இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக பட்ஜெட்டில் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
ஆனால் முந்தைய கால கட்டங்களில் சினிமாவில் பட்ஜெட் என்பதே மிகவும் குறைவாக இருந்தது. சில லட்சங்களிலேயே திரைப்படங்களை எடுக்கும் வழக்கம் தான் அப்பொழுது இருந்தது.
ஏ.வி.எம் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அப்பொழுது வளர்ந்து வந்ததற்கு இதுவும் முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் அப்போது ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்த தோட்டா தரணி முந்தைய காலகட்டங்களில் கமல் திரைப்படத்தில் பணிபுரிந்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது கமலஹாசனை வைத்து இயக்கிய ஒரு திரைப்படத்திற்கு வியாபார சந்தை செட் போடுவதற்காக என்னை அழைத்திருந்தனர்.
அங்கு சென்ற பொழுது மறுநாளுக்குள் மொத்தமாக பல கடைகள் கொண்ட ஒரு மார்க்கெட்டை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். நானும் சரி என்று பார்த்துவிட்டு ஒரு முப்பதாயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறினேன்.
ஆனால் பணத்தின் தயாரிப்பாளர் இது சின்ன பட்ஜெட் பணம் அவ்வளவெல்லாம் தர முடியாது என்று கூறினார். மேலும் ஒரு நாளுக்குள் எப்படி இந்த சந்தையை உருவாக்குவது என்கிற கேள்வியும் எனக்குள் இருந்தது.
எனவே மறுநாளுக்குள் மூங்கில் கம்புகளை நட்டு அதன் மீது துணிகளை போட்டு சிம்பிளாக கடைகளை உருவாக்கினேன். பிறகு மார்க்கெட்டில் பேசி காய்கறிகளையும் கொண்டு வந்து இறக்குமதி செய்தேன். மொத்தமாக அந்த மார்க்கெட் போடுவதற்கு ஆன செலவு அப்பொழுது 2000 ரூபாய் தான் என்று கூறி இருக்கிறார் தோட்டா தரணி.