Tag Archives: dhee

அந்த பொண்ணு என்னை விட திறமைசாலி.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சின்மயி..!

சமீப காலங்களாக பிரபலமானவராக பேசப்பட்டு வருகிறார் பாடகி சின்மயி. பாடகி சின்மயி வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்தார். தமிழில் மிக பிரபலமான பல பாடல்களை சின்மயி பாடியுள்ளார். அதற்கு பிறகு மீ டு பிரச்சனை வந்தப்போது துணிச்சலாக பேசியிருந்தார் சின்மயி.

அதில் வைரமுத்துவால் தனக்கு நடந்த விஷயங்களை இவர் வெளிப்படுத்தியது அதிக வைரலானது. தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதிலும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை என்கிற பாடலை சின்மயி பாடியிருந்தார்.

படத்தில் அந்த பாடலை தீ பாடியிருந்தார். ஆனால் அதை விட சின்மயி பாடியதுதான் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதுக்குறித்து சின்மயி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறும்போது அன்று தீ பிஸியாக இருந்ததால் நான் பாடினேன்,

ஆனால் இவர்கள் எனக்கும் அவருக்கும் ரெஸ்ட்லிங்கை ஆரம்பித்து வைத்துவிட்டனர். இன்னும் 15 வருடங்கள் கழித்து என்னையும் ஸ்ரேயா கோஷலையும் விட தீ பெரிய பாடகியாக இருப்பார் என கூறியுள்ளார் சின்மயி.

ஏமாற்றப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்! பாடகி தீ மற்றும் அறிவின் நிலை என்ன? ஸ்கேமில் சிக்கிய பிரபலங்கள்!

ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம்  ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என  வீடியோ போட்டு பதற வைத்த சந்தோஷ் நாராயணன், தற்போது அத்த பாடல் மூலம் ஏ.ஆர். ரஹ்மானும் ஏமாற்றப்பட்டுள்ளார் என மற்றுமொரு இடியை போட்டுள்ளார். 

 கடந்த 2021ம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் 487 மில்லியன் வியூஸ் கடந்து ஹிட் அடித்தது. பாடகி தீ மற்றும் அறிவின் குரல் மற்றும்  சந்தோஷ் நாராயணன் இசையில், பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல் அலற விட்டது. இந்த நிலையில் இந்த பாடல் குறித்து இன்னும் பல்வேறு சர்ச்சைகள் உருவாக்கி கொண்டே செல்கிறது. இரண்டு நாட்களுக்கு  முன்பு இந்த பாடல் மெல்லாம் ஒரு ரூபாய் கூட கிடைக்கவிலை என சந்தோஷ் நாராயணன் தந்து x தளத்தில் போட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

மேலும், சந்தோஷ் நாராயணனுக்கும் தெருக்குரல் அறிவுக்கும் இடையே சண்டை வெடிக்க காரணம், அவரை அசிங்கப்படுத்தியது மட்டுமல்ல எனவும் அந்த பாடலுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக கொடுக்கவில்லை என்பதும் தன எனவும் தற்போது தெரிய வந்திருக்கிறது.

மஜா எனும் யூடியூப் சேனல் மூலம் தான் இந்த என்ஜாய் எஞ்சாமியை வெளியிட்டனர். அந்த மஜா சேனல் ஏ.ஆர். ரஹ்மான் உடையது என்பதால், அவர் தான் ஏமாற்றி விட்டார் என பிரச்சனைகள் வெடித்த நிலையில், அதற்கும் சந்தோஷ் நாராயணன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மானின் கம்பெனி தான் மஜா என சொல்லப்பட்ட நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் எப்போதும் எனக்கு பெரிய தூணாக இருப்பவர். இந்த விஷயத்தில் அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார் என சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். பாடகி தீ மற்றும் அறிவுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும் விரைவில் எல்லாம் சரியாகும் என சந்தோஷ் நாராயணன் புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இசைத்துறையில் முன்னணியில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களே இப்படியொரு பெரிய ஸ்கேமில் எப்படி சிக்கிஇருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.