Tag Archives: விக்ரம் பிரபு

சூர்யா தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குனர்.. வாயை விட்டதால் வந்த வினை..!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற படமாக லவ் மேரேஜ் என்கிற திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார்.

திருமணம் செய்யும் பொழுது அதில் நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார்.

சமீபத்தில் அவர் பேசிய விஷயங்கள்தான் அதிக வைரலாகி வருகிறது சமீபத்தில் ஒரு பேட்டியில் சண்முகப்பிரியன் பேசும்பொழுது சிவகார்த்திகேயன் குறித்த ஒரு விஷயத்தை பேசி இருந்தார்.

அதாவது சிவகார்த்திகேயன் சமீப காலங்களாக வெற்றி படங்களை கொடுத்து வரும் புதிய இயக்குனர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது குறித்து பேசிய சண்முக பிரியன் கூறும்பொழுது சிவகார்த்திகேயன் இப்படி செய்யும் பொழுது அதை பலரும் விமர்சனம் செய்கின்றனர்.

அதுவே தனுஷ் அல்லது சூர்யா செய்யும் பொழுது அவர்களை வாழ்த்தி பேசுகின்றனர். விமர்சிக்க வேண்டும் என்றால் அவர்களையும் விமர்சிக்க வேண்டும்தானே என்று கேட்டிருந்தார். இதனால் கோபமடைந்த தனுஷ் மற்றும் சூர்யா ரசிகர்கள் இப்பொழுது சண்முகப்பிரியனை தொடர்ந்து விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர்.

விக்ரம் பிரபு நடிப்பில் லவ் மேரேஜ் வெளியான ட்ரைலர்.. இந்த கதை எல்லோருக்கும் கனெக்ட் ஆகுமே..!

வெகு நாட்களுக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் லவ் மேரேஜ். இந்த திரைப்படத்தில் சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் மீனாட்சி தினேஷ் அருள்தாஸ் ரமேஷ் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சண்முக பிரியன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தைப் பொறுத்தவரை மலையாளம் போலவே மக்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறித்த படமாக லவ் மேரேஜ் இருக்கிறது.

தொடர்ந்து திருமணத்திற்காக அலையும் பெற்றோர்கள் மற்றும் ஆண்கள் குறித்து பேசும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே மக்களுக்கு நெருக்கமான ஒரு படமாக இது இருக்கும் கண்டிப்பாக வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டனையா தப்பா பேசுற!.. உதவி இயக்குனரை அடி நொறுக்கிய ஊழியர்!.. விக்ரம் பிரபு படத்தில் நடந்த சம்பவம்!.

Captain Vijayakanth: எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு நடிகராகவும் பெரும் வரவேற்பை பெற்றவர் என்றால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்தான். சினிமாவிற்கு முதன்முதலாக வாய்ப்பு தேடி வந்த பொழுது விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்டது சாப்பாட்டிற்காகதான்.

விஜயகாந்த் மட்டுமல்ல அப்போது வந்த ரஜினிகாந்த்தில் துவங்கி பல நடிகர்கள் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அவர்கள் யாருமே எளிய மக்களுக்கு உணவு கிடைப்பதற்காக உதவியை செய்வோம் என்று யோசிக்கவில்லை.

Vijayakanth

ஆனால் விஜயகாந்த் மட்டுமே அப்படி யோசித்தார். அதேபோல தான் பணிபுரியும் திரைப்படங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான உணவு கிடைக்க வேண்டும் என்பதையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் கொண்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த் தான்.

கோபமான ஊழியர்

இதனாலேயே சின்ன ஊழியர்கள் மத்தியில் விஜயகாந்த் குறித்து அதிக மரியாதை உண்டு. விக்ரம் பிரபு நடிப்பில் துப்பாக்கி முனை என்கிற திரைப்படம் தயாராகிக் கொண்டிருந்தபோது அந்த திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை அதில் பணிபுரிந்த நபர் பேட்டியில் கூடியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது துப்பாக்கி முனை திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது அங்கு உதவி இயக்குனர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த நபர்கள் விஜயகாந்தை கேலி செய்து நிறைய விஷயங்களை பேசி வந்தனர்.

Vijayakanth-1-1

இதனை அங்கிருந்த லைட் மாட்டும் ஊழியர் கேட்டுக் கொண்டிருந்தார் அவருக்கு இதை கேட்க கேட்க கோபம் வரவே வேகமாக சென்று அவர்களை அடித்து விட்டார். ஏன் அவர்களை அடித்தார் என பார்க்கும் பொழுது நீங்கள் இப்பொழுது சாப்பிடும் பிரியாணியே அப்போது விஜயகாந்த் எல்லோருக்கும் சமமாக உணவளித்ததனால் தான் கிடைத்தது.

அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார் அப்பொழுதுதான் விஜயகாந்த் மக்கள் மத்தியில் எப்படி ஒரு கதாநாயகனாக இருக்கிறார் என்று எனக்கு தெரிந்தது என்று அந்த நபர் கூறியிருக்கிறார்.

நான் யாருன்னு தெரியுமா? விக்ரம் பிரபுவை கல்லூரியில் அதிர்ச்சியடைய வைத்த நடிகர்…

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் சிறந்த நடிகராக போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் மூன்றாம் தலைமுறையாக இன்றும் சிவா சினிமாவில் இருந்து வரும் ஒரு நடிகராக விக்ரம் பிரபு இருக்கிறார்.

விக்ரம் பிரபு சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவரை பெரிதாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, என்றாலும் அவர் நடித்த கும்கி, சிகரம் தொடு டானாகாரன், போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

அதனைத் தொடர்ந்து பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் விக்ரம் பிரபு நடித்து விட்டார். தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவர் கல்லூரியில் படித்த பொழுது அவருக்கு நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

விக்ரம் பிரபு கல்லூரியில் படிக்கும் போது அவர் படிக்கும் கல்லூரியில் தமிழர்களே இல்லை. சென்னையில் இருந்து அங்கு படிக்க வந்தவராக விக்ரம் பிரபு மட்டுமே இருந்தார். அதனால் விக்ரம் பிரபு மிகவும் கவலையில் இருந்தார்.

அந்த சமயத்தில் சென்னையிலிருந்து இன்னொரு நபரும் அங்கே படிக்க வந்திருந்தார். ஆனால் அவர் யார் என்று விக்ரம் பிரபுவுக்கு தெரியாது. அந்த நபரிடம் போய் விக்ரம் பிரபு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். அதன் பிறகு யார் அந்த நபர் என அவரிடம் கேட்கும் போது அந்த நபர் அதை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தார்.

பிறகு ஒரு நாள் விக்ரம் பிரபுவை சந்தித்த அவரது நண்பர் ”உங்கள் அப்பா பிரபுவை எனது தந்தை நேற்று சந்தித்தார் தெரியுமா?” என கூறியுள்ளார் அப்பொழுதுதான் விக்ரம் பிரபு யோசித்துள்ளார். ஒருவேளை பெரும் பிரபலத்தின் மகனாக இவர் இருப்பாரோ? என்று யோசனையில் இருந்தவர் பிறகு யார் என கேட்டு பல நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களின் மகனா நீ என்று கேட்டுள்ளார் விக்ரம் பிரபு.

ஆனால் இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருந்த அந்த நபர் கடைசியில் என்னுடைய அப்பா மம்முட்டி மலையாள நடிகர் என கூறினார். அப்படி கூறியது வேறு யாரும் அல்ல துல்கர் சல்மான் தான் அந்த நபர். அப்பொழுது இருந்தே விக்ரம் பிரபுவும் துல்கர் சல்மானும் நண்பர்களாக இருந்துள்ளனர் என்பது பலரும் அறியாத விஷயமாகும்.