லியோ தயாரிப்பாளரை சும்மா விட கூடாது!.. ஒன்றினையும் திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள்!..

தற்சமயம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வீடியோ விஜய் நடித்த லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.

இதனை அடுத்து படம் வெளியாவதற்கு முன்பே அதிகமாக டிக்கெட் புக் ஆனது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படம் நல்ல வசூலை கொடுத்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அதன் வசூல் குறைந்து விட்டது.

இதற்கு நடுவே திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே லியோ திரைப்படத்தின் பொழுது ஒரு பிரச்சனை உண்டானது. சாதாரணமாக திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் 35 சதவீத லாபம் திரையரங்குகளுக்கும் மீதம் 75% லாபம் தயாரிப்பாளர்களுக்கும் செல்லும் என கூறப்படுகிறது.

ஆனால் லியோ திரைப்படத்திற்கு 20 சதவீதம் தான் திரையரங்குகளுக்கு வழங்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறியதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து ரோகிணி திரையரங்கம் இந்த படத்தை வெளியிட முடியாது என்று நோட்டீஸ் போர்டு வைத்தது பிறகு பேசி அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது.

இதனை அடுத்து எதிர்காலத்திலும் திரும்ப 20% பங்கீடு குறித்து தயாரிப்பாளர்கள் வந்து நிற்க கூடாது என்று கருதிய திரையரங்க உரிமையாளர்கள் இன்று அதற்காக ஒரு மீட்டிங் போட இருப்பதாக கூறப்படுகிறது.