Tag Archives: பாலிவுட் திரைப்படம்

மாநாடு திரைப்படத்தில் வர்ற மாதிரி திருமணத்துக்கு முதல் நாளில் சிக்கிய ஹீரோ..! Bhool chuk maaf Movie Review

பாலிவுட்டில் டைம் லூப் கதை அம்சத்தில் உருவான திரைப்படம் தான் Bhool chuk maaf. இந்த திரைப்படத்தை கர்ணன் சர்மா என்பவர் இயக்கி இருக்கிறார்.

நடிகர் ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது படத்தின் கதாநாயகனான ரஞ்சன் திவாரிக்கு ஒரு காதலி இருக்கிறார். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ரஞ்சனுக்கு ஏற்படுகிறது.

அதனை தொடர்ந்து ரஞ்சன் குறுக்கு வழியில் அந்த அரசு வேலையை பெற நினைக்கிறார். அதற்காக ஒரு ஏஜண்டிடம் சென்று பணமும் கட்டுகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு அரசு வேலையும் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முதல் நாள் மஞ்சள் விழா என்கிற விழா நடக்கிறது.

அந்த விழா முடிந்ததும் தூங்க செல்கிறார் ரஞ்சன் ஆனால் மறுநாள் எழும்பொழுது திருமண நாளுக்கும் பதிலாக மீண்டும் அந்த மஞ்சள் நாளே இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் போது மறுநாள் முப்பதாம் தேதி வருவதற்கும் பதிலாக 29ஆம் தேதியிலேயே அவருடைய வாழ்க்கை நிற்கிறது. இந்த நிலையில் இது குறித்து ஜோசியரிடம் கேட்கும் பொழுது அவரால் காயப்பட்ட ஆத்மாவின் காரணமாக தான் இப்படி நடப்பதாக கூறுகிறார் ஜோசியர்.

இதனை தொடர்ந்து எதனால் இந்த பிரச்சனை தனது வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து ரஞ்சன் சரி செய்வது தான் கதையாக இருக்கிறது.

 

 

 

10,000 கோடி பட்ஜெட்.. என்ன ப்ரோ சொல்ரீங்க.. ராமாயணம் படம் குறித்து ரசிகர்கள் ரியாக்‌ஷன்..

நித்திஷ் திவாரி இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ராமாயணம். இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது உள்ளது.

நடிகர் ரன்பீர் கபூர் இதில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் கதாநாயகன் யஷ் நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து இப்போது இணையத்தில் சில விஷயங்கள் வெளியானது. அதாவது 10,000 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் திரைப்படம் உருவாகுவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துவிட்டது. மொத்த இந்தியாவின் சினிமா மார்கெட் என்பது 10,000 கோடி வசூலிக்கும் அளவிற்கு பெரிய மார்க்கெட் கிடையாது.

ஒரு படம் 2000 கோடி வசூலித்தாலே அது பெரிய சாதனை. எந்த படமும் இந்தியாவில் இதுவரை 2000 கோடி வசூலிக்கவில்லை. இந்த நிலையில் எப்படி 10,000 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் படம் உருவாகும் என கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.

 

 

பாலிவுட்டை அலறவிட்ட தண்ணீர் கேட்கும் பேய்… காதல் நடிகையின் லெவலே இனி வேற மாறி!.

ஆஷிக் 2 என்கிற திரைப்படம் மூலமாக ஹிந்தி சினிமாவிலும் இந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரதா கபூர். ஸ்ரதா கபூர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆஷிக் 2 திரைப்படத்தில் அவருக்கு சிறப்பான காட்சிகளும் கதை அமைப்புகளும் இருந்தது.

அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமே அவர்தான் என்பதால் அந்த படம் அவரை வெகுவாக தூக்கிவிட்டது. அதனை தொடர்ந்து ஓ.கே கண்மணி திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷனான ஓகே ஜானு திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஷ்ரதா கபூர்.

ஸ்ரதா கபூர்

அதில் மிக கவர்ச்சியாக அவர் நடித்திருந்தாலும் க்யூட்டான அவரது லுக்கிற்கு அடிமையான ரசிகர்கள் அந்த திரைப்படத்தை வெற்றி படமாக மாற்றினார்கள். அதனை தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் ஸ்ரதா கபூர்.

அதிகபட்சமாக அவர் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே ஸ்ரதா கபூர் முக்கிய கதாநாயகியாக நடித்த ஸ்திரி என்கிற திரைப்படம் ஹிந்தியில் வெளியானது. இந்தியா முழுவதும் உள்ள நாட்டார் பேய் கதைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. ஊருக்குள் இருக்கும் தண்ணீர் கேட்கும் பேய், தலையில் ஏறும் பேய் போல இந்த படத்திலும் ஒரு பேய் இருந்தது.

அந்த திரைப்படத்தின் கதைப்படி அந்த கிராமத்தில் ஒரு பேய் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கும். அது ஆண்கள் 6:00 மணிக்கு மேலே வெளியே வந்தால் அவர்களை தூக்கி சென்று விடும். அவர்களது ஆடைகளை மட்டும் போட்டுவிட்டு சென்றுவிடும்.

மறுநாள் காலையில் அவர்களது ஆடை மட்டும் கிடைக்கிறது என்றால் அந்த பேய் அவர்களை தூக்கி சென்று விட்டது என்று அர்த்தமாகும். வெளியில் செல்பவர்களை மட்டுமல்லாமல் வீட்டுக்குள்ளும் வந்து அந்த பேய் ஆண்களை கவர்ந்து செல்லக்கூடியது.

ஸ்திரி திரைப்படம்

இதனால் ஒவ்வொரு வீட்டிலும் நாளை வா என்று சிவப்பு நிற மையால் எழுதி வைத்திருப்பார்கள். அப்படி எழுதப்படாத வீடுகளுக்குள் அந்த பேய் புகுந்து விடும். இந்த நிலையில அந்த பேயை அடக்கும் மந்திரவாதியாக ஸ்ரதா கபூர் அந்த கிராமத்திற்கு வருவார் அதை வைத்து அந்த படத்தின் கதை செல்லும்.

இந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது இந்த படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் அந்த இரண்டாம் பாகம் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றிருக்கிற.

அந்த திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது பொதுவாக பெரிய பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மட்டும் தான் இப்படியான ஒரு வசூலை கொடுக்கும். இது பாலிவுட்டில் இருக்கும் மற்ற நடிகைகளை பொறாமை பட வைக்கும் விஷயமாக அமைந்திருக்கிறது ஏற்கனவே பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட இப்படியான ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்தது கிடையாது இதனால் அதிக பிரபலம் அடைந்திருக்கிறார் ஸ்ரதா கபூர்.

காதல் ஆசையில் செத்து போன சிறுவனின்  பிரேத ஆத்மா.. முஞ்சியா பேய் படம் எப்படி இருக்கு!..

பேய் படங்கள் என்றாலே வழக்கம் போல கெட்டவர்களால் கொல்லப்பட்ட பேய் பிறகு தன்னை கொன்றவர்களை பழிவாங்க வருவதாகதான் கதை இருக்கும். ஆனால் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பேய் படங்களில் வழக்கமான டெம்பிளேட்டுகளில் இருந்து எவ்வளவோ மாறிவிட்டார்கள்.

அப்படியாக தற்சமயம் இந்தியாவிலும் மாற்றமாக வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் முஞ்சியா. நம் நிலத்திலேயே நிறைய பேய் கதைகளும் சாமி கதைகளும் உள்ளன. ஆனால் யாரும் அதை படமாக்குவதில்லை. அப்படியாக திரைப்படமாக்கப்பட்ட திரைப்படம்தான் முஞ்சியா.

படத்தின் கதை:

படத்தின் கதைப்படி பல வருடங்களுக்கு முன்பு பிராமண சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் அவனை விட 7 வயது அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அவனது வீட்டில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மேலும் பிராமணருக்கு செய்யும் முடி மழிக்கும் தினத்தை அன்று செய்கின்றனர். அன்றைய இரவே தனது தங்கையை கிராமத்துக்கு அருகில் இருக்கும் காட்டுக்கு அழைத்து செல்லும் அந்த சிறுவன் அங்கு சாத்தான் வழிபாடு செய்கிறான்.

இறுதியாக ஒரு உயிரை அங்கு பழி கொடுக்க வேண்டும். அதற்கு தனது தங்கை உயிரையே பழி கொடுக்க பார்க்கிறான். ஆனால் தவறுதலாக அந்த போராட்டத்தில் அவன் இறந்துவிடுகிறான்.

முடி மழிப்பு நடந்து பத்து நாட்களுக்குள் உயிரிழக்கும் பிராமண சிறுவன் பிரம்ம ராட்சஷனாக உருவெடுப்பான். இதனால் அவனது சாம்பலை ஒரு மரத்தில் புதைத்து அதில் மந்திர கயிறுகளை கட்டி அவனை சிறை வைக்கின்றனர்.

அவன் தான் முஞ்சியாவாக அங்கேயே இருந்து வருகிறான். அவனால் அந்த மரத்தை தாண்டி எங்கும் செல்ல முடியாது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து அந்த தங்கை கதாபாத்திரத்தின் பேரன் தெரியாமல் அந்த காட்டுக்குள் சென்று முஞ்சியாவிடம் மாட்டி கொள்கிறான்.

முஞ்சியா அவனது தோளில் வேதாளம் போல ஏறிக்கொண்டு அதன் இஷ்டத்திற்கு பயன்படுத்துகிறது. இதில் இருந்து அவன் எப்படி தப்பிப்பான் என்பதே கதையாக இருக்கிறது. இந்த படமும் ஹிந்தியில் வந்துள்ளது. தமிழ் டப்பிங்கில் தாமதமாக வரும் என பேச்சுக்கள் உள்ளன.