தமிழ் சினிமாவில் இதுவரை பண்ணாத விஷயம்.. முதல் முறையாக பூஜா ஹெக்தே செய்த விஷயம்.!
நடிகை பூஜா ஹெக்தே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். தமிழ் சினிமாவில்தான் ஆரம்பத்தில் அறிமுகம் ஆனார் என்றாலும் கூட அவருக்கு தெலுங்கு சினிமாவில்தான் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்தே. ஆனால் முகமூடி திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து பூஜா ஹெக்தே தமிழ் சினிமாவில் வரவேற்பை இழந்தார்.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்தார் பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் உள்ள டாப் நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்தே தற்சமயம் இருந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பீஸ்ட் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்தே.
அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் அடுத்து சூர்யா நடிக்கும் ரெட்ரோ திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இதுவரை பூஜா ஹெக்தே தமிழில் எந்த படத்திலும் தமிழில் டப்பிங் செய்தது கிடையாது. இந்த நிலையில் ரெட்ரோ திரைப்படத்தில் அவர் தமிழில் சொந்த குரலிலேயே டப்பிங் செய்துள்ளார்.
இதனை வைத்து பார்க்கும்போது தொடர்ந்து தமிழில் பிரபலமடைவதற்கு திட்டமிட்டுள்ளார் பூஜா ஹெக்தே என தெரிகிறது.