Tag Archives: vijay devarakonda

தேறுமா? தேறாதா… எப்படியிருக்கு கிங்டம் திரைப்படம்.. விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் காலம்காலமாக இருக்கும் ஒரே மாதிரியான கதைகளத்தை கொண்டு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் கிங்டம் திரைப்படம்.

கதைப்படி கதாநாயகனுக்கு ஒரு உளவாளியாக செல்வதற்கான வேலை வருகிறது. கான்ஸ்டபிள் ஆக இருக்கும் அவர் இலங்கையில் இருக்கும் சிறைச்சாலைக்கு ஓர் உளவாளியாக செல்கிறார்.

அங்கே ஒரு முக்கியமான ரவுடியையும் அவனது கூட்டத்தையும் பற்றிய தகவல்களை அறிய வேண்டும் என்பதுதான் விஜய் தேவரகொண்டாவிற்கு கொடுக்கப்படும் வேலையாக இருக்கிறது.

அங்கே சென்ற பிறகுதான் விஜய் தேவரகொண்டாவிற்கு அங்கே இருக்கும் அந்த பெரிய ரவுடி அவருடைய அண்ணன் என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த ரவுடி கூட்டத்திற்கு பின்னால் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது எனவும் தெரிகிறது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இந்த ரவுடி கூட்டம் இருந்து வருகிறது எனவே அது குறித்த கதை பிறகு செல்கிறது. ஆனாலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இயக்கி இருக்கும் Gowtham Tinnanuri.

ஏற்கனவே ஜெர்ஸி என்கிற திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் அதிகமாக வரவேற்பை பெற்ற இயக்குனராக இவர் இருந்து வருகிறார்.

இளையராஜாவுக்கு பிறகு அதே பெருமையை பெற்ற அனிரூத்..!

தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிக மதிப்பு பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருந்து இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு சில பாடல்களாவது வெற்றி பாடல்களாக அமைந்திருந்தன.

இந்த நிலையில் நிறைய மற்ற மொழி நடிகர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்களுக்கு அனிரூத் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அனிரூத் மீது அதிகம் மரியாதை வைத்த ஒரு நடிகராக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். முன்பே அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தமிழில் உள்ள பெரும் இயக்குனர்களை ஒரு பக்கம் வைத்து மறுபக்கம் அனிருத்தை வைத்தால் நான் அனிரூத்தைதான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த அளவிற்கு அனிரூத்திற்கு விஜய் தேவரகொண்டா ரசிகராக  இருந்து வந்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

தற்சமயம் அந்த படத்தின் பேனர்கள் வைக்கும் பொழுது அனிருத்க்கும் மிக உயரமான பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்பு இசையமைப்பாளருக்கு பெரிய பேனர் வைத்த நிகழ்வு இளையராஜாவிற்கு மட்டும்தான் நடந்திருந்தது. இப்பொழுது அதே கௌரவத்தை பெற்ற இசையமைப்பாளராக அனிருத் மாறி இருக்கிறார்.

 

 

காலம் காலமா எடுத்த அதே கதை.. உளவாளியாக விஜய் தேவரகொண்டா.. கிங்டம் ட்ரைலர் வெளியானது..!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு மொழியில் மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவர கொண்டா தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான படங்களாக இருக்கின்றன.

அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் கிங்டம். ஆனால் கிங்டம் திரைப்படத்தின் கதைகளம் ஒரே மாதிரி இருப்பது தெரிகிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் கதைப்படி விஜய் தேவாரகொண்டா ஒரு உளவு வேலைக்காக உளவாளியாக ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் சிக்குகிறார். போலீசாக இருக்கும் விஜய் தேவரகொண்டா இதற்காக ரவுடி வேஷத்தில் செல்கிறார்.

யாரிடம் செல்கிறார் என பார்க்கும் பொழுது அதை விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் தான். அவர் பெரிய ரவுடியாக இருந்து வருகிறார். இதே மாதிரி கதை அமைப்பில் ஏற்கனவே நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன.

தம்பி கதாபாத்திரம் சென்று ரவுடியாக இருக்கும் அண்ணனை திருத்துவது போல கதைக்களம் இருக்கும். ஏற்கனவே தமிழில் வந்தான் வென்றான், தோரணை மாதிரியான திரைப்படங்களின் கதைகளம் இப்படித்தான் அமைந்திருக்கும் இப்படி பல படங்கள் வந்த நிலையில் மீண்டும் அதே கதைக்களத்தை கையில் எடுத்திருக்கின்றனர் கிங்டம் பட குழுவினர்.

ரஜினி சாருக்கு 6 படம் தொடர் தோல்வி.. மேடையில் ஓப்பனாக கூறிய தெலுங்கு நடிகர்..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை இழக்காத ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். என்னதான் தமிழ் சினிமாவில் நிறைய பெரும் நடிகர்கள் வந்துவிட்டாலும் கூட இன்னமும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மவுஸ் என்பது குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.

ரஜினிகாந்த் இப்போதும் 300 கோடிக்கும் அதிகமாக தான் வசூல் சாதனை செய்து வருகிறார். ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுத்த படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் ரஜினிகாந்தின் திரைப்படங்கள்தான் அதிகமாக இருக்கும்.

தெலுங்கு நடிகர் சொன்ன விஷயம்:

அந்த அளவிற்கு முக்கிய நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார் ரஜினிகாந்த் சினிமாவில் என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் அவருக்கும் சில தோல்வி படங்கள் இருந்திருக்கின்றன.

vijay devarkonda

இதனை சுட்டிக்காட்டி சமீபத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது தமிழ் சினிமாவில் ரஜினி சாரே தொடர்ந்து ஆறு திரைப்படங்கள் தோல்வி படங்களாக கொடுத்துள்ளார்.

எனவே யாருக்குமே இங்கே வெற்றி உறுதியான ஒரு விஷயம் கிடையாது என்று கூறியிருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் எப்போது ரஜினிகாந்த் 6 திரைப்படங்கள் வரிசையாக தோல்வி கொடுத்தார். ரஜினிக்கு பாபா கோச்சடையான் மாதிரியான சில திரைப்படங்கள் தோல்வியை கொடுத்திருப்பது உண்மைதான்.

ஆனால் எந்த காலகட்டத்திலும் ரஜினிகாந்த் தொடர்ந்து ஆறு திரைப்படங்கள் தோல்வி கொடுத்ததே கிடையாது என்று பதில் அளித்து வருகின்றனர்.

ரகசிய திருமணம் செய்த ராஷ்மிகா மந்தனா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

பல காலங்களாகவே கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக நடித்து வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் அவரை அதிகமாக பிரபலப்படுத்தியது கீதா கோவிந்தம் திரைப்படத்தில் வரும் பாடல்தான் எனலாம்.

அதற்கு பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அவர் நடித்த டியர் காம்ரேட் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தொடர்ந்து தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்கு பிறகு விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்சமயம் இவர் நடித்த அனிமல் திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது. சினிமாவிற்கு வந்த நெடுங்காலமாக விஜய் தேவரக்கொண்டாவுடன் நட்பில் இருந்து வருகிறார் ராஷ்மிகா.

திருமண கிசுகிசு:

இருவரும் சேர்ந்து சுற்றுலா எல்லாம் சென்றுக்கொண்டிருந்தனர். எனவே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என சினித்துறையில் பல காலங்களாகவே பேச்சுக்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவர்கள் இருவருமே இதுவரை அதை ஒப்புக்கொண்டு எந்த ஒரு பதிலும் கூறியது கிடையாது.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவிற்கும் விஜய் தேவரக்கொண்டாவிற்கும் இடையே ரகசியமாக திருமணம் நடந்துள்ளது என சில நாட்களாக கிசுகிசுக்கள் உலாவி வருகின்றன. வெகு காலங்களாக காதலித்து வந்த நிலையில் மக்கள் மத்தியில் வீண் சர்ச்சையை கிளப்ப வேண்டாமே என்று அமைதியாக திருமணத்தை செய்திருக்கின்றனர் என கூறப்படுகிறது.

விரைவில் ராஷ்மிகாவும் விஜய் தேவரக்கொண்டாவும் இதை அறிவிப்பார்கள் என பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதுவரை இதுக்குறித்து அவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

எங்க மேல வழக்கு போட்டு என்ன ப்ரோயஜனம்!.. நல்ல படமா இருந்தா ஓடியிருக்கும்!.. விஜய் தேவரகொண்டாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!.

தமிழ் சினிமாவில் ஒரு சிவகார்த்திகேயன் போல தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் இவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது. இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் பலரும் பார்த்தனர்.

மேலும் இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதனை தொடர்ந்து டியர் காம்ரேட், டாக்ஸி வாலா போன்ற அவரது சில படங்கள் தமிழ் டப்பிங்கில் வந்த காரணத்தால் இவருக்கு தமிழில் ஓரளவு வரவேற்பு உண்டு.

எவ்வளவு வேகத்திற்கு சினிமாவில் பெரும் உயரத்திற்கு வந்தாரோ அதே அளவிற்கு சரிவை கண்டு வருகிறார் விஜய் தேவரக்கொண்டா. இதற்கு முன்பு இவர் நடித்த லைகர் திரைப்படமே பெரும் தோல்வியை கண்டது. இதனை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

பிறகு வெளியான குஷி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் த பேமிலி ஸ்டார். இந்த திரைப்படத்திற்காக அதிகமாக விளம்பரம் செய்தனர். பல யூ ட்யூப் சேனல்களுக்கு இதற்காக பேட்டி கொடுத்தார் விஜய் தேவரக்கொண்டா.

ஆனால் வெளியான பிறகு இந்த படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தின் தயாரிப்பு செலவில் பாதி தொகை கூட வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கெல்லாம் பட விமர்சகர்கள்தான் காரணம் என புலம்புகிறாராம் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரக்கொண்டா இன்னும் ஒரு படி மேலே போய் படம் குறித்து எதிர்மறையான விமர்சனம் கொடுத்த யூ ட்யூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளாராம். நல்ல படங்களில் நடித்தால் ஏன் எதிர்மறை விமர்சனங்கள் வர போகிறது என இதுக்குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் சிவகார்த்திகேயன் – புது ரக டீம்

தென்னிந்தியாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ட்ரெண்டில் இருக்கும் ஒரு கதாநாயகன் விஜய் தேவரகொண்டா. 

சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழாவானது ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தெலுங்கில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவும் பங்கு கொண்டார்.

சிவகார்த்திகேயன் விஜய் தேவரக்கொண்டா பற்றி கூறும்போது ”மிகவும் குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமாகிய நடிகராக விஜய் தேவரகொண்டா இருக்கிறார். அதுவும் இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் வகையில் ஒரு பேன் இந்தியா நடிகராக மாறிவிட்டார் என கூறியிருந்தார்”.

மேலும் தனக்கு விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசை இருப்பதாகவும், தற்சமயம் அதற்கான வாய்ப்புகள் அமைந்து வருவதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். அதை வைத்து பார்க்கும்போது வரும் நாட்களில் இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிகிறது.

எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு போஸ் கொடுத்த பிரபல நடிகர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

டியர் காம்ரெட், கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்கள் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட போது அதன் வழியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரக்கொண்டா.

பிறகு இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தமிழில் ஆதித்ய வர்மா என எடுக்கப்பட்டது. ஆனாலும் இவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக இன்று வரை அர்ஜூன் ரெட்டியே அனைவராலும் பேசப்படும் படமாக உள்ளது.

இதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்த நமது ஹீரோ தற்சமயம் முண்ணனி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தற்சமயம் லிகர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாக்சிங்கை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. 

தெலுங்கில் பத்ரி, போக்கிரி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பூரி ஜெகநாத் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் தேவரக்கொண்டா.

அந்த புகைப்படத்தில் அவர் எந்த ஆடையும் போடாமல் முழு நிர்வாணமாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.