கருப்பு புடவையில் கிறங்க வைக்கும் தர்ஷா குப்தா புகைப்படங்கள்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து கொண்டிருந்தவர் நடிகை தர்ஷா குப்தா. நாடகங்களில் மிகவும் கடினமான காட்சிகளை கூட ரசிகர்களுக்காக நடித்தார். ஆனால் நாடகத்தில் நடித்த வரை அவருக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திரைத்துறையில் எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என்பது தர்ஷா குப்தாவின் ஆசையாக இருந்தது. தொடர்ந்து சினிமா துறையிலும் முயற்சி செய்து வந்தார்.

இந்த நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பலருக்கும் ஒரு பழகிய முகமாக மாறினார் தர்ஷா குப்தா.

தொடர்ந்து இன்ஸ்டாவில் அவரது புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இதையடுத்து இவருக்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்தது. மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்சமயம் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தர்ஷா.

Refresh