Tag Archives: பூஜா ஹெக்தே

எனக்கு பிடிச்ச மூன்று நடிகர்கள் படம்.. ஆர்யா, விஜய் சேதுபதி லிஸ்டில் இந்த நடிகருமா? ஓப்பன் டாக் கொடுத்த பூஜா ஹெக்தே..!

தமிழில் கதாநாயகியாக அறிமுகமானாலும் கூட நடிகை பூஜா ஹெக்தேவிற்கு தொடர்ந்து தமிழில் வரவேற்புகள் கிடைக்காமல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறினார். தொடர்ந்து தெலுங்கில் டாப் நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்தே இருந்து வருகிறார்.

இவர் வெகு வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துவங்கி இருக்கின்றன. தமிழில் தற்சமயம் ரெட்ரோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்தே.

Pooja-Hegde

தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு பிடித்த திரைப்படங்கள் குறித்து அவர் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஆர்யா நடித்த சார்ப்பாட்டா பரம்பரை எனக்கு மிகவும் பிடித்த படம்.

அது மாதிரியான தரமான படங்கள் மிக குறைவுதான். அதே போல மகாராஜா திரைப்படம் மிகவும் பிடிக்கும். தெலுங்கு நடிகர் நானி நடித்த நின்னு கோரி என்கிற திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாகும். இதை எந்த பேட்டியிலும் நான் கூறியது கிடையாது என கூறியுள்ளார் பூஜா ஹெக்தே.

தமிழ் சினிமாவில் இதுவரை பண்ணாத விஷயம்.. முதல் முறையாக பூஜா ஹெக்தே செய்த விஷயம்.!

நடிகை பூஜா ஹெக்தே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். தமிழ் சினிமாவில்தான் ஆரம்பத்தில் அறிமுகம் ஆனார் என்றாலும் கூட அவருக்கு தெலுங்கு சினிமாவில்தான் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்தே. ஆனால் முகமூடி திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து பூஜா ஹெக்தே தமிழ் சினிமாவில் வரவேற்பை இழந்தார்.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்தார் பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் உள்ள டாப் நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்தே தற்சமயம் இருந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பீஸ்ட் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்தே.

அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் அடுத்து சூர்யா நடிக்கும் ரெட்ரோ திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இதுவரை பூஜா ஹெக்தே தமிழில் எந்த படத்திலும் தமிழில் டப்பிங் செய்தது கிடையாது. இந்த நிலையில் ரெட்ரோ திரைப்படத்தில் அவர் தமிழில் சொந்த குரலிலேயே டப்பிங் செய்துள்ளார்.

இதனை வைத்து பார்க்கும்போது தொடர்ந்து தமிழில் பிரபலமடைவதற்கு திட்டமிட்டுள்ளார் பூஜா ஹெக்தே என தெரிகிறது.

கூலி படத்தில் இணையும் முக்கிய நடிகை.. வரிசையாக தமிழில் வாய்ப்பு என்னவா இருக்கும்?

வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ரஜினி படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. கூலி திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

ஏனெனில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பதே பலரது ஆசையாக இருந்தது. ஒரு வழியாக அது நினைவாகும் ஒரு இடமாக கூலி திரைப்படம் இருக்கிறது.

கூலி திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக மக்கள் வெகுவாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று படம் குறித்து ஒரு அப்டேட் வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்று காலை நடிகை பூஜா ஹெக்தே கூலி திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்தே தற்சமயம் தமிழில் வரவேற்பை பெற்று வருகிறார். பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்து விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிக்கிறார்.

சூர்யா நடிக்கும் மெட்ரோ திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடிக்கிறார். அதே சமயம் இப்பொழுது கூலி திரைப்படத்திலும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் பூஜா ஹெக்தே.

அரேபியன் குதிரை மாதிரி.. ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் தளபதியோடு பூஜா ஹெக்தே.. ஆளை மயக்கும் கவர்ச்சி.. இதை கவனிச்சீங்களா?

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இங்கு அதிக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கு பிரபலம் அடைந்தவர்தான் நடிகை பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டே தமிழில் முதன் முதலில் முகமூடி திரைப்படத்தில் நான் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்திற்கு தமிழில் பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் சென்று முயற்சி செய்ய தொடங்கினார் பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவில் அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்தார் பூஜா ஹெக்தே.

 

பூஜா ஹெக்தேவின் புது லுக்:

தற்சமயம் தெலுங்கில் முக்கிய நடிகை ஆக இருந்து வருகிறார். வெகு காலங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் பூஜா ஹெக்தே.

 

இந்த திரைப்படம் ஓரளவு வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் மீண்டும் தற்சமயம் தளபதி 69 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்தே. இந்த நிலையில் நேற்று தளபதி 69 திரைப்படத்தின் பூஜை நடந்தது.

இதற்கு மிக அழகான உடைகள் உடுத்தி வந்திருந்தார் பூஜா ஹெக்தே. தற்சமயம் அந்த புகைப்படங்கள் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றன தளபதி 69 திரைப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி படமாக இருக்கும்.

ஏனெனில் இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும் இதற்குப் பிறகு பூஜா ஹெக்தேவிற்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

33 வயது ப்ளாப் நடிகையுடன் இணையும் விஜய்.. லாஸ்ட் பட கதாநாயகி..!

இந்த வருடத்தின் துவக்கத்திலேயே விஜய் கடைசியாக இரண்டு திரைப்படங்கள் மட்டுமே நடிக்க போவதாக அறிவித்திருந்தார். அதனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன.

அதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு நல்ல வசூலும் கிடைத்தது.

ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகி என்று பெரிதாக காட்சிகள் எதுவும் இருக்கவில்லை. அதனால் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகிக்கும் முக்கிய காட்சிகள் வைத்து திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்து விஜய் நடிக்கும் திரைப்படத்தில் முதலமைச்சராக நடிக்க இருக்கிறார்.

புது நடிகை:

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வந்தது. இந்த திரைப்படத்தில் பீஸ்ட் பட்த்தில் நடித்த பூஜா ஹெக்தே விஜய்க்கு ஜோடியாக நடிக்க போவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பூஜா ஹெக்தே நடித்த பீஸ்ட் திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதேபோல தமிழில் முதன் முதலில் இவர் நடித்த முகமூடி திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. இதனாலேயே பூஜா ஹெக்தே நடித்தால் அந்த படம் ஓடாது என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அனேகமாக தளபதியின் 69 ஆவது திரைப்படம் இந்த பேச்சை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இடத்தில் எண்ணெயை தடவி தழுக் மொழுக் அழகை காட்டும் பூஜா ஹெக்தே..!

தமிழில் அறிமுகமானாலும் கூட தமிழில் பெரிதாக வரவேற்புகளை பெறாமல் பிறகு தெலுங்குக்கு சென்று அங்கு பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்தே.

பூஜா ஹெக்தே நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்துவிடும். ஆனால் தமிழில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் மட்டும் பெரிதாக ஓடியது கிடையாது. உதாரணத்திற்கு அவர் முதன்முதலாக தமிழில் நடித்த திரைப்படம் முகமூடி.

அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியே பெறவில்லை. அதற்கு பிறகு வெகு வருடங்கள் அவர் தமிழில் நடிக்கவே இல்லை. பீஸ்ட் திரைப்படத்தில் தான் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அந்த படமும் போடாமல் போனது.

பூஜா ஹெக்தே:

ஆனால் உண்மையில் இந்த இரண்டு திரைப்படங்களுமே ஓடாமல் போனதற்கு படத்தின் கதைதான் காரணமே தவிர பூஜா ஹெக்தே கிடையாது என்பது பூஜா ஹெக்தேவின் ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது.

ஏனெனில் அவர்  தெலுங்கில் நடிக்கும் பெரும்பான்மையாக திரைப்படங்கள் வெற்றி படங்களாக இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது ராசியில்லாதவர் என்று பூஜா ஹெக்தேவை கூறுவது நியாயம் கிடையாது என்கின்றனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிடும் பூஜா ஹெக்தே சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகிறது. தனது மார்பு பகுதியில் எண்ணெய் போன்ற திரவத்தை தடவி சூரிய வெளிச்சம் படும் வகையில் அவர் வெளியிட்டு இருக்கும் அந்த புகைப்படங்களை தான் இப்பொழுது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

நீச்சல் உடையில் வேற மாதிரி போஸ்.. ட்ரெண்டாகும் பூஜா ஹெக்தே…

தமிழ் சினிமாவில் அறிமுகமாகியும் இங்கு வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு சினிமாவில் சென்று வரவேற்பை பெற்றவர்தான் நடிகை பூஜா ஹெக்தே. தமிழில் வெளியான முகமூடி திரைப்படம் மூலமாக முதன்முதலாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

அப்பொழுது மிக சிறு வயதில்தான் இருந்தார் பூஜா ஹெக்தே. ஆனால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தெலுங்கில் சென்று முயற்சி செய்தார்.

தெலுங்கில் அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நடிப்பை விடவும் அங்கு கவர்ச்சிக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

பூஜா ஹெக்தே வரவேற்பு:

ஒரு நடிகை நல்ல கவர்ச்சியாக நடித்தார் என்றால் அவருக்கு எப்போதுமே தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இருந்து வரும். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி கிடையாது.

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கவர்ச்சி மட்டுமே காட்டி ஒரு நடிகை இங்கு தொடர்ந்து வரவேற்பை பெற முடியாது இந்த நிலையில் பூஜா ஹெக்தே தெலுங்கில் அதிக வரவேற்பு பெற துவங்கினார்.

தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று  பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியை கண்டதாக கூறப்படுகிறது  இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்தே நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியைதான் காணும் என்று பேச்சுக்கள் வர துவங்கின.

தொடர்ந்து தோல்வி படம்:

இதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனாலும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியே வெளியிட்டு வரும் பூஜா தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.

பொதுவாகவே யோகா செய்வதை அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிடும் பழக்கம் கொண்டவர் பூஜா ஹெக்தே அந்த வகையில் நீச்சல் உடையில் யோகா செய்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படம் அழகாக இருப்பதால் இந்த புகைப்படம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

மீண்டும் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் ஏ.வி.எம் நிறுவனம்!.. விஜய் சேதுபதி.. பூஜா ஹெக்தே காம்போவாம்!..

Vijay sethupathy and AVM: தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் ஏ.வி.எம். ஏ.வி மெய்யப்ப செட்டியார் என்னும் நபர் தனது பெயரிலேயே இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏ.வி.எம் என பெயர் வைத்தார்.

எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் துவங்கிய ஏ.வி.எம் நிறுவனம் பல ஆண்டுகளாக தமிழில் பல திரைப்படங்களை தயாரித்து வந்தது. ஆனால் புது புது தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிக்கு இறங்கியதாலும், முன்பை போல் அல்லாமல் பட பட்ஜெட்டுகள் அதிகரித்ததாலும் ஏ.வி.எம் நிறுவனத்தால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை.

hegdepooja

இந்த நிலையில் சில காலங்களில் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்தது ஏ.வி.எம் நிறுவனம். தற்சமயம் உள்ள தலைமுறையினர் ஏ.வி.எம் என திரையில் வருவதை திரையரங்குகளில் பார்த்திருக்க வாய்ப்புகளே குறைவு என்கிற அளவில் காணாமல் போனது ஏ.வி.எம் நிறுவனம்.

இந்த நிலையில் ஏ.வி.எம் நிறுவனத்தை மறுபடி திறக்க உள்ளனர். அதன்படி தற்சமயம் பூஜா ஹெக்தேவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர் ஏ.வி.எம் நிறுவனம். ஆனால் கதாநாயகி தொடர்பான படம் என்பதால் யாராவது முக்கிய புள்ளி சில காட்சிகளில் நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார். எனவே இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு சில காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மியா கலிஃபா மாதிரி போஸ் கொடுத்த பூஜா ஹெக்தே!.. ரசிகர்கள் மனசு பத்திரம்!..

Telugu Actress Pooja Hegde : தமிழில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற கதாநாயகிகளில் பூஜா ஹெக்தேவும் முக்கியமானவர். தெலுங்கு சினிமாவில் பூஜா ஹெக்தேவிற்கும் நடிகை ராஸ்மிகா மந்தனாவிற்கும் இடையே பெரும் போட்டி இருந்து வருகிறது.

முதன் முதலாக தமிழில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனதன் மூலமாக தனது சினிமா பாதையை துவங்கினார் பூஜா ஹெக்தே. ஆனால் தமிழில் அவருக்கு அப்பொழுது பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடிப்பதற்கு முயற்சிகளை செய்தார்.

தெலுங்கு சினிமாவில் பூஜா ஹெக்தேவிற்கு அதிகமாகவே வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஏனெனில் தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே கதாநாயகியாக இருந்தாலும் பெரிதாக வர முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நடிகைகளின் கவர்ச்சிக்குதான் அங்கு முக்கியத்துவம் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்கள் படத்தில் கூட தற்சமயம் கவர்ச்சி பாடல்கள் குறைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் தெலுங்கு சினிமாவில் பிரபலமாகி வந்த பூஜா ஹெக்தேவிற்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் உண்டாக்கினர் ஏனெனில் அவர் நடித்த சில திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகின.

அதன் பிறகு தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்தே கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட பூஜா ஹெக்தே நல்ல வரவேற்பு பெற்றார் தற்சமயம் நடிகை மியா கலிஃபா அணிவது போன்ற கண்ணாடியை அணிந்து பூஜா ஹெக்தே வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

அவள் உலக அழகியே..! – பூஜா ஹெக்தேவின் அசத்தும் புகைப்படங்கள்..

பல நடிகைகள் வேறு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமடைந்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் பிரபலமாக முடியாமல் தெலுங்கு சினிமாவிற்கு சென்று பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்தே.

தமிழில் முதன் முதலாக முகமூடி திரைப்படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்தே. ஆனால் அந்த படத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனையடுத்து தெலுங்கு சினிமாவில் முயற்சித்தார் நடிகை பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவிற்கு சென்ற சில காலங்களிலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து  தெலுங்கில் அனைத்து முக்கிய கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்தே.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் வெகு காலங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலும் பூஜா ஹெக்தேவிற்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தொடர்ந்து பாலிவுட்டிலும் கூட சில படங்களில் நடித்துவிட்டார் பூஜா ஹெக்தே. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் பூஜா ஹெக்தே புகைப்படங்கள் வெளியிடுவதுண்டு. தற்சமயம் அப்படியாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கொஞ்சமா குறைச்சு காட்டுறேன்! –  பளிங்கு தொடையை பளிச்சென காட்டும் பூஜா ஹெக்தே!

தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்தே. பல கதாநாயகிகள் வெளி சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமடைந்துள்ளனர்.

ஆனால் பூஜா ஹெக்தே மட்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியும் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிற்கு சென்று பிரபலமானார். ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவிலும் கூட பூஜா ஹெக்தேவிற்கு பெரும் ரசிக வட்டாரம் உருவாகியுள்ளது.

அவர் நடிப்பில் வெளியான டி.ஜே, அல வைகுந்தபுரம் போன்ற படங்கள் மூலம் ஏற்கனவே பலரும் பூஜா ஹெக்தேவிற்கு ரசிகனாக இருந்தனர். தற்சமயம் பீஸ்ட் திரைப்படம் மூலமாக தமிழுக்கு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்தே.

தற்சமயம் பாலிவுட் வரை சென்று தனது நடிப்பு திறமையை காட்டி  வருகிறார் பூஜா ஹெக்தே. இந்த நிலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மினுக்கும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

பையா 2வில் நான்தான் ஹீரோயின்! – பாலிவுட் பிரபலத்தை தூக்கிவிட்டு உள்ளே நுழைந்த பூஜா ஹெக்தே!

 தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்தே.  ஆனால் அந்த படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  தற்சமயம் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்து  பெரும் ஹிட் கொடுத்த பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டுள்ளன.

 இதனை அடுத்து படத்தின் கதாநாயகியாக யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து பலவகையான குழப்பங்கள் நிலவி வந்தன.  பாலிவுட்டில் பிரபலமாக உள்ள  நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை  இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என திட்டமிடப்பட்டது.

 ஆனால் ஏற்கனவே ஜான்விகபூர் பாலிவுட்டில் பல படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால் வேறு  யாரை நடிக்க வைப்பது என்பது குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் தற்சமயம் பூஜா ஹெக்தேவை இந்த படத்தில்  ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து தற்சமயம் பூஜா ஹெக்தேவிடம்  பேசி வருகின்றனர். இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வரவில்லை.