அதுக்குன்னு இது மாடர்ன் ஓவர்லோட்.. கிரங்கடிக்கும் ரோஷினி!.

சீரியல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ரோஷினி. இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஆள் நடிக்க துவங்கிவிட்டார்கள்.

அவருடைய சிரிப்பிற்காகவே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விஜய் டிவியில் சீரியலில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு மற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக கிடைக்க துவக்கியது.

டிவி நிகழ்ச்சிகளில் வரவேற்பு:

மிகவும் நகைச்சுவையான ஆள் ரோஷினி என்பது பலரும் அறியாத விஷயமாக இருந்தது. இந்த நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் ரோஷினி கலந்து கொண்ட பொழுது அவர் அதிகமாக காமெடி செய்து வந்தார். அந்த நிலையில் அந்த ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டானார்கள்.

அதனை தொடர்ந்து அவரை பிரபலப்படுத்த முடிவு செய்தது விஜய் டிவி எனவே குக் வித் கோமாளி சீசன் 2வில் ரோஷினிக்கு வாய்ப்பை கொடுத்தது விஜய் டிவி. அதே போல குக் வித் கோமாளி சீசன் 2வில் ரோஷினி நிறைய நகைச்சுவைகளை செய்ய தொடங்கினார்.

திரைப்பட வாய்ப்பு:

அவருக்கு வரவேற்கும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் டிவியில் மட்டுமின்றி மற்ற டிவி சேனல்களிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

தற்சமயம் சூரி மற்றும் சசிகுமார் நடித்து வெளியாகியிருந்த கருடன் திரைப்படத்தில் கூட ரோஷினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துணை நடிகையாக இருப்பது கடினம் எனவே மாடர்னுக்கு மாறிய ரோஷினி சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அவை அனைத்தும் தற்சமயம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகின்றன.