பட ஷெட்டில் விஜய்யை பேர் சொல்லி கூப்பிடும் ஒரே ஆள் அந்த பாப்பாதான்!.. நடிப்பில் தளபதிக்கு டஃப் கொடுத்த சிறுமி!..
தற்சமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
இந்தியா முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தாலும் கூட வட இந்தியா பக்கம் இந்த படத்திற்கு பெரிதாக விளம்பரம் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. சாதாரணமாகவே விஜய்க்கு தென் இந்தியா பக்கம் விளம்பரம் தேவையில்லை என்றாலும் வட இந்தியா பக்கம் தேவை.
இருந்தாலும் தென்னிந்தியா பக்கம் விளம்பரம் கொடுப்பதற்காக லோகேஷ் கனகராஜ் பல youtube தளங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் பேசும்பொழுது விஜய்யின் மகளாக நடித்த அந்த சிறுமியை பற்றி கூறியிருந்தார். அந்த சிறுமி விஜய்யை விஜய் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம்.
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் எந்த ஒரு காட்சியையும் ஒரே ஷாட்டில் நடித்து விடுவார், அதை பார்த்து படப்பிடிப்பு தலைமை அதிர்ச்சிக்குள்ளானது அந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க கூடியவர் என்று அந்த சிறுமியை பற்றி லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். மேலும் படத்தை பார்க்கும் பொழுது அவரின் நடிப்பு என்னவென்று உங்களுக்கு தெரியும் என்றும் லோகேஷ் கனகராஜ் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.