தளபதி 68 படம் பேர் கன்ஃபார்ம்… இதுவும் இங்கிலீஸ் பேரா!..

Thalapathy 68 : தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு நாட்கள் செல்ல செல்ல வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் இந்த வருடம் டாப் பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்பட லிஸ்ட்டில் சேர்ந்தது. இதற்கு நடுவே ரஜினி விஜய்க்கு நடுவே காக்கா கழுகு பிரச்சனை சென்று கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குகிறார். வெங்கட் பிரபு படம் என்பதால் இந்த படம் வழக்கமான சண்டை படமாக இல்லாமல் கொஞ்சம் ஜாலியான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது தளபதி 68. எனவே இந்த படத்திற்கு ஆங்கிலத்தில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பெயர் என்னவாக இருக்கும் என பல அனுமானங்களை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

பாஸ் என்பதுதான் படத்தின் டைட்டிலாக இருக்கும் என்று பலரும் யூகித்து வந்த நிலையில் அது படத்தின் பெயர் கிடையாது. ஏனெனில் தமிழில் ஏற்கனவே சிவாஜி த பாஸ், பாஸின் தலைவன் போன்ற தலைப்பில் படங்கள் வந்துவிட்டன என கூறப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் பெயர் G.O.A.T (Greatest of  All Time) என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போன படமான லியோ திரைப்படமும் ஆங்கில தலைப்பாக இருந்த நிலையில் இந்த பெயரும் ஆங்கில தலைப்பாகவே அமைந்துள்ளது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version