Tag Archives: pradeep ranganthan

எஸ்.கே அளவுக்கு பிரதீப் கஷ்டப்படல.! அந்த அளவுக்கு அவர் பேசியிருக்க வேண்டாம்.. சர்ச்சையை கிளப்பிய பிரதீப் பேச்சு.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் தமிழில் முதன் முதலாக கோமாளி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

ஆனால் அவருக்கு கதாநாயகனாக முதல் படமாக அமைந்த திரைப்படம் லவ் டுடே. லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்த திரைப்படமாகும். தற்போதைய தலைமுறையினரின் காதலில் உள்ள பிரச்சனைகளை அந்த படம் பேசியது.

அதனை தொடர்ந்து அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து அடுத்து கதாநாயகனாக வரிசையாக வாய்ப்பை பெற்று அவர் நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த டிராகன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன் தனக்கு நிறைய இடையூறுகள் ஏற்பட்டதாக கூறியுள்ளார். சினிமா துறையில் தனக்கு பிரச்சனைகள் வருவதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் அந்தணன் பேசியுள்ளார். அவர் கூறும்போது சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த போது அனுபவித்த கஷ்டங்கள் அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் அனுபவிக்கவில்லை. அவர் இப்போது பிரபலமான நடிகராக இருக்கிறார்.

அதனால் அவர் தங்களுடைய படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் நினைத்திருப்பார்கள். அதற்காகதான் அவர்கள் தொல்லை செய்திருப்பார்கள். அதனை போய் ஒரு பெரிய விஷயமாக பிரதீப் சொல்லியிருக்க தேவையில்லை என அந்தணன் கூறியுள்ளார்.

 

 

படம் தூள்.. பிரதீப் ரங்கநாதனின் ட்ராகன் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்!.

தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார் ஆரம்பத்தில் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் இயக்குனராக தான் அறிமுகமானார்.

தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் லவ் டுடே.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதனே நடித்தார் அவருடைய நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது. மேலும் அந்த திரைப்படம் பெரிய வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதை காட்டிலும் அதில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டிராகன் என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ட்ராகன் திரைப்படம் இந்த பிப்ரவரி 21 அன்று  திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத் இந்த திரைப்படம் சிறப்பாக இருப்பதாக கூறி இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து காதல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஏனெனில் அவர் காதல் கதையை பின்புறமாக கொண்டு அவர் நடித்த லவ் டுடே திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்ததால் மற்ற படங்களும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

மணிகண்டனுக்கு இருந்த அந்த நல்ல மனசு பிரதீப் ரங்கநாதனுக்கு இல்லாம போச்சே..

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக நடிகர் மணிகண்டன் இருந்து வருகிறார். மணிகண்டன் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பல துறைகளில் பணிப்புரிந்து வருகிறார். ஆனால் மிக தாமதமாகதான அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் இயக்குனர் ஆக வேண்டும் என்றுதான் அவர் சினிமாவிற்கு வந்தார். ஜெய் பீம் திரைப்படத்தில் எதார்த்தமாக கிடைத்த வாய்ப்பு மணிகண்டனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

ஜெய் பீம் திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மணிகண்டன். அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் கதாநாயகனாக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன்.

manikandan

இந்த நிலையில் ஆரம்பக்கட்டத்தில் நடிகர் டெல்லி கணேசோடு இவருக்கு இருந்த பழக்கம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் மணிகண்டன். அதில் மணிகண்டன் கூறும்போது நாங்கள் அந்த சமயத்தில் ஒரு குறும்படம் எடுத்தோம்.

அதில் நடிப்பதற்காக டெல்லி கணேசிடம் கேட்டோம். அவர் ஒரு சம்பளம் சொன்னார். அதை எங்களால் தர இயலவில்லை. அதை விட மிக குறைவான சம்பளத்தை நான் கூறினேன். அவரும் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நடித்து முடித்த பிறகு அந்த சம்பளத்தையும் அவர் வாங்கவில்லை என கூறினார் மணிகண்டன்.

இதே போல டெல்லி கணேஷ் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுக்கும் உதவியுள்ளார். ஆனால் பிரதீப் ரங்கநாதன் இதை எங்கேயும் சொன்னது கிடையாது என்று மணிகண்டனை இதுக்குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.