Tag Archives: Vishal

ஒரு காலத்தில் விஜயகாந்தே புகழ்ந்த மனுஷன்.. விஷாலின் இந்த நிலைக்கு காரணமான நபர்கள்.. கிழித்து தொங்கவிட்ட பத்திரிக்கையாளர்.!

நடிகர் விஷால் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருக்கும் நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியைதான் கொடுத்தன.

ஆனால் அதற்கு பிறகு விஷாலின் திரைப்படங்கள் குறித்து பெரிதாக அப்டேட் என்று எதுவும் வரவில்லை. இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த திரைப்படம் மதகஜராஜா.

இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். நடிகர் சந்தானம் இந்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த நிலையில் இந்த படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 அன்று திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்திற்காக நடத்தப்பட்ட விழாவில் நடிகர் விஷால் கலந்துக்கொண்டார். அதில் அவர் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதை பார்க்க முடிந்தது. அவரது கைகள் மிகவும் நடுங்கின. அதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில் இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஷாலின் இந்த நிலைக்கு ஒரு வகையில் இயக்குனர் பாலாதான் காரணம்.

பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் மாறு கண் கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருந்தார். அப்படி கண்களை மாற்றி வைத்து நடித்தது அவருக்கு மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து ஒற்றை தலைவலிக்கு உள்ளான விஷால் அதற்காக பல பழக்கங்களுக்குள் சென்றார். அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானது என கூறியுள்ளார் அந்தணன்.

ஒரு காலத்தில் அவரது சண்டை காட்சிகளை பார்த்து விஜயகாந்தே பாராட்டிய நடிகராக விஷால் இருந்தார். அப்படிப்பட்ட நடிகரின் இந்த நிலை பலருக்குமே அதிர்ச்சியை அளித்துள்ளது.

மைக்கை கூட கையில் பிடிக்க முடியல… விஜயகாந்த் போல் மாறிய விஷால்.. என்ன காரணம்?

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். விஷால் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் வரவேற்புகள் இருந்து வருகின்றன.

முக்கியமாக விஷால் நடிக்கும் காமெடி திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூலை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு விஷாலுக்கும் வாய்ப்புகள் என்பது அதிகரிக்க தொடங்கியது.

ஆனால் சமீபக்காலமாகவே விஷால் பேட்டிகளில் கலந்துக்கொள்ளும்போது நிதானமில்லாமல் பேசுவதை பார்க்க முடிந்தது. பெரும்பாலும் பேட்டிகளில் அவர் பேசும்போது அவரது குரல் தடுமாறுவதை பலரும் கவனித்திருக்கலாம்.

ஆரம்பத்தில் பலரும் இதுக்குறித்து கூறும்போது விஷால் மது அருந்துவிட்டு வந்திருக்கலாம் என கூறினர். ஆனால் உண்மையில் விஷால் மது எதுவும் அருந்துவிட்டு வரவில்லை. ஏனெனில் சமீபத்தில் மதகஜ ராஜா திரைப்படத்தின் வெளியீட்டிற்காக பேச வந்திருந்தார் விஷால்.

அப்போது அவர் கையில் மைக் வைத்திருந்தப்போது கை நடுங்குவதை பார்க்க முடிந்தது. மேலும் குரலிலும் தடுமாற்றம் இருந்தது. இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

12 வருடம் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..! அந்த பழைய சந்தானத்தை பார்க்க ரெடியா?.

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அதிக வரவேற்புக்கு நடுவே உருவான திரைப்படம்தான் மத கஜ ராஜா. மதகஜராஜாவில் கதாநாயகனாக விஷால் நடித்தார்.

கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் காமெடி நடிகனாக சந்தானம் நடித்திருந்தார். இந்த படம் எடுக்கப்பட்டு 12 வருடங்கள் ஆன பிறகும் கூட இன்னமும் திரைக்கு வராமல் இருந்து வருகிறது.

ஆனால் சுந்தர் சி இந்த திரைப்படம் குறித்து நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்கனவே உருவாக்கி இருந்தார். சுந்தர் சி தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை எடுப்பதில் பிரபலமானவர் என்பது அனைவருமே அறிந்த விஷயம்.

அவர் இயக்கிய காமெடி திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன. ஆனால் சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறும்பொழுது அவர் எடுத்த காமெடி திரைப்படங்களிலேயே உச்சபட்ச காமெடி படம் என்றால் அது மத கஜராஜா தான் என்று கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் ஏன் இன்னமும் திரைக்கு வராமல் இருக்கிறது என்று பலரும் கவலையில் இருந்தனர். அந்த படத்தில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனை தான் படம் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் என்று எல்லாம் பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் வருகிற பொங்கலுக்கு மதகஜராஜா திரைக்கு வர இருக்கிறது 10 வருடங்களுக்கு முன்பு காமெடியனாக நடித்து வந்தார் நடிகர் சந்தானம் அதனால் அந்த திரைப்படத்திலும் அவர் காமெடி நடிகராகதான் நடித்திருக்கிறார்.

இப்பொழுது சந்தானத்தை அப்படி காமெடி நடிகராக பார்க்க முடியவில்லை ஏனெனில் அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கிவிட்டார். எனவே ஒரு காமெடி திரைப்படமாக மத கஜ ராஜா முக்கியமான படமாக மாறி இருக்கிறது. இந்த பொங்கலில் படங்களுக்கிடையே இருக்கும் போட்டியில் மதகஜ ராஜா முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு பெண் கேட்டு சென்ற நடிகர்.. யார் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகையாக இருந்து வருகிறார். ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் கீர்த்தி சுரேஷ். அதற்கு பிறகு அவருக்கு தொடரி, பைரவா என தொடர்ந்து பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் அந்த சமயத்தில் அவருடைய நடிப்பு குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் இந்த கலங்கத்தை துடைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மீண்டும் பிரபலமடைந்தார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா மாதிரியான திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன.

keerthy suresh

திருமணம் செய்ய நினைத்த பிரபலம்:

கத்தி திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக் திரைப்படமான பேபி ஜான் திரைப்படத்தில் இவர்தான் சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் இவர் அதிக கவர்ச்சியாக நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது. சீக்கிரத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில் அவரை குறித்த சுவாரஸ்யமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சண்டக்கோழி 2 திரைப்படத்தில் இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு நடிகர் விஷால் இவரை திருமணம் செய்துக்கொள்ள நினைத்துள்ளார்.

இதனையடுத்து இயக்குனர் லிங்குசாமி மூலமாக தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே பல வருடங்களாக ஒரு நபரை காதலித்து வருவதாக கூறி அதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பார்ட்டியில் விஷால் பண்ணும் வேலை.. ஆண்ட்ரியா வீட்டில் டைமண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு.. சர்ச்சை கிளப்பும் பிரபலம்.!

சினிமாவை பொறுத்தவரை நாம் பார்க்கும் சினிமா என்பது வேறு உண்மையில் சினிமா என்பது வேறு வகையாக இருக்கிறது. திரையில் மட்டுமே நாம் நடிகர்களை பார்த்து அதை வைத்து அவர்களை முடிவு செய்கிறோம்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் அப்படி இருப்பது கிடையாது. நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்கின்றனர். பொதுவாக மக்கள் வாழும் வாழ்க்கையில் இருந்து அது வேறுபட்டதாக இருக்கிறது.

அதிலும் முக்கியமாக நைட் பார்ட்டி எனப்படும் ஒரு கலாச்சாரம் சினிமாவில் உண்டு. இந்த நைட் பார்ட்டிகளில் மோசமான விஷயங்கள் நிறைய நடப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் பாடகி சுசித்ரா.

பிரபலம் வெளியிட்ட தகவல்:

சுசித்ராவை பொருத்தவரை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் இருக்கும் பல ரகசிய விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார். அப்படி பேசுவதால் நிறைய பின் விளைவுகளையும் அவர் சந்தித்து வருகிறார் இருந்தாலும் அவ்வாறு பேசுவதை அவர் நிறுத்துவது இல்லை.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பேசும்போது நைட் பார்ட்டி என்பது சினிமாவில் இரவு தொடங்கி மறுநாள் காலை வரை ஏழு முதல் எட்டு மணி நேரம் நடக்கிறது. இவ்வளவு நேரமும் அவர்கள் என்னென்ன செய்வார்கள் தெரியுமா? ஆரம்பத்தில் ஏதாவது சின்ன சின்ன உணவுகளை உண்பதில் துவங்கி பிறகும் அது அருந்திவிட்டு பெண்களோடு பழகுவது வரை அனைத்தும் நடக்கும்.

நடிகர் விஷால் நிறைய பெண்களை அழைத்து வந்திருக்கிறார். இப்படியான நைட் பார்ட்டிகள் மூலம்தான் நடிகைகள் பிரபலம் அடைகின்றனர் பெரும்பாலும் நடிகைகள் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு மிக விலை உயர்ந்த காரை வாங்கி வைத்திருக்கிறார்கள் என்றால் அப்பொழுதே நாம் முடிவு செய்துவிடலாம் இவர்கள் நைட் பார்ட்டிக்கு சென்று இருக்கிறார்கள் என்று.

ஆண்ட்ரியா மாதிரியான நடிகைகள் எல்லாம் வீட்டில் எப்படி வைர நெக்லஸ்கள் இத்தனை வைத்திருக்கிறார்கள் என்று கேளுங்கள் அப்பொழுது உண்மை தெரியும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் சுசித்ரா இதனால் சுசித்ராவின் இந்த பேட்டி வைரலாக துவங்கியிருக்கிறது.

 

சிம்பு,விஷால்,தனுஷ் மூன்று பேருக்கும் எதிராக திரும்பிய தயாரிப்பாளர் சங்கம்.. இனி அடுத்து படம் பண்ண முடியாது..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்து தற்பொழுது முன்னணி நடிகர்களாக மாறியிருப்பவர்கள் சிம்பு மற்றும் தனுஷ். ஆனால் தொடர்ந்து அவர்களால் சினிமாவில் சர்ச்சைகள் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் தனுஷை விட சிம்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகர் ஆவார். ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் படங்களுக்கு ஒழுங்காக நடிக்க கூட வரமாட்டார் சிம்பு என்று அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. அந்த அளவிற்கு மோசமாக இருந்தார் சிம்பு.

அதன் பிறகு அவருக்கும் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போன தருணம் உருவானது. அப்பொழுதுதான் சினிமாவை புரிந்து கொண்டார் சிம்பு. இந்த நிலையில் இப்பொழுது படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வந்து நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

simbu

சிம்பு தனுஷிற்கு வந்த பிரச்சனை:

சிம்பு தனுஷை பொருத்தவரை தனுஷ் நடிப்பதை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர்கள் இருவருமே தயாரிப்பாளர்களிடம் நிறைய பிரச்சனைகளை செய்வதாக கூறப்படுகிறது. முக்கியமாக நிறைய திரைப்படங்களில் நடிப்பதாக அட்வான்ஸ் தொகைகளை வாங்கிக்கொண்டு அதற்குப் பிறகு நடிக்காமல் இழுத்து அடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இன்னமும் நடிக்காமல் இருக்கிறார். இதனை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து ஏற்கனவே பிரச்சனை செய்திருந்தது. ஆனாலும் தனுஷ் கமிட்டான திரைப்படங்களில் நடிக்காமல் மீண்டும் மீண்டும் புதிய படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய 55 வது திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருந்தார் தனுஷ். இந்த நிலையில் தற்சமயம் அவருக்கு ரெட் கார்ட் அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். அதன்படி தனுஷ் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிய திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டுதான் ராஜ்குமார் பெரியசாமி திரைப்படத்தில் நடிக்க வேண்டும்.

அதேபோல சிம்பு மற்றும் விஷால் ஆகிய நடிகர்களும் ஏற்கனவே இருக்கும் கமிட்மெண்டுகளை முடித்துவிட்டுதான் புது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர் சங்கத்தினர்.

படப்பிடிப்பில் பலாரென்று அறைந்த விஷால்… கதறி அழுத நடிகை சமந்தா.. இவரோட இன்னொரு முகம் இதுதானா ?

Actor Vishal is one of the emerging actors in Tamil cinema. There was an incident where he scared the heroine while shooting for a film

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் விஷால். நடிகர் விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக அறிமுகமானவர் ஆவார்.

அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நடிகர் விஷாலை பொருத்தவரை பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்களைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

ஏனெனில் அவர் அதிக உயரத்துடன் இருப்பதால் அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு எளிதாக செட் ஆகி விடுகின்றன. இந்த நிலையில் படபிடிப்புகளில் ஏதாவது ஒரு காமெடி செய்து கொண்டிருப்பதை விஷால் வேலையாக வைத்திருக்கிறார்.

உண்மையை பகிர்ந்த ரோபோ சங்கர்:

இதை குறித்து விஷாலுடன் பணி புரிந்த ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இரும்புத்திரை திரைப்படம் வெளியான பொழுது வேண்டுமென்றே சமந்தாவை வம்பு இழுக்க நினைத்தார் விஷால். எனவே அவர் என்னிடம் வந்து அந்த நடிகை இருக்கும்பொழுது அவருக்கு பக்கத்தில் வந்து நீங்கள் நில்லுங்கள்.

நான் உங்களை அடிப்பேன் என்று என்னிடம் முன்பே சொல்லிவிட்டார். நானும் அதன்படியே போய் நின்றேன். உடனே எழுந்து என்னை பலார் என்று அறைந்தார் விஷால். பிறகு மதியம் எங்கே சென்றீர்கள் என்று கேட்டார்.

நான் உணவு சாப்பிட சென்றேன் என்று கூறினேன் உடனே இங்கு பல கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள் உங்களுக்கு சாப்பாடு தான் முக்கியமா என்று என்னிடம் சத்தம் போட்டார். நானும் கண்ணீர் விட்டு அழுவது போல நடித்தேன். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமந்தா இன்று மாலையே எனக்கு டிக்கெட் போடுங்கள்.

நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறினார் பிறகு சமந்தாவை கூப்பிட்டு இது சும்மா காமெடிக்காக செய்தது என்று சமாதானப்படுத்தினேன் என்று கூறியிருக்கிறார் ரோபோ சங்கர்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடைசி வார்னிங் கொடுத்த நடிகர் விஷால்.. இவ்வளவு டெரர் ஆயிட்டாரே!.

vishal: தமிழ் சினிமாவில் தற்போது பல சர்ச்சைகளை சிக்கி வருபவர் நடிகர் விஷால். பட ப்ரோமோஷனல் கலந்து கொள்ளும் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பல கருத்துக்களை கூறுவதன் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு அனுப்பி உள்ள நோட்டீஸ் குறித்து நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷால், தனுஷ், சிம்பு ஆகியோருக்கு ரெட் கார்ட் கொடுத்திருந்தது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் வார்னிங் கொடுத்துள்ளார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரெட் கார்ட் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்

தற்போது தயாரிப்பாளர்கள் அனைவரும் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகளை குற்றம் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதில் நடிகை நடிகர்கள் யாரும் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்வதில்லை. தயாரிப்பாளர்களின் நலனில்அக்கறை செலுத்துவதில் இல்லை என பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் தனுஷ், விஷால், சிம்பு உள்ளிட்டோருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

மேலும் நடிகர் தனுஷ் படம் எடுத்தால் தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகு தான் படத்தில் நடிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடிகர் விஷால் மீது குற்றச்சாட்டு

மேலும் நடிகர் சங்கத்தின் பணத்தை எடுத்து விஷால் செலவு செய்து விட்டதாகவும், அதை சரி செய்ய வேண்டியது அவரின் கடமை என்றும், சங்கத்தின் பணத்தை எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாமா? எதற்கு பொதுக்குழு என்று ஒன்று உள்ளது? அதற்கான உரிய விளக்கம் அவர் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதிலடி கொடுத்த நடிகர் விஷால்

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட விஷால் சமீபத்தில் என் பெயரை குறிப்பிட்டு பல அவதூறுகளை சுமத்தி சுமத்தி வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஸ்பெஷல் ஆடிட்டர் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னிடம் முறையாக எந்த ஒரு விளக்கமும் கேட்கப்படாத நிலையில், இப்படி ஒரு பொய்யான பத்திரிக்கை செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் நடிகர் சங்க தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, பொறுப்பாளர் அதில் செயலாளராக இருந்த திரு கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானங்களின்படி ஆயுள் கால காப்பீடு திட்டம், ஓய்வூதிய திட்டம், கல்வி உதவித்தொகை, திருமண திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

எந்தவிதமான தவறும் செய்யாத பட்சத்தில் என் மீது தீர்மானம் நிறைவேற்றியது ஏற்புடையது அல்ல. மேலும் நல உதவிகள் அனைத்தும் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் முறை கேடு உள்ளதாக சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பான விளக்கத்தையும், தெளிவையும் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். தாங்கள் நேரடி முடிவெடுத்து ஆதாரம் இல்லாமல் பழி சுமத்துவது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அறியப்படுகிறது.

மேலும் என்னை வைத்து படம் எடுக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏன் தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்த ஆலோசிக்க வேண்டும். என் மீது தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய சங்கத்தின் நிர்வாகிகள் இக்கடிதம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் என் மீது பழி சுமத்தி அனுப்பிய பத்திரிக்கை செய்தியை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்து இருக்கிறார்.

லெட்சுமி மேனனை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கு… பத்திரிக்கையாளரை தரக்குறைவாக பேசிய விஷால்!.

Vishal: சினிமாவை எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும், கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் ஒரு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நினைத்து பேசுவது. கதாநாயகிகளுடன் இயக்குனர் அல்லது தயாரிப்பாளரை இணைத்து பேசுவது போன்ற வசதிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும்.

சில சமயங்களில் படத்தில் நடிக்கும் நடிகைகள் உடன் நடிக்கும் சக நடிகர்களுடன் காதல் வயப்படுவது அல்லது இயக்குனருடன் காதல் வயப்படுவது, தயாரிப்பாளுடன் காதல் ஏற்படுவது போன்றவை நிகழும். ஆனால் இதனை சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்படி நாம் அதை வதந்தியாகவும், கிசுகிசுயாகவும் தான் பார்க்கப்படும்.

இதுபோன்று குறிப்பிட்ட சில நடிகர் நடிகைகளை மட்டும் நினைத்து பேசுவது சினிமாவில் வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய ஜோடிகளாக இருந்து வருபவர் லட்சுமிமேனன் மற்றும் விஷால்.

இருவரும் படத்தில் ஒன்றாக நடித்த காலத்திலிருந்து இருவரை பற்றிய விமர்சனங்களும், வதந்திகளும் அவ்வப்போது இணையதளங்களில் பரவி வந்தது. ஆனால் இதற்கு இரு தரப்பினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

தற்போது மீண்டும் இவர்களின் கிசுகிசுப்பு சமூக வலைத்தளங்களில் அதிகரித்து உள்ள நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர் விஷாலிடம் இதைப் பற்றி கேட்கும் பொழுது அவர் கோபப்பட்டு பேசிய நிகழ்வு தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

லட்சுமி மேனன்

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக கருதப்பட்டவர் லட்சுமிமேன். இவர் கேரளாவை பூர்விமாகக் கொண்டவர். தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்ததற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது வாங்கி இருக்கிறார். மேலும் கும்கி படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது பெற்றார்.

பத்திரிக்கையாளரை திட்டிய நடிகர் விஷால்

லட்சுமி மேனன் நடிகர் விஷாலுடன் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட இரு படங்களில் நடித்திருந்தார். பாண்டியநாடு படத்தில் நடிக்கும் போதே இருவரை பற்றிய கிசுகிசு வந்து கொண்டிருந்தது. ஆனால் இதற்கு இருதரப்பினரும் ஒன்றும் கூறவில்லை.

அதன் பிறகு மீண்டும் நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். அந்த படத்தில் லட்சுமி மேனன் தைரியமாக முத்தக் காட்சிகளில் நடித்திருப்பார். இது மேலும் இருவருக்கும் உள்ள வதந்திகளை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட விஷாலிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபமாக பதில் கூறியிருக்கிறார். அவரிடம் லட்சுமி மேனனை நீங்கள் காதலித்து பிறகு அவரை பிரேக்கப் செய்து விட்டதாகவும், இதனால் அவர் மீண்டும் கேரள திரும்பிச் சென்று அங்கு நடனம் கற்றுக்கொண்டு உள்ளதாகவும், தற்பொழுது அவர் பார்ப்பதற்கு குண்டாக உள்ளார் என கேள்வி கேட்டு உள்ளார்.

அதற்கு விஷால், லட்சுமிமேனை பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லை உங்களுக்கு. யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேணாலும் பேசலாம். ஆனால் அதற்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதை தாண்டி யாரும் பேசக்கூடாது என கூறினார். மேலும் உங்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கலாம். உங்களுக்கு பெண் மகள் இருக்கலாம். தங்கை இருக்கலாம். மனைவி இருக்கலாம். அவர்களெல்லாம் விட்டுவிட்டு மற்றவர்களை பேசுவதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என அவர் கூறினார்.

இவரைப் போன்ற ஆட்கள் எல்லாம் பூமிக்கு பாரமாக உள்ளார்கள். முதலில் அவர் ஒரு பெண்மணி அதன் பிறகு தான் அவள் கதாநாயகி. எனவே ஒரு பெண்ணை பற்றி அவளுடைய தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசுவது என்பது தவறான விஷயமாகும்.

மேலும் பேசுவதற்கு இடம் இருப்பதால் யாரைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் என நினைப்பது தவறு. மேலும் நான் காதலிப்பதாக இருந்தால் நான் நேரடியாகவே சொல்லி விடுவேன். எனவே இது போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்வது எனக்கு பிடிக்காது என அவர் தெரிவித்திருக்கிறார்.

இனி படத்தில் நடிக்க போவதில்லை!.. கதை கேட்பதை நிறுத்திய நடிகர் விஷால்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பு உண்டு எனக் கூறலாம்.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்தது. மேலும் விஷாலுக்கு அது ஒரு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்தது. செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால்.

அதற்குப் பிறகு அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அவரை வளர்த்து விட்டதில் ஹரி மற்றும் லிங்குசாமிக்கு முக்கியமான பங்கு உண்டு என்று கூறலாம். லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த சண்டக்கோழி படமும் ஹரி இயக்கத்தில் இவர் நடித்த தாமிரபரணி திரைப்படமும்தான்.

விஷால் எடுத்த முடிவு:

இவை இரண்டுமே இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படங்கள். அதற்குப் பிறகு வேறு எந்த திரைப்படமும் அவருக்கு அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.

இந்த நிலையில் ரத்தினம் திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களின் கதைகளை கேட்பதை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளாராம் விஷால். அதனால் விஷால் சினிமா துறையை விட்டுப் போகப் போகிறாரா என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆனால் உண்மையில் விஷால் அடுத்து அவரே இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படமான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை துவக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரையிலும் வேறு எந்த படத்திலும் அவர் கமிட் ஆவதாக இல்லை என்பதால் தற்சமயம் கதை கேட்பதை அவர் நிறுத்தி வைத்துள்ளாராம்.

மேலும் கதை கேட்பதற்காகவே ஒரு குழுவை அமைத்து வருகிறாராம் கார்த்தி. அந்த குழு தரும் முடிவை வைத்துதான் இனி திரைப்படங்களில் அவர் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தினாலேயே தற்சமயம் படங்களின் கதையை கேட்பதை நிறுத்தி வைத்திருக்கிறார் நடிகர் விஷால்.

தயவு செஞ்சு என் முன்னாடி அந்த வார்த்தையை சொல்லாதீங்க!.. நிருபரிடம் கடுப்பான விஷால்!..

தமிழ் சினிமா நடிகர்களில் மிக பிரபலமானவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்து இப்போது வரை விஷால் படத்தில் அதிகமாக அவர் நகைச்சுவை செய்வதை பார்க்க முடியும்.

அது அவருக்கு ஓரளவு செட் ஆகிறது என்றே கூறலாம். சினிமாவிற்கு வந்த ஆரம்பம் முதலே அரசியல் மீது ஆர்வம் காட்டி வருகிறார் விஷால். சமூகத்தில் சம காலத்தில் நடக்கும் அரசியல் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார் விஷால்.

vishal1

இதற்கு நடுவே அவருக்கு கடன் தொடர்பாக இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் தற்சமயம் ரத்னம் திரைப்படம் வெளியாகும்போது கூட சில பிரச்சனைகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசிய தொகுப்பாளர் ரமணநந்தா என்னும் நபரின் கடன் பிரச்சனையை பேசியதும் விஷால் கொஞ்சம் கோபமாகிவிட்டார். வாழ்க்கையில் நான் சில கெட்ட வார்த்தைகள், பெயர்களை எல்லாம் திரும்ப கேட்கவே கூடாது என நினைக்கிறேன்.

எனவே அதை பற்றி பேசாதீங்க வேற ஏதாவது பேசலாம் என பேசியிருக்கிறார்.

அண்ணாமலையாக களம் இறங்கும் பிரபல நடிகர்!.. தமிழில் தயாராகும் பயோபிக் திரைப்படம்!. என்னப்பா சொல்றீங்க!.

தலைவர்களின் கதைகளை திரைப்படமாக இயக்குவது என்பது பல காலங்களாகவே சினிமாவில் இருந்து வருகிறது. காந்தி அம்பேத்கர் மாதிரியான தலைவர்கள் குறித்து வட இந்தியாவில் திரைப்படங்கள் வந்துள்ளன.

அதே போல தமிழில் காமராஜர், பெரியார் மாதிரியான தலைவர்களை வைத்து திரைப்படங்கள் வந்துள்ளன. பொதுவாக இந்த மாதிரி தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்போது அது பார்ப்பதற்கு சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்காது.

இந்த நிலையில் தற்சமயம் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவதற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டுள்ளதாம். அண்ணாமலை முதலில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அதன் பிறகு அரசியலின் மீது ஈடுபாடு கொண்டு அரசியலுக்கு வந்துவிட்டார்.

எனவே அதையே திரைக்கதையே அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முதல் பாதியில் அண்ணாமலையின் ஐ.பி.எஸ் வாழ்க்கையான போலீஸ் வாழ்க்கையை வைத்து கதை நகர்கிறதாம். அதன் பிறகு அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையை வைத்து படத்தின் இரண்டாம் பாதி நகர்கிறதாம்.

இந்த படம் ஒரு கமர்ஷியல் திரைப்படம் போல சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அண்ணாமலையாக நடிகர் விஷால் நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.