Tag Archives: dulquer salmon

நான் யாருன்னு தெரியுமா? விக்ரம் பிரபுவை கல்லூரியில் அதிர்ச்சியடைய வைத்த நடிகர்…

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் சிறந்த நடிகராக போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் மூன்றாம் தலைமுறையாக இன்றும் சிவா சினிமாவில் இருந்து வரும் ஒரு நடிகராக விக்ரம் பிரபு இருக்கிறார்.

விக்ரம் பிரபு சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவரை பெரிதாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, என்றாலும் அவர் நடித்த கும்கி, சிகரம் தொடு டானாகாரன், போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

அதனைத் தொடர்ந்து பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் விக்ரம் பிரபு நடித்து விட்டார். தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவர் கல்லூரியில் படித்த பொழுது அவருக்கு நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

விக்ரம் பிரபு கல்லூரியில் படிக்கும் போது அவர் படிக்கும் கல்லூரியில் தமிழர்களே இல்லை. சென்னையில் இருந்து அங்கு படிக்க வந்தவராக விக்ரம் பிரபு மட்டுமே இருந்தார். அதனால் விக்ரம் பிரபு மிகவும் கவலையில் இருந்தார்.

அந்த சமயத்தில் சென்னையிலிருந்து இன்னொரு நபரும் அங்கே படிக்க வந்திருந்தார். ஆனால் அவர் யார் என்று விக்ரம் பிரபுவுக்கு தெரியாது. அந்த நபரிடம் போய் விக்ரம் பிரபு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். அதன் பிறகு யார் அந்த நபர் என அவரிடம் கேட்கும் போது அந்த நபர் அதை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தார்.

பிறகு ஒரு நாள் விக்ரம் பிரபுவை சந்தித்த அவரது நண்பர் ”உங்கள் அப்பா பிரபுவை எனது தந்தை நேற்று சந்தித்தார் தெரியுமா?” என கூறியுள்ளார் அப்பொழுதுதான் விக்ரம் பிரபு யோசித்துள்ளார். ஒருவேளை பெரும் பிரபலத்தின் மகனாக இவர் இருப்பாரோ? என்று யோசனையில் இருந்தவர் பிறகு யார் என கேட்டு பல நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களின் மகனா நீ என்று கேட்டுள்ளார் விக்ரம் பிரபு.

ஆனால் இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருந்த அந்த நபர் கடைசியில் என்னுடைய அப்பா மம்முட்டி மலையாள நடிகர் என கூறினார். அப்படி கூறியது வேறு யாரும் அல்ல துல்கர் சல்மான் தான் அந்த நபர். அப்பொழுது இருந்தே விக்ரம் பிரபுவும் துல்கர் சல்மானும் நண்பர்களாக இருந்துள்ளனர் என்பது பலரும் அறியாத விஷயமாகும்.