Tag Archives: padayappa

எதர்ச்சையா வச்ச சீனு செம ஃபேமஸ் ஆயிட்டு… – படையப்பா குறித்து கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சமூக வலைத்தளங்களில் ஏன் எதற்கென்றே தெரியாமல் சில வீடியோக்கள் பிரபலமாகும். அதை போல ஏன் எதற்கு என்றே தெரியாமல் சில காட்சிகள் சினிமாவில் பிரபலமாகும்.

உதாரணத்திற்கு கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை கூறலாம். அதை விட சிரிப்பான பல காமெடிகளை கவுண்டமணி செந்தில் செய்திருந்தாலும் அந்த காமெடி மிகவும் பிரபலம்.

அதே போல படையப்பா திரைப்படத்தில் பிரபலமான ஒரு காட்சி உண்டு. நீலாம்பரியை பார்க்க படையப்பா வருவார். அதை அறிந்துக்கொண்ட நீலாம்பரி அங்கு இருக்கும் அனைத்து நாற்காலிகளையும் எடுத்துவிடுவார்.

அப்போது அங்கு வரும் படையப்பாவிற்கு அமர எதுவும் இருக்காது. உடனே தனது துண்டை எடுத்து மேலே கட்டி இருக்கும் ஊஞ்சலை இழுத்து அதில் அமர்வார். அந்த காட்சியை வைக்கும் யோசனையே முதலில் கே.எஸ் ரவிக்குமாருக்கு இல்லை.

ஓரத்தில் ஒரு ஷோபாவை வைத்து அதை ரஜினி துண்டால் இழுப்பது போலதான் காட்சி வைக்க ஏற்பாடாகி இருந்தது. அப்போதுதான் எதார்ச்சையாக அந்த ஊஞ்சலை பார்த்தார் கே.எஸ் ரவிக்குமார். அந்த ஊஞ்சலில் அவர்வது போல காட்சி வைத்தால் நன்றாக இருக்குமே என முடிவு செய்தார்.

அதன் பிறகு அதே போல ரஜினிகாந்த் ஊஞ்சலில் அமரும் சீன் காட்சியாக்கப்பட்டது. அதோடு ஏ.ஆர் ரகுமானின் இசையை சேர்த்து திரையில் அந்த காட்சி வந்தபோது வேற லெவல் ரெஸ்பான்ஸை பெற்றது அந்த காட்சி. இதுக்குறித்து கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது ஏன் அந்த காட்சி இவ்வளவு வரவேற்பை பெற்றது என தெரியவில்லை என்கிறார்.

எல்லா படமும் எடுக்குற மாதிரிதான் இந்த படமும் எடுத்தேன்! – ஆனால் படம் ஹிட்டு!- கே.எஸ் ரவிக்குமார் சொன்ன திரைப்படம் என்ன தெரியுமா?

கே.எஸ் ரவிக்குமார் தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். பல பெரிய நட்சத்திரங்களை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார்.

தயாரிப்பாள ஆர்.பி செளத்ரியின் உதவியோடு முதன் முதலாக புரியாத புதிர் என்னும் திரைப்படத்தை இயக்கி இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் மாறிவரும் தமிழ் சினிமாவில் இப்போதைய காலக்கட்டத்தில் அவர் இயக்கிய லிங்கா, ஆதவன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.

கே.எஸ் ரவிக்குமாரிடம் இதுக்குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. பெரும் ஹிட் அடிக்கும் என நீங்கள் எதிர்ப்பார்க்காமல் இயக்கி வெளியாகும்போது பெரும் ஹிட் அடித்த படம் இருக்கிறதா? என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு கே.எஸ் ரவிக்குமார், ”ஆமாம் அப்படி ஒரு படம் என்றால் அது படையப்பாதான், படையப்பா படத்தையும் நான் மற்ற படங்களை இயக்குவது போலதான் இயக்கினேன். அதற்கு முன்பு ரஜினியை வைத்து இயக்கிய முத்து திரைப்படத்தை போலவேதான் இதையும் இயக்கினேன்.

ஆனால் படையப்பா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் ஹிட் கொடுத்தது. இப்போதும் கூட மக்கள் படையப்பா படத்தை பற்றி பேசுவதை பார்க்க முடிகிறது.” என கூறியுள்ளார்.