட்டியில் கடுப்பான கங்கை அமரன்!..

Music Director Gangai Amaran: தமிழில் உள்ள திரையிசை கலைஞர்களில் முக்கியமானவர் இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன். ஆரம்பத்தில் பாடலாசிரியராக வேண்டும் என்பதுதான் கங்கை அமரனின் மிகப்பெரும் ஆசையாக இருந்தது.

இதற்காக பலமுறை கவிஞர் கண்ணதாசனிடம் வாய்ப்பு கேட்டு வந்தார் கங்கை அமரன். ஆனால் கண்ணதாசனிடம் வாய்ப்பு கிடைக்காததால் பிறகு சினிமாவில் இளையராஜாவுடன் சேர்ந்து இவரும் இசை அமைக்க துவங்கினார்.

இளையராஜா இசை அமைத்ததாக நினைக்கும் பல பாடல்கள் கங்கை அமரன் இசை அமைத்தவைதான் பிறகு தனியாகவும் கங்கை அமரன் இசையமைத்து கொடுத்தார். அதன் பிறகு திரைப்படங்களை இயக்கவும் துவங்கினார். கங்கை அமரனுக்கு இசையமைக்க தெரியும் என்றாலும் கூட அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு இளையராஜாவை தான் இசையமைக்க வைத்தார் கங்கை அமரன்.

gangai-amaren

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பலவித திறமைகளை கொண்ட ஒரு பிரபலமாக கங்கை அமரன் இருந்தார். தற்சமயம் ஒரு பேட்டியில் அவரிடம் இளையராஜாவின் மகளான பவதாரணி குறித்து பேசப்பட்டது. பவதாரணிக்கு தனிப்பட்ட குரல்வளம் உண்டு. பல பாடகிகள் பாடல் பாடினாலும் அதில் பவதாரணியின் குரலை தனியாக கண்டுபிடித்து விட முடியும்.

அப்படியான ஒரு தனிப்பட்ட குரலை கொண்டிருந்தாலும் கூட பவதாரணி ஏன் அதிகமான பாடல்களை பாடவில்லை என்று நிருபர் கங்கை அமரனிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த கங்கை அமரன் அவர் இறந்த பிறகு தானே அவர் குறளின் தனித்துவம் உங்களுக்கு தெரிகிறது.

உயிரோடு இருக்கும் பொழுது யாரும் அதைப்பற்றி பேசவில்லையே உயிரோடு இருக்கும் பொழுது அவருக்கு எந்த இசையமைப்பாளரும் வாய்ப்பு கொடுக்கவில்லை இறந்த பிறகு தானே உங்களுக்கெல்லாம் தெரிகிறது என்று கோபமாக பதில் அளித்து இருந்தார். ஒருவகையில் அது உண்மையும் கூட இளையராஜாவின் இசையமைப்பில் ஒரு சில பாடல்களில் பவதாரணி பாடினாரே தவிர வேறு எந்த இசையமைப்பாளரும் அப்போது பவதாரணிக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. அதனால் தான் என்னவோ அவர் சினிமாவில் அதிக பாடல்கள் பாடவில்லை.

அன்னைக்கு காரை எடுக்காமல் இருந்திருந்தா இந்த நிலை இருந்திருக்காது!.. பவதாரணி இழப்பு குறித்து பத்திரிக்கையாளர் விளக்கம்!.

Bavatharani and Ilayaraja: தொடர்ந்து நடந்து வரும் திரை பிரபலங்களின் இழப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியிலேயே அதிக வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் விஜயகாந்தின் இழப்பில் இருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் ரசிகர்களுக்கு தற்சமயம் இளையராஜாவின் மகளான பவதாரணியின் இழப்பு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதிராஜா முதற்கொண்டு பல  மூத்த பிரபலங்கள் தூக்கி வளர்த்த ஒரு பெண்தான் பவதாரணி. ஆனால் அவர் இவ்வளவு வெகு சீக்கிரத்தில் காலமானது பலருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பவதாரணிக்கு புற்றுநோய் பிரச்சனை இருப்பது அறிந்த உடனேயே அவரது குடும்பத்தினர் அதை பவதாரணியிடம் மறைத்துதான் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இறுதிவரை பவதாரணிக்கு அவருக்கு புற்றுநோய் இருக்கும் விஷயமே தெரியாமல் பார்த்துக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

கிமோதெரபி என்கிற புற்றுநோய்க்கான சிகிச்சைதான் முதலில் பவதாரணிக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் அவரது உடல்நிலை அப்பொழுது மிகவும் மோசமான நிலையை அடைந்து விட்டதால் கீமோதெரபிக்கு அவரது உடல்நிலை ஆதரவளிக்காது.

எனவே அவருக்கு இயற்கை வழி சிகிச்சைகள்தான் அளிக்க வேண்டும் என்று கூறி இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே இளையராஜா அங்கு ஒரு இசை நிகழ்ச்சி நடத்த இருந்ததால் அது தொடர்பான வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இளையராஜாவை பார்த்தே ஆக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார் பவதாரணி. ஆனால் அதற்கு யாரும் அனுமதிக்காத காரணத்தினால் அவரே அங்கே இருந்த காரை எடுத்துக்கொண்டு இளையராஜாவை பார்க்க நேரில் சென்றதாக கூறப்படுகிறது. அதை பார்த்து பதறிப் போன இளையராஜா கூறி இருந்தால் நானே பார்க்க வந்திருப்பேனே எதற்கு அம்மா நேரில் வந்தாய் என்று கேட்கவும் இல்லை உங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று எனக்கு தோன்றியது என்று கூறி இருக்கிறார் பவதாரணி.

அதன்பிறகு திரும்ப மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற பொழுது வரும் வழியில் அவர் தூசிகளை முகர்ந்ததன் காரணமாக பெரும் மூச்சுத் திணறல் ஏற்பட ஆரம்பித்தது. மூன்று நாட்கள் தொடர்ந்த இந்த பிரச்சனை இறுதியில் உயிரையே பறித்து விட்டது என்று கூறுகிறார் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் இளையராஜாவிற்கு தனது மகளின் பிரிவு ஒரு ஆறாத துயராக அமைந்துள்ளது.