Tag Archives: Aishwarya Rajinikanth

சற்று முன் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர்?.. ரஜினி எடுத்த உடனடி முடிவுதான் காரணம்..!

Aishwarya Rajinikanth and Dhanush have been saying for a long time that they are going to get divorced, but now Rajinikanth has stopped the divorce.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது ஆரம்பம் முதலே ரஜினிகாந்த்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தி வரும் விஷயமாக இருந்தது.

என்னதான் இந்தியாவிற்கே பெரிய சூப்பர் ஸ்டார் என்றாலும் கூட தன்னுடைய பெண்ணின் வாழ்க்கை மோசம் அடைவதை எந்த ஒரு தந்தையாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் தொடர்ந்து இவர்களின் விவாகரத்தை தடுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார் ரஜினிகாந்த். இந்த வருட துவக்கத்தில்தான் ஐஸ்வர்யா ஜினிகாந்தும் தனுஷும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக கூறி நீதிமன்றத்தை அணுகி இருந்தனர்.

dhanush aishwarya

ரஜினிகாந்த் செய்த செயல்:

இந்த நிலைமையில் இது தொடர்பான வழக்கிற்காக அவர்களை நேரில் ஆஜராகும் படி நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் மூன்று முறை நீதிமன்றம் அழைத்தும் கூட இதுவரை ஒரு முறை கூட தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சென்று நீதிமன்றத்திலே ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இந்த நிலையில் இதற்கு ரஜினிகாந்த் தான் காரணம் என்று கூறப்பட்டது. இரு பக்கமும் ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தனுஷிற்கு இன்னமும் ரஜினிகாந்த் மீது அதிக மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது.

எனவே ரஜினிகாந்தின் பேச்சை ஏற்று அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது இதனை அடுத்து சீக்கிரத்திலேயே இந்த வழக்கை ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனுஷும் திரும்ப பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து இப்படி செய்யுறது சரியில்லை… தனுஷ்.. ஐஸ்வர்யா விவாகரத்தில் புது பிரச்சனை.!

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த விஷயங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

சில வருடங்களாகவே தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்த வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதேபோலவே இதற்கு நீதிமன்றம் சென்று வழக்கும் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆஜராகுமாறு கூறியும் அவர்கள் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக ஆஜராகும் படி கூறியிருந்தனர்.

விவாகரத்து பிரச்சனை:

dhanush aishwarya

ஆனால் இன்றும் அவர்கள் ஆஜராகவில்லை. இந்நிலையில் மீண்டும் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதுதான் இப்பொழுது பேச்சாக இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்துக்கு தனுஷும் அவரது மனைவியும் பிரிவதில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ரஜினிகாந்த் இவர்கள் இருதரப்பிலும் பேசி வருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் விவாகரத்து குறித்த விஷயங்கள் தாமதமாகி வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதிகபட்சம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சேருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இனிமே பிரிய வாய்ப்பு இல்லை.. ரஜினி செய்த வேலை.. அப்படி என்ன ஆச்சி.. கடுப்பான நீதிமன்றம்.!

ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ். அவரை திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில் தனுஷ் குறித்து எந்த ஒரு சர்ச்சையும் தமிழ் சினிமாவில் இல்லாமல் இருந்தது.

ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து தனுஷ் குறித்து நிறைய சர்ச்சைகள் உருவாக துவங்கின. இதனை தொடர்ந்து தனுஷ்க்கும் அவரது மனைவிக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஆரம்பித்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இனிமே பிரிய வாய்ப்பு இல்லை

ஆனால் ரஜினிகாந்த்க்கு இதில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. தனது மகள் கணவனுடன் ஒன்றாக வாழ வேண்டும் ஏனெனில் அவர்களுக்கு குழந்தை பிறந்து அந்த பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். இதற்குப் பிறகு விவாகரத்து செய்துகொண்டு ஆஜராகும் படி ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் ஒரு தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த தேதியில் ரஜினிகாந்த் திட்டமிட்டு இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக விடாமல் செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது அதற்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் தனுஷிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது என்று கூறப்படுகிறது.

தனுஷ் விவாகரத்து:

தனுஷிற்கு தனது மனைவியை பிரிவதில் பெரிதாக ஆர்வமில்லை என்று தெரிகிறது. எனவே மகனுக்காக திரும்ப இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கூறியிருந்தும் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் நவம்பர் மாதம் அவர்கள் ஆஜராகும் தேதியை மாற்றி வைத்திருக்கிறது நீதிமன்றம். ஆனால் அப்பொழுதும் அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக மாறும் என்று ஒரு பேச்சு இருக்கிறது.

முழு மனசோட விவாகரத்து பண்ணல.. தனுஷ் இப்படி செய்ய என்ன காரணம்?

தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். அதே சமயம் சினிமா வட்டாரங்களில் அதிக சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் தனுஷ் இருந்து வருகிறார்.

தனுஷ் நிறைய நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்று பரவலாக சினிமாவில் ஒரு குற்றச்சாட்டு உண்டு. என்றாலும் இதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இருந்தது கிடையாது. ஆனாலும் எந்த ஒரு நடிகையின் விவாகரத்து நடந்தாலும் அதற்கு காரணம் தனுஷ்தான் என்று கூறி வருவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

இந்த நிலையில் தனுஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து உண்டானது. அதனால் தற்சமயம் அவர்கள் இருவரும் பிரிவதற்கு முடிவெடுத்து இருக்கின்றனர். ஆனால் தனுஷிற்கு இதில் முழுவதுமாக விருப்பமில்லை.

விவாகரத்து முடிவு:

அவரது மனைவியின் வற்புறுத்தலால்தான் அவர் இந்த முடிவை எடுத்தார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போடும் பதிவுகளுக்கெல்லாம் இப்பொழுதும் லைக் தெரிவித்து வருகிறார் தனுஷ்.

மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமாவில் உள்ள இயக்குனர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் அவர்களது குழந்தைகளின் பள்ளி செலவுக்காக வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க போவதாக அறிவித்திருந்தார்.

இந்த விஷயத்தை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார் தனுஷ். எனவே தனுஷ் இன்னமும் தனது மனைவியை மறக்கவில்லை அவருடன் சேர்வதற்கு தான் காத்திருக்கிறார் என்று பேச்சுக்கள் எழ துவங்கியிருக்கின்றன.

அந்த நிலைல எங்கப்பாவை யாரும் பார்க்க கூடாதுன்னு நினைச்சேன்!.. ரஜினிகாந்தின் போட்டோவில் மனம் வருந்திய மகள்!..

Aishwarya Rajinikanth: தமிழ் சினிமாவில் எப்போதுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தின் பெருமைக்காகவே தொடர்ந்து அவர் நடித்து வருகின்றார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் 70 வயதிற்கு மேலாகியும் இன்னும் இப்படி ஒரு ஹீரோ அந்தஸ்தில் இருக்கிறார் என்றால் அது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவர் மட்டும்தான். இனி வரும் இளைய நடிகர்கள் வேண்டுமானால் அவர்களைப் போலவே வயதான பிறகும் கதாநாயகனாக நடிக்கலாம்.

rajinikanth

ஆனால் இவர்களுக்கு முன்பு இருந்த சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் இத்தனை வயது வரை கதாநாயகனாக நடிக்கவில்லை. ரஜினிகாந்த் எப்போதும் தன்னுடைய உண்மை நிலையை மக்கள் மத்தியில் காண்பிக்க கூடியவர்.

விஜய் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் தங்களுடைய நரைமுடியை வெளியில் காட்டுவதற்கே பயப்படும் பொழுது ரஜினிகாந்த் தன்னுடைய உண்மையான தோற்றத்தில்தான் அனைத்து விழாக்களுக்குமே வருவார். அதைப் பலரும் பார்த்திருப்போம் இந்த நிலையில் போன வருடம் மே மாதம் ரஜினியின் உடல் நிலையில் சில பிரச்சனைகள் இருந்தன அப்பொழுது அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தான் அவரைப் பார்த்துக் கொண்டார்.

கவலைப்பட்ட மகள்:

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கும் முன்பு ரஜினிகாந்த் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினிகாந்த் வீல் சேர் ஒன்றில் அமர்ந்திருப்பார். அதில் தனது தாய்க்கு இணையானவர் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என எழுதியிருந்தார் ரஜினி.

இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்பொழுது அந்த ஒரு பதிவிற்கு என்ன பதில் கூறுவதென்று எனக்கு தெரியவில்லை. முதலில் எனக்கு எனது தந்தையை மற்றவர்கள் இப்படி வீழ் சேரில் பார்க்கக் கூடாது என்றுதான் நான் விரும்பினேன்.

என்றுமே ரஜினிகாந்தை ஒரு திடமான மனிதராகத்தான் மக்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது தந்தைக்கு அப்படி எல்லாம் எண்ணமில்லை அவரை பொறுத்தவரை அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவர் மக்கள் மத்தியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்.

இருந்தாலும் எனக்கு அந்த பதிவு போட்ட பொழுது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் என்னை தாய் என்று கூறியிருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியும் கொடுத்தது. அதனால் அந்த பதிவிற்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

சீப்ப ஒளிச்சி வச்சதாலதான் படம் ஓடலை!.. லால் சலாம் படம் தோல்வி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்லும் காரணம்!..

Lal salaam: தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த ரஜினிக்கு தற்சமயம் மீண்டும் ஒரு தோல்வி படமாக லால் சலாம் திரைப்படம் அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு அவர் நடித்த திரைப்படங்களில் தர்பார் திரைப்படம் பெரிதாக வசூலாகாமல் இருந்தது என்றாலும் கூட அந்த திரைப்படம் தோல்வி படமாக அமையவில்லை.

வழக்கமாக ரஜினி படம் கொடுக்கும் அளவிற்கான வசூலை கொடுக்கவில்லை அவ்வளவுதான். ஆனால் லால் சலாம் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த திரைப்படம் தோல்வியை கண்டுள்ளது. லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது லால் சலாம் திரைப்படம்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தோல்வி குறித்து படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறிய தகவல் என்று ஒரு விஷயத்தை வலைப்பேச்சு யூடியூப் தளத்தில் பகிர்ந்து இருந்தனர். அதில் கூறும்பொழுது லைக்கா நிறுவனம் சரியாக விளம்பரப்படுத்தாததே லால் சலாம் திரைப்படத்தின் தோல்விக்கு காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Lal-Salaam-3

உண்மையில் அந்த திரைப்படம் ரஜினி திரைப்படம் என்று மக்கள் மத்தியில் அறியப்படவில்லை. மிக தாமதமாகதான் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு வந்தார் ஆனால் பிறகு அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

இதுதான் படத்தின் தோல்விக்கு காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர் ஆனால் எப்படி இருந்தாலும் படத்தின் திரைக்கதையில் இருந்த தொய்வும் படத்தின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் விளம்பரப்படுத்தாதது தான் காரணம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறுவது சரி கிடையாது என்கின்றனர் நெட்டிசன்கள்.

ஏனெனில் லவ் டுடே குட் நைட் மாதிரியான சின்ன சின்ன திரைப்படங்கள் எல்லாம் லால் சலாம் திரைப்படம் அளவிற்கு கூட விளம்பரம் படுத்தப்படாத திரைப்படங்களாகும். ஆனால் அவையெல்லாம் பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. இப்படி இருக்கும் பொழுது லால் சலாம் தோல்விக்கு எப்படி விளம்பரம் காரணமாக இருக்க முடியும் என்பது நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது.

ஏற்கனவே ஊத்துன தோசைதான்!.. லால் சலாம் எப்படி இருக்கு!.. பட விமர்சனம்!.

Lal Salaam Movie Review: ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். மதநல்லிணக்கத்தை முக்கிய கருத்தாக வைத்து இந்த திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் முதலில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வந்த ரஜினி பிறகு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

படத்தின் கதை:

படத்தின் கதைப்படி அனைத்து மதத்தினரும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் கிரிக்கெட் விளையாடுபவர்களாக விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் இருக்கின்றனர்.

rajinikanth-lal-salaam

ஆனால் கிரிக்கெட் மூலமாக அந்த ஊருக்குள் சில பாகுபாடுகள் உருவாக துவங்குகின்றன. பிறகு அது வன்முறையில் முடிந்து அதனால் இரு ஊராருக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட துவங்குகின்றன. இந்த பிரச்சனையின் காரணமாக ஜெயிலுக்கு சென்று வரும் விஷ்ணு விஷால் திரும்ப ஊருக்கு வரும்பொழுது ஊரில் தேர் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் உருவாகின்றன.

ஆனால் அந்த தேர் திருவிழாவிலும் பிரச்சனைகள் உருவாகிறது இப்படியே அந்த பாகுபாடுகள் அதிகரிக்க அதிகரிக்க அது ஒரு கலவரத்தில் போய் முடிகிறது. சாதாரணமாக ஒரு நாட்டில் கலவரம் எப்படி உருவாகிறது என்பதன் ஒரு விளக்கமாகத்தான் திரைப்படத்தில் அந்த பகுதியை பார்க்க முடிகிறது.

இதற்கு நடுவே விக்ராந்தின் தந்தையாக ரஜினிகாந்த திரைப்படத்தில் வருகிறார். ரஜினிகாந்த் அதே ஊரை சேர்ந்தவர்தான் அதற்கு முன்பு மும்பையில் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தவர் ரஜினிகாந்த். மத நல்லிணக்கத்திற்காக குரல் கொடுப்பவராக இருக்கும் ரஜினிகாந்த் இந்த கலவரத்திற்கு பின்னால் இருக்கும் அரசியலை அறிந்து கொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கிறார்.

இதற்கு நடுவே விக்ராந்தும் விஷ்ணு விஷாலும் செய்யும் விஷயங்களையும் கொண்டு படத்தின் கதை நகர்கிறது.

 படத்தை பொறுத்தவரை படம் முழுக்க ஏ.ஆர் ரகுமானின் இசை பட்டையை கிளப்பி இருக்கிறது. ஆனால் திரைக்கதை அருமையாக இருந்தாலும் கூட இதுவரை பேசாத எந்த ஒரு விஷயத்தையும் இந்த திரைப்படத்தில் புதிதாக பேசிவிடவில்லை.

இதுவரை மத நல்லிணக்கம் குறித்து திரைப்படங்களில் என்னவெல்லாம் பேசப்பட்டுள்ளதோ அதையேதான் திரும்பவும் இந்த படத்தில் பேசி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு கிரிக்கெட்டை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி இருப்பது தான் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பே ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படமும் கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்ததால் இரண்டு படமும் ஒன்று போல் இருப்பதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? – வரிஞ்சிக்கட்டிக்கொண்டு வந்த இரண்டாவது மகள், ரஜினி எடுத்த துணிகர முடிவு

தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரு மகள்கள் உண்டு என்பதை நாம் அறிந்திருப்போம். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “3”, “வை ராஜா வை” ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்த நிலையில் அவர் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

“லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வெகு காலம் கழித்து ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதாலும் இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார் என்பதாலும் இத்திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் பொதுவாகவே சிறப்புத் தோற்றங்களில் நடிப்பதை சமீப காலமாகவே தவிர்த்து வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த வழக்கத்தையே நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில்தான் தனது மகள் இயக்கிய “லால் சலாம்” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தனது மகள் இயக்குகிறார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. அதாவது தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு வெற்றி இயக்குனராக கோலிவுட்டில் வலம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தந்தையாக அவர் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் பரவி வருகின்றன.

இது ஒரு புறமிருக்க, இப்போது தனது இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்காக ரஜினிகாந்த் ஒரு புதிய புராஜெக்ட்டை ஒப்புக்கொண்டுள்ளாராம். தனது சகோதரிக்காக கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்திடம் தற்போது “எனக்கும் கால்ஷீட் கொடுங்கள்” என கேட்டுள்ளாராம் சௌந்தர்யா.

அதன்படி ரஜினிகாந்த் தனது இரண்டாவது மகளுக்காக தனது பத்து நாட்களுக்கான கால்ஷீட்டை கொடுப்பதற்கான முடிவை எடுத்துள்ளாராம். அதாவது சௌந்தர்யா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம். அதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பதாக முடிவாகி உள்ளதாம். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறதாம்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இதற்கு முன் ரஜினிகாந்தை வைத்து “கோச்சடையான்” என்ற மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துடன் கூட ஒரு முழுநீள அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அத்திரைப்படம் சரியாக போகவில்லை. அதனை தொடர்ந்து தற்போது மிகவும் சாதுர்யமாக பேசி ரஜினிகாந்தை தனது புதிய திரைப்படத்தில் நடிக்க வைக்க ஒப்புதல் வாங்கியுள்ளாராம் சௌந்தர்யா. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.