கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்கியாச்சு..! கான்ஜிரிங் கடைசி பாகத்தில் சம்பவம் செய்த இயக்குனர்.!

ஹாலிவுட்டில் மிக பிரபலமான படங்களில் முக்கியமான ஹாரர் திரைப்படமாக கான் ஜிரிங் படங்கள் இருக்கின்றன. தமிழில் காஞ்சனா, அரண்மனை திரைப்படங்கள் போலவே ஹாலிவுட்டில் இந்த படங்கள் வலம் வந்து கொண்டுள்ளன.

வாரன் தம்பதியினர் என்கிற பேய் ஓட்டும் தம்பதியினரை மையமாக வைத்து இந்த கதைகள் செல்லும். அவர்கள் பேய் ஓட்டும் நபர்கள் மட்டும் மாறுபடுவார்கள். பேய்களும் மாறுபடும். கிட்டத்தட்ட 10 வருடங்களாக வந்து கொண்டிருந்த கான் ஜிரிங் படங்களை இயக்குனர் ஜேம்ஸ் வான் இயக்கி வந்தார்.

கான் ஜிரிங் படங்களில் சில படங்களை தயாரித்தும் சில படங்களை இயக்கியும் இருக்கிறார் ஜேம்ஸ் வான். இந்த நிலையில் கான் ஜிரிங் படத்தின் இறுதி பாகமான The Conjuring: Last Rites படத்தின் கதையை எழுதி தயாரித்துள்ளார் ஜேம்ஸ் வான்.

இதுவரை வந்த கான் ஜிரிங் திரைப்படங்களில் இது வேறு விதமான திரைப்படமாக இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இதன் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ் வான்.

 

 

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version