Connect with us

வடிவேலு மட்டும் இல்லன்னா இந்நேரம் கூலி வேலை பார்த்துட்டு இருந்திருப்போம்! – முக்கிய காமெடி நடிகர் அளித்த பேட்டி!

Cinema History

வடிவேலு மட்டும் இல்லன்னா இந்நேரம் கூலி வேலை பார்த்துட்டு இருந்திருப்போம்! – முக்கிய காமெடி நடிகர் அளித்த பேட்டி!

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவிற்கு இணையான ஒரு நடிகரே கிடையாது என கூறலாம் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனது பங்கை கொடுத்த மிக சிறந்த கலைஞன் வடிவேலு.

அதிகமான வடிவேலுவின் திரைப்படங்களை பார்த்தால் ஒரு குழு அவருடன் எப்போதும் இருப்பதை பார்க்கலாம். குறிப்பிட்ட சிலர் வடிவேலுவுடன் தொடர்ந்து நடித்து வருவதை பார்க்க முடியும். இவர்கள் எல்லாம் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என வந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பவர்கள்.

நடிகர் வடிவேலு இவர்களுக்கு வாய்ப்பளித்து ஒரு அங்கிகாரத்தை அளித்தவர். அப்படியான ஒரு நபர்தான் டெலிபோன் ராஜ் எனும் நடிகர். ஒரு ஓட்டல் காமெடியில் அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என கூறும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

வடிவேலுவுடன் மட்டும் இவர் கிட்டத்தட்ட 20 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஒரு பேட்டியில் இவர் கூறும்போது “என்னை மாதிரி பலருக்கு வடிவேலு வாய்ப்பு அளித்துள்ளார். 200க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளேன். அப்போதெல்லாம் எனக்கு கிடைக்காத அங்கீகாரம், வடிவேலுவுடன் படம் நடித்தபோது கிடைத்தது.

வடிவேலு ஒரு நல்ல மனிதர். அவர் இல்லாமல் இருந்திருந்தால் என்னை போல இருக்கும் பல காமெடியர்கள் இப்போது தோன்றி இருக்கவே மாட்டோம். எல்லாம் அவரவர் ஊர்களில் எதாவது கூலி வேலையை செய்து பிழைப்பை நடத்திக்கொண்டிருப்போம் என அவர் கூறியுள்ளார்.

POPULAR POSTS

samuthrakani kamalhaasan
vijay ajith
ar rahman
sivaanghi
kamalhaasan gautham menon
sathyaraj arjun
To Top