என் பங்குக்கு நானும் ஏ.ஐ போட்டோ விடுறேன்! – ஆண்ட்ரியாவின் அனிமே போட்டோக்கள்?

பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா. பாடகியாக சினிமாவிற்கு வந்தாலும் கூட திரைப்படங்களில் நடிப்பது ஆண்ட்ரியாவின் வெகு நாள் கனவாக இருந்தது.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து இவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் கிடைத்தது.

அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார் ஆண்ட்ரியா. நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என வெகு நாளாக ஆசைப்பட்டார் ஆண்ட்ரியா.

2021 இல் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் அந்த ஆசையும் ஆண்ட்ரியாவிற்கு நிறைவேறியது. தற்சமயம் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலரும் அனிமேஷன் புகைப்படம் வெளியிட்டு வந்தனர். நடிகை ஆண்ட்ரியாவும் கூட அந்த மாதிரியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh