Tag Archives: suraj

உதவி இயக்குனரா இருந்துக்கிட்டு சுந்தர் சிக்கே விபூதி அடிச்ச சுராஜ்!.. காபியடிச்ச படமா அது!.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர் சி. இடையில் சுந்தர் சியை சிறப்பிக்கும் வகையில் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவில் இதுவரை பார்க்காத வகையில் வித்தியாசமான சுந்தர் சியை பார்க்க முடிந்தது.

மிகவும் ஜாலியாக சினிமாவில் அவருக்கு நடந்த கூத்துகளை பகிர்ந்து வந்தார். அவரிடம் பல காலங்கள் உதவி இயக்குனராக இருந்தவர்தான் சுராஜ். சுராஜ் ஒரு கதையை படமாக்குகிறேன் என்றப்போது அதை சுந்தர் சியே தயாரித்தார்.

அந்த திரைப்படம்தான் தலைநகரம். அதில் சுந்தர் சியே கதாநாயகனாக அந்த படத்தில் நடித்தார். இதுக்குறித்து சுந்தர் சி சொல்லும்போது எனக்கு போன வருடம் வரையிலுமே மலையாள படத்தின் காபிதான் தலைநகரம் என தெரியாது. டிஸ்கஸனில் இருந்தப்போது கூட சுராஜ் அதை கூறவே இல்லை.

என் அம்மா போன வருடம் தலைநகரத்தை பார்க்கும்போது இது மோகன்லால் படம்னு சொன்னாங்க. அதுக்கு பிறகுதான் நான் அந்த மோகன்லால் படத்தை சியர்ச் பண்ணி பார்த்தேன். எனக்கே அதிர்ச்சியா இருந்ததுச்சு. இதுல என்ன கொடுமைனா என்கிட்ட காப்புரிமை வாங்கி அதை தெலுங்குல வேற படமாக்குனாங்க என்கிறார் சுந்தர் சி.

நாய் சேகர் கெட்டப் இப்படிதான் உருவானுச்சி – இயக்குனர் சொன்ன சீக்ரெட்!

தமிழில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவை நடிகர்கள் என தமிழ் சினிமாவில் கூறினாலே அதில் முதலில் நம் நினைவிற்கு வருகிற பெயர் வடிவேலுதான்.

அந்த அளவிற்க்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் பின்னி எடுத்தவர் நடிகர் வடிவேலு. தற்போதைய காலக்கட்டத்தில் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன. ஆனாலும் வடிவேலுவிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு மட்டும் குறைந்த பாடில்லை.

வடிவேலு நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அதில் தலை நகரம் திரைப்படத்தில் வரும் நாய்சேகர் என்னும் கதாபாத்திரமும் ஒன்று. நாய்சேகர் கதாபாத்திரத்தில் வரும்போது வடிவேலு அணிந்திருக்கும் பிங்க் நிற கோர்ட் மற்றும் அவரது கெட்டப் கொஞ்சம் பிரபலமானது. தலைநகரம் திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியிருந்தார்.

அவர் முதல் நாளே நாய் சேகர் குறித்த விவரங்களை வடிவேலுவிடம் கூறியிருந்தார். அதாவது நாய்சேகர் ஒரு ரவுடி. கோர்ட்டு போட்ட காமெடி ரவுடி என கூறியிருந்தார். அதற்கான கெட்டப்பில் வரும்படி வடிவேலுவிடம் கூறியிருந்தார்.

வடிவேலுவும் கூட ஒரு பிங்க் கோர்ட்டை போட்டுக்கொண்டு வித்தியாசமான ஒரு கெட்டப்பில் வந்து இயக்குனரிடம் சார் இந்த கெட்டப் ஓ.கேவா என கேட்டுள்ளார். அந்த கெட்டப் வடிவேலுவிற்கு சரியாக பொருந்தியிருந்தது.

இதை பார்த்த பட குழுவினர் அனைவரும் கைத்தட்டி அவரை பாராட்டியுள்ளனர். இப்படிதான் நாய் சேகர் கதாபாத்திரத்திற்கான உருவம் உருவானது.