Tag Archives: citizen movie

படம் சக்ஸஸ் ஆனா அஜித் இயக்குனர்களுக்கு ஒண்ணு பண்ணுவாரு!.. யாருக்குமே தெரியாத சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்!..

Ajithkumar : தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். விஜய் படத்திற்கு சமமான ஒரு எதிர்பார்ப்பையும் வசூலையும் அஜித் படம் கொடுத்து வருவதால் தொடர்ந்து வரவேற்பை பெரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார்.

அஜித் நடித்த திரைப்படங்களில் அவருக்கு அடையாளமாக அமைந்த சில திரைப்படங்கள் உண்டு. அவையெல்லாம் அவரது திரை வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் ஆகும். ஒவ்வொரு நடிகருக்கும் அப்படியான திரைப்படங்கள் இருக்கும்.

அதே போல அஜித்திற்கு இருக்கும் படங்களில் முக்கியமான திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தை இயக்குனர் சரவண சுப்பையா இயக்கினார். இந்த படத்தை இவர் இயக்கும்போது தயாரிப்பாளருக்கு இந்த படம் பெரும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையே இருக்கவில்லை.

அதே சமயம் இந்த திரைப்படத்திற்கான பட்ஜெட்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இருந்தாலும் எதை பற்றியும் கவலைப்படாமல் அந்த படத்தை எடுத்து வந்தார் இயக்குனர். சிட்டிசன் வெளியான பிறகு எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது.

இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய இயக்குனர் கூறும்போது படம் வெற்றியடைந்ததும் தயாரிப்பாளர் ஒரு கார் வாங்கி கொடுத்து கையில் 50,000 பணமும் கொடுத்தார் என கூறினார். மேலும் அஜித் பற்றி ஒரு தகவலும் கூறினார்.

அஜித்திற்கு இயக்குனர் ஏதாவது பெரும் வெற்றி படங்களை கொடுத்தால் அந்த இயக்குனருக்கு அஜித் கார் வாங்கி தருவாராம். ஆனால் பெரிதாக அது வெளியில் தெரியாது. இந்த படத்தில் மட்டும் அஜித்தை முந்திக்கொண்டு தயாரிப்பாளர் எனக்கு கார் வாங்கி தந்துவிட்டார் என கூறினார் இயக்குனர் சரவண சுப்பையா..

மொத்த படத்துலையும் 4 வசனம்தான் உங்களுக்கு இருக்கும்!.. ரூல்ஸ் போட்டும் மீனா நடித்த படம்!..

Actress Meena : இப்போது உள்ளது போல சும்மா வந்துவிட்டு மட்டும் போவது போன்ற காட்சிகளுக்கெல்லாம் முன்பு கதாநாயகிகள் நடிக்க மாட்டார்கள் ஒரு நடிகை கதாநாயகியாக படத்தில் நடிக்கிறார் என்றால் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் இருக்க வேண்டும்.

முதல் திரைப்படம் ஆன என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்த பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் இருக்கிறது என்பதால் தான் அந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்தார் நடிகை மீனா. அதேபோல அவர் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் சின்ன பிள்ளையாக நடிக்கும் போது கூட முக்கிய கதாபாத்திரமாக தான் நடித்திருப்பார்.

அப்படிப்பட்ட மீனாவை ஒரு பத்து நிமிட காட்சிக்கு மட்டும் நடிப்பதற்காக அழைத்திருக்கின்றனர். மீனாவும் அதற்கு ஒப்புக்கொண்டு சென்று இருக்கிறார். அது வேறு எந்த திரைப்படமும் இல்லை. அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படம்தான்.

சிட்டிசன் திரைப்படத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் அஜித்துக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அந்த காட்சியை மீனாவிடம் விவரிக்கும் பொழுது பத்து நிமிடம் வந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு இருக்கும் வலிமையை மீனா புரிந்து கொண்டார். அதனால் பத்து நிமிடம் வந்தாலும் அது ஒரு முக்கியமான கதாபாத்திரமாக தான் இருக்கும் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார் மீனா.