கண்டுக்கொள்ளபடாமல் போன நா.முத்துகுமார் நிகழ்வு.. ஆதரவு கொடுத்த சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான பாடலசிரியர்களில் முக்கியமானவர் நா. முத்துக்குமார். மிக குறுகிய காலத்திலேயே இவர் அதிக பிரபலமடைந்தார். வாய்க்கு வந்ததை பலரும் பாடல் வரிகள் என இப்போது தமிழ் சினிமாவில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் முந்தைய காலக்கட்டங்களில் சிறப்பான பாடல் வரிகளை பாடல்களுக்கு கொடுத்து வந்தார் நா முத்துக்குமார். பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்களுக்கு நா. முத்துக்குமார்தான் பாடல் வரிகள் எழுதுவார்.

அதே போல நா.முத்துக்குமாருக்கும் யுவனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இந்த பாடல் வரிகளாலேயே பாடல்கள் நல்ல வெற்றி கொடுத்து அதனால் நிறைய நடிகர்கள் பிரபலமடைந்துள்ளனர். இந்த நிலையில் சீக்கிரத்திலேயே இறைவனடி சென்றுவிட்டார் நா முத்துக்குமார்.

அவரின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து நா.முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு ஒரு வீடு ஒன்று வாங்கி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நா.முத்துக்குமாரால் வளர்ச்சியை பெற்ற எந்த ஒரு நடிகருமே இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.

பராசக்தி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் மட்டும் படப்பிடிப்பை விட்டு விட்டு இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version