நடித்த படத்தில் சாய் பல்லவி செய்த சம்பவம்.! அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான்.!

நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார் பெரும்பாலும் நடிகைகள் அழகின் மூலமாக மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை பிடித்து விடுகின்றனர். அப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளின் மார்க்கெட் என்பது சீக்கிரத்திலேயே உயர்ந்து விடுகிறது.

அப்படிதான் இப்பொழுது சாய் பல்லவியின் மார்க்கெட் உயர்ந்து இருக்கிறது அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு முக்கிய கதாபாத்திரம் இருந்ததோ அதே அளவிற்கு முக்கியமான கதாபாத்திரம் சாய்பல்லவிக்கும் இருந்தது.

sai pallavi

மேலும் சாய் பல்லவியின் அபார நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தெலுங்கில் தற்சமயம் நாகசைதன்யா நடித்த தண்டேல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சாய் பல்லவி.

இந்த திரைப்படம் ஆரம்ப கட்டத்தில் அதிக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் கூட தற்சமயம் 100 கோடிக்கு ஓடி வெற்றியை கொடுத்திருக்கிறது இந்த திரைப்படம். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும்பொழுது நடிகை சாய் பல்லவிக்காகதான் இந்த படம் ஓடியிருப்பதாக கூறுகின்றனர்.

எப்படி ஒரு நடிகருக்கு ரசிகர் பட்டாளம் இருக்குமோ அந்த ரசிகர் பட்டாளம் மூலமாக படத்திற்கு வெற்றி கிடைக்குமோ அதேபோல சாய்பல்லவிக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால் தென்னிந்தியாவில் இப்பொழுது நயன்தாராவை விட அதிகமான ரசிகபட்டாளத்தைக் கொண்ட ஒரு நடிகையாக சாய்பல்லவி இருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

எனவே சின்ன பட்ஜெட் படத்தில் சாய் பல்லவி நடித்தால் கூட சாய்பல்லவிக்காக அந்த படம் ஓடும் என்றும் பேச்சுக்கள் இருக்கிறது. இதனால் சாய் பல்லவியின் சம்பளமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.