Tag Archives: kalainger

ஒரே கதைக்கு போட்டி போட்டு வசனம் எழுதிய கலைஞர், கண்ணதாசன்!.. கடைசில நடந்ததுதான் டிவிஸ்ட்டு..!

சினிமாவில் ஒரு படம் வெளிவர வேண்டும் என்றால் அதில் பலரின் பங்களிப்பு இருக்கும். ஆனால் முக்கியமாக ஒரு படம் உருவாகுவதற்கு காரணமாக இருப்பது அந்த படத்தில் கதை தான்.

இந்நிலையில் ஒரு படத்தின் கதை எவ்வாறு உள்ளதோ அதை பொறுத்து தான் அந்தப் படத்தின் வெற்றி அமையும். மேலும் அந்தப் படத்திற்கு பாடல்கள். வசனங்கள் என அனைத்தும் முக்கியம். மக்கள் மத்தியில் ஒரு படம் சென்றடைகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் கதை. வசனம் தான்.

அவ்வாறு ஒரு கதைக்கு இரண்டு பேர் போட்டி போட்டுக் கொண்டு எழுதிய வசனங்கள் கடைசியில் என்ன ஆயிற்று என்பதை பிரபல திரைப்படக் கலைஞர் கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திரைப்படக் கலைஞர் கலைஞானம்

இவரின் இயற்பெயர் கே. எம். பாலகிருஷ்ணன். இவர் திரைப்படங்களுக்கு கதை எழுதுபவர். மேலும் தயாரிப்பாளர், இயக்குன,ர் நடிகர், பாடலாசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். மேலும் 1960 முதல் 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இவர் பல மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 1966 ஆம் ஆண்டு காதல் படுத்தும் பாடு என்ற படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார். 1978ல் ரஜினிகாந்த் நடித்த பைரவி திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ஆறு புஷ்பங்கள்அல்லி தர்பார் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவ்வாறு பன்முகங்களைக் கொண்ட கலைஞானம் அக்காலகட்டத்தில் கருணாநிதியின் விஷக் கோப்பை, நஞ்சுக்கோப்பை போன்ற நாடகங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தற்பொழுது கவிஞர் கண்ணதாசன் மற்றும் கலைஞர் கருணாநிதியை பற்றி கூறியிருக்கும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். இவரின் பாடல்கள் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கிறார். இவருக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி

இவரை அறியாதோர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராவார். மேலும் 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர். அரசியலை தவிர்த்து இவர் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே கவிதை, இலக்கியம் நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.

போட்டி போட்டு வசனம் எழுதிய கதை

கவிஞர் கண்ணதாசன் அதுவரை கவிதைகளை எழுதி வந்த நிலையில், அவருக்கு சம்பளமாக நூறு, இருநூறு கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இது அவருக்கு கட்டுப்படியாகவில்லை. எனவே அப்பொழுது டி. ஆர் சுந்தரம், சுகம் மங்கை என்ற ஒரு ஆங்கில படத்தின் கதையை, தமிழில் வசனம் எழுதிக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதே கதையை கலைஞரும் ஹிஸ்டாரிக்கல் பாணியில் அம்மையப்பன் என்று எழுத இவ்விருவரும் அதற்கு வசனம் எழுதினார்கள். ஆனால் கடைசியில் இருவரும் எழுதியது தோல்வியில் முடிந்ததாக கலைஞானம் கூறினார். அந்த காலத்தில் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதுவதற்கு கிட்டத்தட்ட 25,000 ரூபாய் வரை பெற்று வந்தார் எனவும் அவர் கூறினார்.

கண்ணதாசன் பாடல், கவிதை எழுதுவதற்கு நூறு, இருநூறு பெற்று வந்த நிலையில் இந்த கதை எழுதும் பொழுது பத்தாயிரம் ரூபாய் வரை பெற்று வந்ததால், அவர் திரைக்கதை வசனங்கள் எழுதுவதில் இறங்கிவிட்டார் என கலைஞானம் கூறியிருக்கிறார்.

எனக்கு மரியாதை தராத சினிமாவே வேண்டாம்… தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய கலைஞர்!.. எல்லாம் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்!.

Kalaigar m karunanithi: சினிமாவில் பெரும் கலைஞர்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அதிகமாக கோபப்படுபவர்களாக இருப்பார்கள் எப்போதும் தங்களது சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அந்த வகையில் கலைவாணர் நாகேஷ் சிவாஜி கணேசன் எனப் பெரும் நடிகர்கள் யாரும் தங்களது சுயமரியாதையை விட்டுக்கொடுத்தது கிடையாது. அதையும் தாண்டி கண்ணதாசனிடம் ஒரு வார்த்தை தவறாக பேசினால் கூட அவர் படபிடிப்பை விட்டு கிளம்பி விடுவார் என்று பழைய சினிமா பிரபலங்கள் பலரே கூறியிருக்கின்றனர்.

அந்த வகையில் கலைஞர் மு கருணாநிதியும் முக்கியமானவர் கலைஞர் மு கருணாநிதி திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் பிரபலமானவர் அவர் வசனம் எழுதினாலே அந்த படத்தை பார்ப்பதற்கு அப்போது ஒரு கூட்டம் இருந்தது.

அதனால் கருணாநிதிக்கும் அதிக வரவேற்பு இருந்தது. சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதையை கலைஞர் மு கருணாநிதிதான் எழுதினார். அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தாலும் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வந்தார் கருணாநிதி.

ஏனெனில் பொதுவாக நல்ல படிப்பறிவு கொண்டவர்களுக்கு எளிதாக சினிமாவில் பாடல்களை எழுத அல்லது திரைக்கதையை எழுதுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. குறைந்த அளவிலான படிப்பை கொண்டிருந்ததால் கருணாநிதிக்கு அது கொஞ்சம் கடினமான காரியமாகவே இருந்தது.

இந்த நிலையில் அவர் அபிமன்யு என்கிற திரைப்படத்திற்கு வசனம் எழுதும் பொழுது பிரபலமாகாமல் இருந்தார் கருணாநிதி. அந்த திரைப்படத்திற்கான முழு வசனத்தையும் அவரே எழுதி கொடுத்தார். ஆனால் படம் வெளியான பொழுது படத்தில் பெயர் போடும் போது அதில் கருணாநிதியின் பெயரே இல்லை.

இதனால் கோபமான கருணாநிதி தயாரிப்பாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் நீங்கள் இன்னும் கொஞ்சம் பிரபலமாக வேண்டும் அப்பொழுதுதான் உங்கள் பெயரை போட முடியும் என்று கூறியுள்ளார். பிரபலமானாலும் ஆகாவிட்டாலும் சினிமாவில் உழைப்பிற்கான பலன் என்பது படத்தில் அவர்களது பெயரை போடுவது தான் அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும்.

அதனால் ஆரம்பகட்டமாகவே இருந்தாலும் இந்த விஷயங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருணாநிதி இனிமேல் நான் திரைத்துறைக்கு வரமாட்டேன் என்று கூறி கிளம்பிவிட்டார். அதன்பிறகு திரை துறையை சார்ந்த பிரபலங்கள் சிலர் அவரை சென்று நேரில் சென்று பார்த்து அவரிடம் மன்னிப்பு கேட்ட பிறகு கருணாநிதி மீண்டும் திரைத்துறைக்கு வந்தார்.

கேப்டன் மண்டபத்தை இடிப்பதற்காக கலைஞர் செய்த வேலை? பொறாமைதான் காரணமா?

தமிழ் சினிமாவில் கம்பீரமான நடிகராகவும், வள்ளலாகவும் அறியப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். பின்னர் தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்த அரசியல் தருணங்களும் நடந்தேறியது. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தபோது சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் கேப்டன் விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்ட சம்பவம்.

சென்னை கோயம்பேடு அருகே அமைந்திருந்த அந்த மண்டபம் வெறும் திருமண மண்டபம் மட்டும் அல்ல. பசி என்று வருபவர்களுக்கு விஜயகாந்த் செலவில் அங்கு அன்னதானமே நடத்தப்பட்டு வந்தது. கட்சி தொடங்கும் முன்னர் தேமுதிகவை இயக்கமாக கொண்டு விஜயகாந்த் செயல்பட்டு வந்தார்.

அந்த சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டு திருமணத்திற்கு விஜயகாந்த் சென்றுள்ளார். அதே திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும் சென்றுள்ளார். கருணாநிதி திருமணம் நடைபெறும் மண்டபத்தில் விஐபி சேரில் அமர்ந்திருக்கிறார். அப்போது கேப்டன் வருகிறார் என்ற குரல் கேட்கவும் அங்கு இருந்த மொத்த சனமும் விஜயகாந்தை காண ஆவலுடன் வெளியே ஓடிக் கூடியுள்ளனர்.

விஜயகாந்துக்கு கிடைத்த இந்த வரவேற்பும், அரசியலில் அவர் நுழைய இருப்பதும் கலைஞர் கருணாநிதியை கலக்கத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் கோயம்பேடு மேம்பாலம் கட்டும் சமயத்தில் அங்கு பாலம் கட்டும் வேலைக்காக விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடிக்க வேண்டும் என அதிகாரிகள் பேசினர். இதுகுறித்து விஜயகாந்த் நேரடியாக கலைஞர் கருணாநிதியை சந்தித்து மண்டபம் பலரும் பசியாறும் இடமாக இருக்கிறது. அதை இடிக்காமல் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டாராம்.

ஆனால் கலைஞர் கருணாநிதி தன் கையில் ஒன்றும் இல்லை என்றும், இது மத்திய அரசு செய்யும் பணி என்றும் சொல்லி கைவிரித்து விட்டாராம். பலர் பசியாறிய அந்த மண்டபம் பாலப் பணிகளுக்காக இடிக்கப்பட்டாலும், அந்த பாலம் அதிகம் பயன்படுத்தப்படாமலே இருந்து வருகிறது. இதனால் விஜயகாந்த் மண்டபத்தை இடிப்பதற்காகவே அந்த பாலம் கட்டப்பட்டதா என்ற விமர்சனங்களும் இன்றளவும் இருந்தே வருகின்றது.

நீங்க நடிக்கிறதா இருந்தா படத்தை எடுக்கிறேன்! – பெண் நட்சத்திரத்திற்காக படத்தையே நிராகரித்த கலைஞர்!

எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டங்களில் இப்போது போல் இல்லாமல் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சில கதாபாத்திரத்திற்கு இந்த நடிகர் அல்லது நடிகை நடித்தால்தான் நன்றாக இருக்கும் என முடிவெடுத்து திரைக்கதையை எழுதுவதுண்டு.

அப்படி பல படங்களுக்கு அப்போது கதை எழுதியதுண்டு. அப்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய கதையாசிரியர்களில் கலைஞர் மு. கருணாநிதி முக்கியமானவர். அவர் கதை எழுதும் கதைகள் எல்லாமே நல்ல ஹிட் கொடுக்கும்.

இதனால் கலைஞர் கதைக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. அப்போதுதான் சிலப்பதிகாரம் கதையை பூம்புகார் என்னும் பெயரில் திரைப்படமாக்குவதற்கான திட்டம் உருவானது. எஸ்.எஸ். ராஜேந்திரன் கோவலனாகவும், சி.ஆர் ராஜகுமாரி கண்ணகியாகவும் நடிக்க இருந்தனர்.

அதில் கவுதி அடிகள் என்கிற கதாபாத்திரம் ஒன்று வரும். அந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே கலைஞர் அந்த கதாபாத்திரத்திற்கு கே.பி சுந்தராம்பாள்தான் சரியாக இருப்பார் என முடிவு செய்துவிட்டார். இதுக்குறித்து கேபி சுந்தராம்பாளிடம் கேட்கும்போது அவர் நடிப்பதற்கு மறுத்துவிட்டார்.

ஆனால் கே.பி சுந்தராம்பாளை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட முடியாது என நினைத்தார் கலைஞர். எனவே கே.பி சுந்தராம்பாள் இல்லை எனில் இந்த படத்தையே எடுக்க வேண்டாம் என கூறிவிட்டார். இதை கேட்ட கே.பி சுந்தராம்பாள் பின்பு சமாதானமாகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.