Tag Archives: maaveeran

உன் படத்துல நடிச்சேன்ல!. அப்ப ஒரு கோடி குடு!.. இயக்குனரை மேடையில் லாக் செய்த மிஸ்கின்!..

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஸ்கின். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் மிஸ்கின். அவரது நண்பரான நரேனை அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கினுக்கு அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் கிடைத்தன. அவரும் தொடர்ந்து படங்களை இயக்க துவங்கினார். அதன் பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் அவருக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது.

அதனையடுத்து க்ரைம் தொடர்பான படங்களாக இயக்க துவங்கினார் மிஸ்கின். அதில் சில படங்களில் நடிக்கவும் துவங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக மிஸ்கினுக்கு திரைப்படம் இயக்குவதை காட்டிலும் நடிப்பதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

இயக்குனரை விட நடிகருக்கு நல்ல சம்பளம் என்பதால் மிஸ்கினும் நடிக்க துவங்கினார். தற்சமயம் மாவீரன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அதில் அடியே என்கிற திரைப்படமும் ஒன்று.

அடியே திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் மிஸ்கின். அப்போது இயக்குனரை அழைத்த அவர் உங்கள் படத்தில் நான் நடித்திருக்கேனா? இல்லையா? என கேட்டார். அதற்கு இயக்குனர் நடித்துள்ளீர்கள் என கூற அப்படியென்றால் உங்கள் தயாரிப்பாளரிடம் கூறி எனக்கு ஒரு கோடி ரூபாய் வாங்கி கொடு என வெளிப்படையாக கூறிவிட்டார்.

இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது..

எஸ்.கே கட்சி ஆரம்பிக்க போறாரா? நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை!.. சீட்டை விட்டு எழுந்த சிவகார்த்திக்கேயன்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அப்பொழுது மக்களுக்கு பிடித்த வகையில் பேசி பெரும் மக்கள் கூட்டத்தை தனக்கான ரசிகர் பட்டாளமாக வைத்திருந்தார்.

இதுவே இவர் சினிமாவிற்கு வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்க தொடங்கினார் மெரினா, 3 போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஹீரோவாக அவர் நடித்த திரைப்படம் மனம் கொத்தி பறவை அதனை தொடர்ந்து அவர் நடித்த எதிர்நீச்சல் போன்ற பல படங்களில் தொடர்ந்து காமெடி கதாபாத்திரமாக நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு கமர்சியல் ஹீரோவாக மாற்றிக் கொண்டார். தற்சமயம் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்பது போல காமெடியாக அவரிடம் கேட்கும் பொழுது அவர் அந்த சீட்டை விட்டு எழுந்து சென்று வேறு சீட்டில் அமர்ந்து விட்டார். மேலும் காமெடிக்கு கூட அதைப்பற்றி எல்லாம் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டார் சிவகார்த்திகேயன். அந்த அளவிற்கு அரசியலில் இருந்து சுத்தமாக விலகி இருக்கிறார் எஸ்.கே.

ஏற்கனவே பல கோடிக்கு வித்திடுச்சு! – சிவகார்த்திகேயனை வேற லெவலுக்கு கொண்டு சென்ற மாவீரன்!

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் 100 கோடிக்கு ஓடியதை அடுத்து தனது சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருந்தார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே 30 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளத்தையும் கூட அதிகரிக்கலாம் என திட்டமிட்டு வந்தார். ஆனால் டான் திரைப்படத்திற்கு பிறகு வந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை.

அந்த சமயத்தில் வெளியான சர்தார் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதும் இதற்கு ஒரு காரணம். அதற்கு அடுத்ததாக தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் திரையில் வருவதற்கு முன்பே கிட்டத்தட்ட 83 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது மாவீரன் திரைப்படம். படத்தின் ஆடியோ ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ், ஓ.டி.டி ரைட்ஸ் மற்றும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 83 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

எனவே இந்த படம் சிவகார்த்திகேயன் அவரது சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட சென்னை, காலா திரைப்படங்களை காபி அடிக்கிறதா? –எஸ்.கேவின் மாவீரன் கதை என்ன?

 தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னர் இவர் நடித்த படங்களில் டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன அதிலும் டான் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது.

 ஆனால் இறுதியாக வந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வசூலை தரவில்லை இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மடோனே அஸ்வின் இயக்குகிறார். 

காலா வடசென்னை திரைப்படங்களைப் போல மாவீரன் திரைப்படமும் நில அரசியல் சார்ந்த பிரச்சினைகளை பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.  வட சென்னை மற்றும் காலா திரைப்படங்களில் அவர்களது நிலத்தை பறிக்க நினைக்கும் எதிரிகள்,  அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க போராடும் கதாநாயகன் என்பதாக கதை இருக்கும்.

 அதே கதை அம்சத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் அமைந்திருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. கடற்கரை ஓரத்தில் சிவகார்த்திகேயன் வசிக்கும் பகுதியை ஆக்கிரமிக்க நினைக்கும் அரசியல்வாதியாக மிஷ்கின் நடித்துள்ளார். 

மிஸ்கினிடமிருந்து தன் நிலத்தை கதாநாயகன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே படத்தின் கதை என கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே தமிழ் சினிமாவில்  பலமுறை வந்த கதையை மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?  என்கிற கேள்வி மக்கள் மத்தியில் வந்துள்ளது .

வேலைக்காரன் பாட்டையே மறுபடி பண்ணி வச்சுருக்காங்க! –  மாவீரன் பாட்டிற்கு வரும் விமர்சனம்!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாளாகும்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். தற்சமயம் இவர் நடித்த மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை மடோனா அஸ்வின் இயக்கி வருகிறார். மாவீரன் ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மிஸ்கின், யோகி பாபு, கவுண்டமணி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக படத்தின் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். சீனா சீனா என்கிற இந்த பாடல் வெளியான அரை மணி நேரத்திற்குள்ளாக 50,000 வீவ்களை கடந்துள்ளது.

ஆனால் இந்த பாடல் பார்ப்பதற்கு வேலைக்காரன் படத்தில் வரும் கருத்தவன்லாம் கழிஜா பாடலை போலவே உள்ளது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாவீரன் படப்பிடிப்பு துவக்கம் –  சங்கர் மகளுடன் நிற்கும் சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு அடுத்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன். 

தற்சமயம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவும் சிவகார்த்திகேயன் சம்பளமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அவர் நடித்து மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ள நிலையில் தற்சமயம் மாவீரன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

கிட்டத்தட்ட பழைய ரஜினிகாந்தின் தோற்றத்தை இந்த படத்தில் கொண்டு வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார்.

key

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பானது நேற்று துவங்கியது. நடிகை அதிதி சங்கர் ஆசைக்காக விருமன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என பேசப்பட்டது. ஆனால் தற்சமயம் அவர் சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடிப்பதை வைத்து பார்க்கும்போது அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாவீரன் திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.