Tag Archives: biggboss

சைடுல நடிக்கிறதுக்கு இதெல்லாம் தேவையா? அர்ச்சனாவை நேரடியாக கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த அர்ச்சனா..!

விஜய் டிவி சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்தவர் பிக்பாஸ் அர்ச்சனா.

விஜய் டிவி சீரியலில் நடித்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்டு மூலமாக உள்ளே செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற அர்ச்சனா முக்கிய போட்டியாளராக அங்கு மாறினார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பொழுது அர்ச்சனாவால் அவ்வளவு சிறப்பாக போட்டியிட முடியவில்லை. ஆனால் அதுவே மக்கள் மத்தியில் அவர் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் அர்ச்சனா.

இந்த நிலையில் அதனை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தார் அர்ச்சனா. இவருக்கு டிமான்டி காலனி பாகம் இரண்டில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து இப்பொழுது அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி பாகம் 3 வேலைகளை ஈடுபட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அந்த படத்திற்கான பூஜையும் நடந்தது இந்த பூஜையில் அர்ச்சனாவும் கலந்து கொண்டார்.

மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் டிமான்டி காலனி திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் அதில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் ஹீரோயின் ஆகவா நடிக்கிறீர்கள் சைடு ரோலில் தானே நடிக்கிறீர்கள் என்று கிண்டல் செய்து பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அர்ச்சனா நிறைய தன்னம்பிக்கையுடன் தான் போராட வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு கல்லாக தாண்டி தான் முன்னேற முடியும் உங்களைப் போன்ற எதிர்ப்பவர்கள் எத்தனையோ பேரை சந்தித்துதான் மேலே வர வேண்டி இருக்கிறது என்று காட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்.. இதுதான் காரணம்.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளியாக இரண்டு நிகழ்ச்சிகள்தான் விஜய் டிவியை இன்னமும் தமிழ் சின்னத்திரை சேனல்களில் தனித்துவமானதாக காட்டி வருகிறது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக் பாஸ் ஜனவரி மாதம் முடிந்தது. இனி அடுத்து இந்த வருடத்தின் இறுதியில்தான் பிக் பாஸ் சீசன் 9 துவங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மீண்டும் துவங்கி தன்னுடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது. ஆனால் அதை யாரும் பார்க்கவில்லை.

ஏனெனில் ஒளிபரப்பான காலகட்டத்திலேயே அனைவரும் அதை பார்த்துவிட்டனர் என்பதால் பெரிதாக அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை இந்த நிலையில் கலர்ஸ் டிவி சேனல் தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி உள்ளது.

படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்…காலில் விழுந்த அடி.. பிக்பாஸ் ஜனனிக்கு ஏற்பட்ட விபத்து.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலர் தமிழில் பிரபலமாகி இருக்கின்றனர். ஒரு வகையில் பிக்பாஸ் இவர்கள் எல்லாம் பிரபலமடைவதற்கு அதிகமாக உதவுகிறது. இதனாலேயே சினிமாவில் பிரபலமாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே பிரபலமாக இருந்து பிரபலத்தை இழந்தவர்கள் தொடர்ந்து பிக்பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடிக்கின்றனர்.

அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை தமிழச்சிதான் நடிகை ஜனனி. பிக்பாஸில் இருந்த காலக்கட்டத்திலேயே ஜனனிக்கு பெரிய ரசிக பட்டாளம் இருந்து வந்தது.

அதற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க துவங்கின. நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் ஜனனி. அதனை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் நிழல் என்கிற திரைப்படத்தில் ஜனனி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்று கொண்டுள்ளன. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தப்போது அதில் ஜனனிக்கு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் அவருடைய காலில் அடிப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் அவர் ஒரு விழாவில் கலந்துக்கொள்ளும்போது காலில் கட்டு போட்டுக்கொண்டு கலந்துக்கொண்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் விரைவில் ஜனனி நலம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர்.

என் காதல் தோல்விக்கு காரணமே பிரியங்காதான்.. போட்டுடைத்த அன்ஷிதா..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அன்ஷிதா. அன்ஷிதா நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதற்கு முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது.

குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக அன்ஷிதா அறிமுகமாகியிருந்தார். அதன் மூலம் வரவேற்பை பெற்று பிக்பாஸில் இருந்து வந்தார். ஆனால் சில காலங்கள் மட்டுமே அவர் பிக்பாஸில் இருந்து வந்தார்.

anshita

அதற்கு பிறகு பிக்பாஸில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துள்ளார். எனது காதலனிடம் நான் எப்போதும் கெஞ்சிய வண்ணம் இருப்பேன்.

ஒருமுறை இதுக்குறித்து பிரியங்கா அக்கா எனக்கு அட்வைஸ் செய்தார்கள். அவர்கள் கூறும்போது எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது என அவர் கூறியிருந்தார். அந்த ஒரு விஷயம்தான் என் காதலை விட்டு பிரிய எனக்கு தைரியம் கொடுத்தது என கூறியுள்ளார் அன்ஷிதா.

எதுக்கு இந்த வேலை பாக்குறீங்க.. சௌந்தர்யாவை ஜெயிக்க வைக்க மோசடியில் இறங்கிய காதலர்.. கண்டுப்பிடித்த பிக்பாஸ் பிரபலம்!.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியப்போது அதில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான போட்டியாளராக சௌந்தர்யா இருந்து வந்தார்.

ஏனெனில் சௌந்தர்யா நஞ்சுண்டான் வந்த ஆரம்பத்தில் முதல் 2 வாரங்கள் எதுவுமே செய்யாமல் இருந்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது கேம் வேறு விதமாக இருந்தது. மக்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டார். தற்சமயம் பிக்பாஸ் ஃபைனல் வின்னருக்கான ஓட்டெடுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜெயிப்பதற்காக சௌந்தர்யா சில மோசடி வேலைகளில் இறங்கியுள்ளதாக முன்னால் பிக்பாஸ் பிரபலமான ஷனம் ஷெட்டி கூறியுள்ளார்.

soundarya

அவர் கூறும்போது சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு ஓட்டு போடுவதற்காக ஒரு மொபல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் ஓட்டு போட முடியும். இந்த நிலையில் சௌந்தர்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய மொபைல் எண் போல அந்த எண்ணை பதிவு செய்து வைத்துள்ளார்.

அவருக்கு 5 லட்சம் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் சௌந்தர்யாவின் நம்பர்தான் அது என நினைத்து அந்த எண்ணுக்கு போன் செய்து வருகின்றனர். இதன் மூலமாக அவருக்கு ஓட்டு கிடைத்து வருகிறது. மேலும் அவருடைய காதலன் விஷ்ணுவும் அவர் பங்குக்கு ஒரு விஷயத்தை செய்து வருகிறார்.

அதாவது இன்பாக்ஸில் அர்ஜெண்ட் உடனே இந்த நம்பருக்கு போன் செய்யவும் என சௌந்தர்யா நம்பரை ரசிகர்களிடம் ஷேர் செய்து வருகிறாராம் விஷ்ணு. ரசிகர்களும் என்னவோ ஏதோவென அந்த நம்பருக்கு போன் செய்கின்றனர். அதன் மூலம் சௌந்தர்யாவுக்கு ஓட்டு கிடைக்கிறது என கூறியுள்ளார் ஷனம் செட்டி.

அந்த நாய் கூட போய் ப#த்துட்டு வந்தியா? அர்னவிற்கும் மனைவிக்கும் இடையே வந்த சண்டை.. வெளிப்படையாக கூறிய அர்னவ்.

சீரியல்களில் நடித்து பலர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதை பார்க்க முடியும். அப்படியாக சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்னவ்.

சன் டிவியில் ஒளிப்பரப்பான சக்தி என்கிற சீரியல் மூலமாக 2014 ஆம் ஆண்டு இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்து வந்தன.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான செல்லம்மா சீரியல் இவருக்கு முக்கியமான சீரியலாக இருந்தது. அந்த சீரியலில் நடித்ததன் மூலமாக இன்னமுமே அதிகமாக பிரபலமடைந்தார் அர்னவ்.

இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில்தான் இவரது சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியானது. இவர் பெண்களுடன் தவறான உறவில் இருப்பதாகவும் மேலும் அவரது மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் மற்ற பெண்களுடன் போனில் பேசிய ஆடியோவையும் லீக் செய்தனர். இதனால் மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்ற ஆர்னவ் சென்ற இரண்டு வாரங்களிலேயே வெளியே வந்துவிட்டார்.

இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும்போது தன்னுடைய மனைவிதான் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். ஒரு நாள் நண்பன் வீட்டில் தங்கிவிட்டு வந்தேன். அப்போது என்னை அந்த நாயோட படுத்துட்டு வர்றீயா என கேட்டார். என்று அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் அர்னவ்.

அது எத்தனை இருக்கு.. நான் மனைவியா? இல்ல வேற எதுமா?.. ஏடாக்கூட கேள்வியால் கடுப்பான தீபக் மனைவி.!

சில பிரபலங்கள் சினிமாவில் நடித்ததின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஆனால் சிலர் சீரியல் போன்ற சின்னத்திரை விஷயங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள்.

அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் தீபக் பல காலங்களாகவே சீரியல்களில் இவர் நடித்து வருகிறார் சொல்ல போனால் சீரியல்களில் உள்ள முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம்.

சீரியல்களில் மட்டுமல்லாமல் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து இருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட முக்கிய போட்டியாளராக தீபக் இருந்து வந்தார்.

அந்த அளவிற்கு தீபத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது இவருக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது தீபக் பிரபலமாக இருந்து வருவதால் அவரை நிறைய பேர் பேட்டி எடுத்து வருகின்றனர்.

அப்படியாக விஜய் டிவி குரேஷி ஒரு youtube பேட்டியில் அவரிடமும் அவரது மனைவி சிவரஞ்சனியிடமும் கேள்விகள் கேட்டிருந்தனர். அப்பொழுது சிவரஞ்சனியிடம் தீபக் எத்தனை செருப்புகள் வைத்திருக்கிறார் என்று கேட்டிருந்தனர்.

இதை கேட்டதும் தீபக்கின் மனைவி கோபமடைந்து விட்டார். நான் அவருக்கு மனைவி தானே தவிர அசிஸ்டன்ட் கிடையாது. அவர் எத்தனை செருப்புகள் வைத்திருக்கிறார் என்று கணக்கு பார்த்துக்கொள்வது என்னுடைய வேலை கிடையாது என்று கூறியிருந்தார் இந்த பேட்டி இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

சீரிஸ் வந்த காலம் முதலே சௌந்தர்யாவுக்கு இருந்த உறவு… இது தனி கதையா இருக்கே..!

சௌந்தர்யா மற்றும் விஷ்ணு இவர்களின் காதல் குறித்த விஷயம் இப்போது அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை சௌந்தர்யா. அதற்கு முன்பு நிறைய படங்களிலும் லவ் தொடர்களிலும் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது.

அதேசமயம் அவருக்கென்று ஒரு பெரிய ரசிக்கப்பட்டாளமும் உருவானது பலரும் சௌந்தர்யாவை விரும்பி வந்தனர் என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் சௌந்தர்யா வேறு ஒரு நபரை விரும்புகிறார் என்பது ரசிகர்கள் பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வருகிறது.

வேற மாதிரி ஆபீஸ் என்கிற சீரியஸில் நடித்த காலம் முதல் சௌந்தர்யாவிற்கும் விஷ்ணுவிற்கும் பழக்கம் உண்டு. அப்போது இருந்தே இருந்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தாற் போல பிக்பாஸ் வீட்டில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சௌந்தர்யா விஷ்ணுவிடம் கேட்டுள்ளார்.

இன்னொரு பக்கம் ரசிகர்கள் கூறும்போது பிக் பாஸில் ட்ரெண்டாக வேண்டும் என்று பலரும் இப்படி காதலிப்பதாக பிக் பாஸில் கூறுவது உண்டு. ஆனால் வெளி உலகில் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பார்கள் ஏற்கனவே இதே மாதிரி சில பிரபலங்கள் பிக் பாஸில் செய்திருக்கின்றனர் என்கின்றனர் ரசிகர்கள்.

இந்த மாதிரி வார்த்தையை எப்படி விடலாம்..! முத்துக்குமாருக்கும் அருண் அப்பாவுக்கும் வந்த பிரச்சனை..!

எப்போதுமே ஓயாத ஒரு பஞ்சாயத்தாக தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்துகள் தான். ஒருவருக்கொருவர் நடக்கும் சண்டைகள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றுகிறது.

அதனாலேயே அவர்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் விதமாக டாஸ்க்குகளை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் வழங்கி வருவார்கள். சிலர் மனரீதியாக பாதிக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விடுவதும் உண்டு.

போன வருடம் ஜிபி முத்து, பவா செல்லதுரை போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதால் வெளியேறினார். அந்த அளவிற்கு தொடர்ந்து டார்ச்சர்கள் என்பது பிக் பாஸில் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸில் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களின் பெற்றோர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணம் இருக்கின்றனர். அப்படியாக வந்த அருணனின் தந்தை முத்துக்குமார் குறித்து குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது மஞ்சரி அவரின் பொம்மையை தலையை திருப்பி அருண் எரிந்ததை தவறாக பேசினார். அதை ஒரு காமெடிக்காக தான் அருண் செய்தார்.

ஆனால் முத்துக்குமரன் அருண் செய்கைகள் பிடிக்காத காரணத்தினால் அருணை ஏதாவது செய்து விட்டு போகலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினார். அது தவறு என்று கூறியிருக்கிறார் அந்த வீடியோ இப்பொழுது பிரபலமடைய துவங்கி இருக்கிறது.

 

 

சௌந்தர்யாவை பத்தி பேச எனக்கு விருப்பம் இல்ல.. ஆர்.ஜே ஆனந்தி அப்படி சொல்ல இதுதான் காரணம்?.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெகுவாக விளையாடவில்லை என்று முதல் இரண்டு வாரங்கள் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகை சௌந்தர்யா.

நடிகை சௌந்தர்யா உள்ளே சென்ற பொழுது இரண்டு வாரங்களுக்கு எதுவுமே செய்யாமல் இருந்தார். ஆனால் விஜய் சேதுபதி அதை ஒரு முறை சுட்டிக்காட்டிய பிறகு தொடர்ந்து அவரது ஆட்டம் என்பது தனியாக இருந்தது.

அவரது ஆட்டத்தை தொடர்ந்து மக்கள் விமர்சனம் செய்து வந்தாலும் கூட எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு சௌந்தர்யா தொடர்ந்து ப்ளே செய்து வந்தது அவருக்கு அதிக வரவேற்பை உண்டாக்கி தந்தது.

ஆர்.ஜே ஆனந்தி சொன்ன விஷயம்:

இந்த நிலையில் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஆர்.ஜே ஆனந்தி தற்சமயம் எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்த ஆர்.ஜே ஆனந்தியிடம் சௌந்தர்யாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த ஆர்.ஜே ஆனந்தி கூறும் பொழுது நான் சௌந்தர்யா பற்றி பேச விரும்பவில்லை. ஏனெனில் அந்த வீட்டுக்குள் இருந்தவரை சௌந்தர்யா எனக்கு ஒரு சகப் போட்டியாளர். அதனால் அவருக்கும் எனக்கும் நிறைய பிரச்சனைகள் இருந்திருக்கலாம்.

அதை வெளியில் வந்து பேசுவது சரி கிடையாது வெளி உலகத்தில் அவர் எனக்கு ஒரு போட்டியாளரே கிடையாது என்று கூறியிருக்கிறார் ஆர்.ஜே ஆனந்தி.

என் அப்பாவை அப்படி கேட்டேன்.. எந்த ஒரு மகளும் கேட்காத கேள்வி.. பிக்பாஸ் தர்ஷிகா கூறிய விஷயம்.!

பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த பிரபலங்களில் மிக முக்கியமானவர் தர்ஷிகா. தர்ஷிகாவை அதற்கு முன்பு பெரிதாக மக்களுக்கு தெரியாது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. முக்கிய அடையாளமாகவும் அமைந்தது. அதன் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் அனைவர் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் தர்ஷிகா என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து சினிமாவில் சாதனை செய்ய வேண்டும் என்பது தர்ஷிகாவின் ஆசையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் தனது தந்தை குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனது அப்பாவை நான் நேரில் பார்த்ததே இல்லை.

தர்ஷிகா கூறிய விஷயம்:

darshika

நான் சிறுவயதாக இருக்கும் பொழுது அவர் இறந்துவிட்டார். அதனால் அவரது முகம் கூட எனக்கு மறந்துவிட்டது ஒரு சமயம் ஒரு கல்யாண வீடியோவை எங்கள் வீட்டில் போட்டனர்.

அந்த வீடியோவில் எனக்கு பக்கத்தில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவர் யார் என்று தெரியாமல் எனது அம்மாவை கேட்டேன். அப்பொழுதுதான் அவர் எனது அப்பா என்று கூறினார்கள். அந்த அளவிற்கு அவரது முகம் எனக்கு மறந்து விட்டது என்று கூறியிருக்கிறார் தர்ஷிகா.

பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்குது.. மோசமான நிலைக்கு சென்ற ஸ்ருத்திகா.!

தமிழ்நாட்டில் துவங்குவதற்கு முன்பிருந்தே ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பல வருடங்களாக பாலிவுட்டில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது போலவே அங்கு நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டு பெண்ணான ஸ்ருத்திகாவிற்கு ஹிந்தி பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ருத்திகா நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலமாக இங்கு பிரபலமடைந்தார். இந்த நிலையில் தமிழில் பிரபலமானதை அடுத்து சுருதிஹாவிற்கு ஹிந்தி பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது.

கஷ்டப்படும் ஸ்ருத்திகா:

shruthika

ஹிந்தி பிக் பாஸில் சென்று கலந்து கொண்ட பிறகு ஸ்ருத்திகாவை பாலிவுட்டில் பலருக்குமே பிடிக்க தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் விரும்பும் ஒரு போட்டியாளராக மாறினார் ஸ்ருத்திகா.

இதனை அடுத்து அங்கு இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு இதனால் ஸ்ருத்திஹாவை பிடிக்காமல் போனது தொடர்ந்து இதனால் ஸ்ருதிஹாவை டார்கெட் செய்து அடித்து வந்தனர் போட்டியாளர்கள். இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஸ்ருத்திகா சமாளித்து வந்தார்.

ஆனால் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஸ்ருதிஹா மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருக்கிறார். இதனை பார்க்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் ஹிந்தி பிக் பாஸில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பத் துவங்கி இருக்கின்றனர்.