ஏக்கர் ஏக்கரா இருந்த நிலமெல்லாம் எங்கே!.. ரோட்டில் நிற்கும் பாலய்யாவின் பேரன்!.. அட கொடுமையே!..
Tamil cinema comedy actor balaiah : தமிழில் பிரபலமான காமெடி நடிகர்கள் பலர் உண்டு. இப்போதை விடவும் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்தில் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தனர். அதில் தங்க வேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், பாலய்யா, சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற எக்கச்சக்கமான நடிகர்கள் இருந்தனர்.
அதில் நடிகர் பாலய்யா முக்கியமானவர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் பாலய்யா, நாகேஷ், தங்கவேலு என மூன்று பெரும் காமெடியன்கள் நடித்திருப்பார்கள். அதில் பாக்கி இருவரையும் தாண்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்த்திருப்பார் பாலய்யா.
பாலய்யா தனக்கு காசு சேரும்போதெல்லாம் அதை சென்னையில் சொத்தாக வாங்கி போட்டு வைத்துள்ளார். ஏனெனில் சென்னையில் நிலத்தின் மதிப்பு நாள் ஆக ஆக ஏறிக்கொண்டே செல்லும் என அவருக்கு தெரிந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் மட்டுமே ஏக்கர் கணக்கில் அவருக்கு இடம் இருந்துள்ளது.
இப்படி இருக்கும்போது இப்போது பாலய்யாவின் பேர பிள்ளைகள் எல்லாம் சென்னையில் தங்களுக்கென சொத்து எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக பிரபல நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கு என்ன காரணம் என பார்க்கும்போது சந்திரபாபு போலவே சொத்தை சேர்த்து வைக்க தெரியாமல் அனைத்தையு பாலய்யாவே அழித்துவிட்டாராம். அதனால் தற்சமயம் அவரது சந்ததியினர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.