வரிசையாக குவியும் பட வாய்ப்புகள் ? – தல தளபதியுடன் த்ரிஷா

பொன்னியின் செல்வம் திரைப்படம் பல நட்சத்திரங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் நடிகை த்ரிஷாவிற்கு இந்த படம் பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் த்ரிஷா. 40 வயதை அடையும் நிலையில் தமிழ் நடிகைகள் கதாநாயகியாக நடிப்பது என்பது தென்னிந்திய சினிமாவில் சற்று கடினமான காரியமாகும்.

ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருக்கும் மார்கெட் கதாநாயகிகளுக்கு இருந்ததில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்தில் விஜய்க்கு மனைவியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது.

அதே போல துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிகக் இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Refresh