வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

முதல் திருமணத்திற்கு முன்பிருந்தே சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் இந்த நடிகை.  இந்த நிலையில் அந்த வாரிசு நடிகர் மீது காதல் கொண்டு அவரை திருமணமும் செய்தார். ஆனால் சில வருடங்கள் கூட இவர்களது திருமண பந்தம் நீடிக்கவில்லை. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அந்த ஸ்டார் நடிகரை பொறுத்தவரை வீட்டுக்கு வரும் பெண்கள் அடக்க ஒடுக்கமாக குடும்பம் குட்டி என்று இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஆனால் வந்த மருமகளோ திருமணத்திற்கு பிறகும் கூட நடிகர்களோடு நெருக்கமாக நடிப்பது என இருந்துள்ளார்.

மேலும் சினிமாவில் இவரை பற்றி சில கிசு கிசுக்கள் இருந்து வந்தன. இதுதான் நடிகையின் விவாகரத்துக்கு காரணமாக இருந்து வந்தது. ஆனாலும் நடிகை நாகரிகம் கருதி தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து எந்த பேட்டியிலும் பேசாமல் இருந்து வந்தார்

இந்த நிலையில் ஸ்டார் நடிகர் வேறு ஒரு நடிகையை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் இதுவரை அமைதியாக இருந்து வந்த நடிகை இப்போது வாயை திறக்க துவங்கியுள்ளார். தனது பழைய கணவனை பற்றி அடிக்கடி பேட்டிகளில் பேசி வருகிறாராம்.

இதனால் தற்சமயம் பெருமை மிகு ஸ்டார் நடிகர் இதுக்குறித்து கவலை கொண்டுள்ளாராம். மேலும் அவர் இனி அக்கட தேசத்து சினிமாவில் இந்த நடிகையை நடிக்க விட கூடாது என்றும் முடிவெடுத்துள்ளராம்.

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version