Latest News
டைம் ட்ராவல் படம்தான் தளபதி 68.. கேட்கும்போதே நல்லா இருக்கே!..
விஜய் நடித்த லியோ படம் தற்சமயம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஏழு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூலை கொடுத்துள்ளது லியோ.
தமிழக திரைப்படங்களில் ஒரு வாரத்தில் அதிகமாக ஓடிய திரைப்படத்தில் தற்சமயம் இரண்டாவது இடத்தில் லியோ திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் உயர்தர படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 68.
இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். நடிகர் மோகன் இந்த படத்தில் வில்லனாக திரும்ப களம் இறங்குகிறார். மேலும் நடிகர் பிரசாந்த், லைலா போன்றோர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் டைம் டிராவல் திரைப்படம் என்று ஒரு பக்கம் செய்திகள் கசிந்துள்ளன.
மாநாடு திரைப்படம் டைம் லூப் முறையில் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது இதனைத் தொடர்ந்து கால பயணத்தை கதை களமாக கொண்டு விஜய்யை வைத்து எடுக்கும் முதல் திரைப்படமாக தளபதி 68 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் செய்த சிறு பிழையால் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை கொண்டு படத்தின் கதை செல்லும் என்று யூகிக்கப்படுகிறது டைம் டிராவல் திரைப்படமாக இருக்கும் பட்சத்தில் படத்தில் இரண்டு விஜய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன என்று கூறப்படுகிறது.