பிரபலமாக இருக்கும் தொழிலதிபர்களில் மிக முக்கியமானவராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். தொடர்ந்து சினிமா பிரபலங்களில் இருந்து கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் வரை பலவற்றிற்கும் சமைத்துக் கொடுக்கும் சமையல் வல்லுநராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சினிமாவின் மீது ஈடுபாடு கொண்டு அவர் மெஹந்தி சர்க்கஸ் என்கிற ஒரு திரைப்படத்தை தயாரித்து அதில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார்.
ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டதன் மூலமாக மாதம்பட்டி ரங்கராஜ் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார்.
அவரது சொந்த வாழ்க்கை குறித்து ஏற்கனவே நிறைய கேள்விகள் இருந்து வந்தது. தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா என்னும் ஆடை வடிவமைப்பாளர் உடன் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பில் இருந்து வந்ததாக பேச்சுகள் எல்லாம் இருந்து வந்தன.
ஆனால் அது குறித்து ஜாய் கிரிஸில்டாவோ அல்லது மாதம்பட்டி ரங்கராஜோ எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாம் திருமணம் செய்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அது குறித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.