தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான பாடலசிரியர்களில் முக்கியமானவர் நா. முத்துக்குமார். மிக குறுகிய காலத்திலேயே இவர் அதிக பிரபலமடைந்தார். வாய்க்கு வந்ததை பலரும் பாடல் வரிகள் என இப்போது தமிழ் சினிமாவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் முந்தைய காலக்கட்டங்களில் சிறப்பான பாடல் வரிகளை பாடல்களுக்கு கொடுத்து வந்தார் நா முத்துக்குமார். பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்களுக்கு நா. முத்துக்குமார்தான் பாடல் வரிகள் எழுதுவார்.
அதே போல நா.முத்துக்குமாருக்கும் யுவனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இந்த பாடல் வரிகளாலேயே பாடல்கள் நல்ல வெற்றி கொடுத்து அதனால் நிறைய நடிகர்கள் பிரபலமடைந்துள்ளனர். இந்த நிலையில் சீக்கிரத்திலேயே இறைவனடி சென்றுவிட்டார் நா முத்துக்குமார்.
அவரின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து நா.முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு ஒரு வீடு ஒன்று வாங்கி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நா.முத்துக்குமாரால் வளர்ச்சியை பெற்ற எந்த ஒரு நடிகருமே இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.
பராசக்தி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் மட்டும் படப்பிடிப்பை விட்டு விட்டு இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.
தமிழில் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய திரைப்படங்களுக்கெல்லாம் அப்போது நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
ஆனால் இப்போது ஹரி இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக பெரிதாக வெற்றியடைவதில்லை. ஏனெனில் முன்பெல்லாம் அதிகப்பட்சம் குடும்ப கதையாக இருந்த திரைப்படங்கள் இப்போது முழுக்க முழுக்க சண்டை படங்களாகவே மாறிவிட்டது.
இதனாலேயே அவரது திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் என்பது குறைந்துவிட்டன. இந்த நிலையில் தாமிரபரணி திரைப்படமானது ஹரி இயக்கத்தில் வெற்றியை கொடுத்த முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே நல்ல வெற்றியை கொடுத்தன.
நா.முத்துக்குமார்தான் அந்த பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதி வந்தார். அனைத்து பாடல்களும் முடித்த நிலையில் ஒரு பாட்டுக்கு மட்டும் பாடல் வரிகள் எழுத வேண்டி இருந்தது. அதற்கு பாடல் வரிகள் எழுதுவதற்கு நா.முத்துக்குமார் வராத காரணத்தால் ஹரியே அதற்கு பாடல் வரிகளை எழுதினார்.
அது தாலியே தேவையில்ல என்கிற அந்த பாடலுக்கான வரிகளைதான் ஹரி எழுதினார். அவர் எழுதியும் கூட அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்ற பாடலாகவே அமைந்தது. ஒரு பக்கம் ஹரி இப்படி பாடல் வரிகளை எழுதுபவராகவும் இருந்துள்ளார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips