Tag Archives: maha avatar narashimha

மகா அவதார் ரெண்டாம் பாகம் எப்போ வருது.. வெளிவந்த அப்டேட்..!

இயக்குனர் அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் மகாஅவதார் நரசிம்மா.

இந்த திரைப்படம் இப்பொழுது வரை திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இதுவரை இருந்தது கிடையாது.

அதனாலேயே பெரும்பாலும் இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்குவது கிடையாது. ஆனால் தெய்வீக திரைப்படம் என்பதால் அதிக வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம்.

அதே சமயம் அடுத்த பாகத்தில் விஷ்ணு பகவானின் அடுத்த ஒரு அவதாரத்தின் கதைகளம் படமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

 

மகா அவதார் நரசிம்மா ஓ.டி.டியில் எப்போ வருது.. அப்டேட்..!

அனிமேஷன் திரைப்படமாக வெளிவந்து இப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது மகா அவதார் நரசிம்மா.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரத்தின் கதையைக் கொண்டு வெகு காலங்களாகவே திரைப்படங்கள் வந்துள்ளன ஆனால் அனிமேஷனில் ஒரு சிறப்பான திரைப்படமாக மகா அவதார் நரசிம்மா வந்தது.

அனிமேஷன் திரைப்படம் என்பதால் காட்சிப்படுத்துவதில் மிக பிரம்மாண்டமான ஒரு படமாக இந்த படம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்திய அளவில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது ஓடிடியில் வரும் என்று பலரும் ஆர்வமாக எதிர்பார்க்க துவங்கியிருக்கின்றனர். இந்த படம் ஏற்கனவே திரையரங்களில் நல்ல வெற்றியை கொடுத்து விட்டதால் சில நாட்களிலேயே ஓடிடியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை அடுத்து ஆகஸ்ட் 3 வது வாரம் அல்லது செப்டம்பரில் இந்த படம் ஓ டி டிக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஒரே வாரத்தில் இவ்வளவு வசூலா.. சாதனை படைத்த இந்திய அனிமேஷன் திரைப்படம்..!

கே ஜி எஃப், சலார் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹம்பாலே ஃபிலிம்ஸ் திரைப்படம் தற்சமயம் தொடர்ந்து சாமி திரைப்படங்களாக இயக்கி வருகிறது.

காந்தாரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நிறைய சாமி படங்களை இயக்கி வருகிறது ஹம்பாலே பிலிம்ஸ். அந்த வகையில் தற்சமயம் ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம்நான் மகா அவதார் நரசிம்மா.

விஷ்ணு பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான ஒரு அவதாரமாக நரசிம்மா அவதாரமாக பார்க்கப்படுகிறது. பழைய ங்காலங்களில் இருந்தே இரணிய கசிபு மற்றும் நரசிம்ம அவதாரத்தின் கதையானது நாடகங்களாக இந்திய அளவில் போடப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் இதை அனிமேஷன் திரைப்படமாக அஸ்வின் குமார் என்கிற இயக்குனர் இயக்கி இருந்தார். கடந்த ஜூலை 25ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பொதுவாக இந்திய மக்கள் மத்தியில் அனிமேஷன் படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடையாது.

ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் 40 கோடி வசூல் செய்து இருக்கிறது. எந்த ஒரு பெரிய கதாநாயகனும் நடிக்காமல் பெரிய இயக்குனர் இயக்காமல் உருவான ஒரு அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் இனி அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்திய சினிமாவில் ஒரு மார்க்கெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.