நெட்ஃப்ளிக்ஸில் தமிழில் வந்த டாப் 5 வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ!..

இந்தியாவிலேயே கொஞ்சம் அதிகமாக பணப்புழக்கம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. எனவேதான் அனைத்து ஓ.டி.டி நிறுவனங்களும் தமிழ் ஆடியன்ஸ் மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர்.

இதனையடுத்து ஜி 5, அமேசான் ப்ரைம், சோனி லிவ் போன்ற நிறுவனங்கள் தமிழ் மக்களுக்காக சீரிஸை எடுப்பது மேலும் சீரிஸ்களை டப்பிங் செய்வது போன்ற வேலையை செய்து வந்தனர். இந்த போட்டியில் திடீரென நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் குதித்தது.

உள்ள ஓ.டி.டி நிறுவனங்களிலேயே அதிக வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களை கொண்டுள்ள நிறுவனமாக நெட்ப்ளிக்ஸ் உள்ளது. தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி நெட்ப்ளிக்ஸ் டப்பிங் செய்த சில வெப் சீரிஸ்கள் இங்கு பிரபலமாகிவிட்டன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

மனி ஹையஸ்ட்டு (Money Heist):

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சீரிஸ்களில் மணி ஹையஸ்ட் முக்கியமான சீரிஸாகும். ப்ரொஃபசர் என்கிற முக்கிய கதாபாத்திரம் இருக்கிறார் அவர் ஒரு கூட்டணியை உருவாக்கி வங்கியில் பணத்தை திருடுவதே இந்த சீரிஸின் கதையாகும்.

மொத்தமாக 5 சீசன்கள் வந்துள்ள இந்த சீரிஸின் 3 ஆம் சீசன் வந்தப்போதே தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதனை தொடர்ந்து அந்த சீரிஸ் முழுவதுமாக தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.

வெட்னஸ்டே:

ஆடம் ஃபேமிலி என்கிற படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட தொடர்தான் வெட்னஸ்டே. சூனியக்காரிக்கும் சாதாரண மனிதனுக்கும் பிறந்த வெட்னஸ்டே ஆடம்ஸ் என்னும் பெண் இரத்த காட்டேரிகள், ஓநாய் மனிதர்கள் போன்றவர்கள் படிக்கும் வித்தியாசமான பள்ளியில் சேர்க்கப்படுகிறாள். அங்கு நடக்கும் மர்மங்களை அவள் கண்டறிவதே இந்த சீரிஸின் கதையாகும்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்:

ஹாக்கின்ஸ் என்னும் நகரில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸ் ஆகும். கதைப்படி அங்கு இருக்கும் நான்கு சிறுவர்கள், லெவன் என்கிற சிறுமியை சந்திக்கின்றனர். அந்த சிறுமிக்கு அபரிவிதமான சக்திகள் இருக்கின்றன.

அவள் ஒரு ஆய்வகத்தில் இருந்து தப்பித்து வந்து இந்த 4 நண்பர்களுடன் தோழியாகிறாள். அதே சமயம் ஹாக்கின்ஸ் நகரில் வித்தியாசமான மிருகங்கள் உலாவுகின்றன. அவற்றையெல்லாம் இந்த சிறுவர்கள் எப்படி சரி செய்கின்றனர் என்பதே கதையாக உள்ளது.

ஸ்குவிட் கேம்:

பணத்தேவை உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கோடி கணக்கில் பரிசுத்தொகை அறிவித்து நடத்தப்படும் நிகழ்ச்சிதான் ஸ்குவிட் கேம். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்களில் ஒவ்வொரு விளையாட்டிலும் பலர் இறந்துவிடுவார்கள். இறுதியில் உயிரோடு இருப்பவர் பரிசு தொகையை பெறுவார்.

ஆனால் இந்த விளையாட்டில் எந்த கட்டத்திலும் விளையாட்டை விட்டு விலக விளையாடுபவர்களுக்கு உரிமை உண்டு. ஆனாலும் பணத்தேவை இருப்பதால் அவர்கள் அதில் விளையாடுகின்றனர். அதில் கதாநாயகன் எப்படி ஜெயிக்க போகிறான் என்பதே கதையாக உள்ளது.

ஹண்ட் ஃபார் வீரப்பன்:

தமிழ்நாட்டில் இருந்த மோசமான பயங்கரவாதிகளில் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். உலகிலேயே இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் மட்டுமே யானைகள் அதிகமாக உள்ளன. ஆனால் சத்யமங்கலம் காடுகளில் வீரப்பன் யானை தந்தங்களுக்காக எக்கச்சக்கமான யானைகள் கொன்றார். சில வனத்துறை அதிகாரிகளையும் கொன்றார்.

எனவே வீரப்பன் என்னவெல்லாம் செய்தார் அதற்கு போலீஸ் எடுத்த எதிர்தாக்குதல்கள் அனைத்தையும் வீரப்பன் மற்றும் போலீஸ் என இருப்பக்கம் இருந்தவர்களையும் விசாரித்து ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது ஹண்ட் ஃபார் வீரப்பன் தொடர்