Tag Archives: karnan

படிச்சவன் கைல கத்தி கொடுக்கிறதுதான் சமூக நீதியா!.. மாரி செல்வராஜை லாக் செய்த இளைஞன்!.

தமிழில் சமூகநீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜின் ஒவ்வொரு திரைப்படங்களும் சமூகம் சார்ந்து முக்கியமான விஷயத்தை பேசும் விதமாக இருக்கும்.

சமீபத்தில் இவர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையன் சார்பாக நடத்தும் ரோஸி திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார். பா.ரஞ்சித் இந்த நிகழ்ச்சியை வருடா வருடம் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாரி செல்வராஜ் அவரது மாமன்னன் திரைப்படத்தை திரையிட்டார்.

மேலும் அவரது திரைப்படங்கள் குறித்த விளக்கத்தையும் கொடுத்தார். அதில் அவர் பேசும்போது என்னுடைய சிறுவயதில் நான் பட்ட கஷ்டங்களைதான் நான் படமாக்கியுள்ளேன். எனக்கு சிறு வயதாக இருந்தப்போது என்னை நாற்காலியில் அமர வைத்துவிட்டு என் தந்தை நின்றுக்கொண்டே ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இது எனக்கு நெருடலாக இருந்தது. எனவே ஏன் அங்கு உட்காரவில்லை என என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் நாங்கள் உட்கார மாட்டோம் என சிம்பிளாக கூறிவிட்டார். அந்த பாதிப்பின் வெளிப்பாடுதான் மாமன்னன். ஒரு சமூகத்தின் வலியை வெளிப்படுத்தும் விதமாகவே என்னுடைய படைப்புகள் இருக்கும் என மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

இளைஞனின் கேள்வி:

அப்போது அங்கு அமர்ந்திருந்த இளைஞன் ஒருவர் மாரி செல்வராஜிடம் உங்கள் திரைப்படமான பரியேறும் பெருமாளில் கதாநாயகன் எதற்காக போராட வேண்டும், எந்தளவு போராட வேண்டும் என பேசியிருந்தீர்கள். அதே போல மாமன்னன் திரைப்படத்தில் ஒடுக்கப்படும் ஒருவர் அரசியல் ரீதியாக அதை எப்படி பெறுவது என பேசியிருந்தீர்கள்.

ஆனால் கர்ணன் படத்தை பொறுத்தவரை அந்த கிராமத்தில் படித்த இளைஞர் அவரை ஏன் வன்முறையாக காட்டினீர்கள். இதற்கெல்லாம் வன்முறைதான் தீர்வு என்பது போல அந்த படம் இருந்ததே என கேட்டார்.

மாரி செல்வராஜ் கொடுத்த விளக்கம்:

அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ் கூறும்போது இந்த படத்தின் ஆர்டரை நீங்கள் மாற்றி பார்க்க வேண்டும். முதலில் கர்ணன் பாருங்கள், பிறகு பரியேறும் பெருமாள், பிறகுதான் மாமன்னன். அடுத்து வரும் வாழை திரைப்படத்தை இதற்கெல்லாம் முன்பு முதல் படமாக பாருங்கள்.

பேருந்து கூட நிற்காத ஊரில் ஒருவன் பேருந்துக்காக போராடுகிறான். பிறகு அங்கிருந்து ஒருவன் வந்து சட்டம் படிக்கிறான். பிறகு அரசியலில் சாதிக்கிறான் இப்படிதான் அதை நீங்கள் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.

புலியையே கொண்டு வந்து வாசல்ல கட்டியும் எம்.ஜி.ஆரால் சிவாஜியை தோற்கடிக்க முடியலை!. போட்டினா இப்படி இருக்கணும்!.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கிடையே போட்டி என்பதை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் நடிகர் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும்தான் என கூறலாம். இப்போது இருக்கும் விஜய் அஜித் ரசிகர்களை விடவும் உக்கிரமான ரசிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ரசிகர்கள்.

அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே இரு ரசிகர்களுக்கும் இடையில் பெரும் மோதல் இருக்கும். இருந்தாலும் அப்படி வெளியாகும்போதுதான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் அப்படி மோதல் உள்ளபோதும் கூட இருவரது திரைப்படங்களையும் சேர்த்தே வெளியிட்டனர்.

இந்த நிலையில் மாபெரும் பொருட் செலவில் உருவான திரைப்படம் கர்ணன். கர்ணன் திரைப்படத்திற்கு தமிழ்நாடு அளவில் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு போட்டியாக நடிகர் எம்.ஜி.ஆரின் திரைப்படமான வேட்டைக்காரன் திரைப்படமும் தயாராகி வந்தது.

இந்த நிலையில் கர்ணன் மற்றும் வேட்டைக்காரன் வெளியாகும் நாளில் சிவாஜி கணேசன் ரசிகர்கள் உண்மையான தேர் ஒன்றை எடுத்து வந்து திரையரங்க வாசலில் நிறுத்தினர். இதனை பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?

அவர்கள் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் திரைப்படத்தை முன்னிட்டு உண்மையான புலியை கொண்டு வந்து திரையரங்கின் வாசலில் கட்டினார்கள். ஆரம்பத்தில் வேட்டைக்காரன் திரைப்படத்திற்குதான் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கர்ணன் திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து வேட்டைக்காரனை மிஞ்சி பெரும் வெற்றியை கொடுத்தது கர்ணன் திரைப்படம்.

பாரதிராஜாவுக்கு பிறகு நான் பார்த்து மிரண்ட இயக்குனர்!.. எஸ்.ஜே சூர்யாவை வியக்க வைத்த தனுஷ் படம்!..

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பிறகு இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே சூர்யா. சொல்ல போனால் ஆரம்பம் முதலே தமிழில் தோல்வியே காணாத வெற்றி இயக்குனர் என்று எஸ்.ஜே சூர்யாவை கூறலாம்

ஏனெனில் அவரது முதல் திரைப்படமான வாலி திரைப்படமே ஒரு சோதனை ஓட்டம் என்று தான் கூற வேண்டும். அதுவரை அஜித்தை யாரும் வில்லனாக காட்டாத பொழுது அவரை வில்லனாக நடிக்க வைத்து வாலி திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே சூர்யா.

அவரது முதல் படமே பெரும் ஹிட் கொடுத்தது. அதற்குப் பிறகு  அவர் இயக்கிய குஷி திரைப்படம் பெரும் வசூலை பெற்று தந்தது. தற்சமயம் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் குறித்து பேசி இருந்தார். கர்ணன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை வெகு நாட்களாக எஸ்.ஜே சூர்யா பார்க்காமல் இருந்தாராம். அப்பொழுது தனுஷ் ஒரு நாள் போன் செய்து கர்ணன் திரைப்படத்தை பார்த்து விட்டீர்களா? என கேட்டுள்ளார்.

இல்லை அந்த படம் குறித்து நிறைய கேள்விப்பட்டேன் ஆனால் இன்னும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் எஸ்.ஜே சூர்யா. உடனே அந்த படத்தை பார்த்துவிட்டு அது பற்றி என்னிடம் கூறுங்கள் என்று கூறியுள்ளார் தனுஷ். எஸ்.ஜே சூர்யாவும் இரவோடு இரவாக அந்த படத்தை பார்த்துள்ளார் பார்த்துவிட்டு மறுநாள் தனுஷிற்கு போன் செய்து என்ன மாதிரியான ஒரு திரைப்படம் இது. எப்படி இவ்வளவு சிறப்பாக ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

பாரதிராஜாவிற்கு பிறகு நான் வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக மாரி செல்வராஜ் இருக்கிறார் என்று கூறியுள்ளார் எஸ் ஜே சூர்யா. அதேபோல தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை பெற்று தந்த திரைப்படமாக கர்ணன் திரைப்படம் இருந்தது.